Buy Hindutva Pathippagam(இந்துத்துவ பதிப்பகம்) books online » Page - 1
Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.
சென்ற பல வருடங்களாகவே பதிப்பகத் துறையில் இந்துக்களுக்கு – இந்து மதத்திற்கு – இந்துப் பண்பாட்டிற்கு எதிரான குரல்கள் தமிழ்நாட்டில் பலமாகவே ஒலித்துக்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெறும் பல பதிப்பகங்களின் புத்தகங்களைப் பார்த்தாலே இந்து மதத்தை அழிக்க நினைக்கும் சக்திகள் எவ்வளவு வளர்ந்து இருக்கின்றன என்பது புரியும்.
நமது மதம், கலாசாரம், வரலாறு, பண்பாடு இவைகளை திரித்தும், மோசமான முறையில் அவதூறு செய்தும், திராவிடர் கழகம், கம்யூனிஸ்டுகள், கிறிஸ்தவ மதமாற்ற சக்திகள், இந்திய தேசிய எதிர்பாளர்கள் போன்ற பல சித்தாந்த முகாம்களைச் சேர்ந்த பதிப்பகங்கள் தொடர்ந்து நூல்களை வெளியிட்டு வருகின்றன. இதைப் படிக்கும் பொது வாசகர்களின் மனநிலை இந்து மதத்திற்கும், பண்பாட்டிற்கும், இந்துத்துவத்திற்கும் எதிரானதாக மாறி விடுகிறது. இவர்கள் தொடர்ந்து பதிப்பிக்கும் புத்தகங்களை பார்த்தாலே புரியும் – அவர்களுடைய ஒரே நோக்கம் இந்துக்களை – இந்து மதத்தை வேரோடு பொசுக்க வேண்டும் என்பதே.
இந்தப் போக்கை மாற்ற வேண்டும்; நமது வரலாற்றை, பண்பாட்டை சரியான படி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு லாப நோக்கமில்லாத ஒரு பதிப்பகத்திற்கான மிகப் பெரிய அவசியம் உள்ளது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இத்தகைய ஒரு பதிப்பகத்தை நாம் நன்கறிந்த எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமான அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்திருக்கின்றனர். தமிழ்ஹிந்து இந்தப் பதிப்பகத்திற்குத் தனது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி இப்பதிப்பகத்தினை வாழ்த்தி வரவேற்கிறது.
இந்துத்துவம் என்பது இந்த தேசத்தின் வாழ்வியல் முறை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட பிறகும், இன்றும் இந்துத்துவம் என்றாலே நம்மவருக்கும் கூட கசப்பாகவே இருக்கிறது. அந்த அளவுக்கு அந்த வார்த்தையை ஒரு கசப்பான வார்த்தையாக மாற்றி இருக்கின்றன ஊடகங்கள் மற்றும் இந்து விரோத கருத்தியல்கள். அந்த கசப்பை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இந்துத்துவப் பதிப்பகம் என்றே இந்தப் புதிய பதிப்பக்கத்துக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
”இப்பெயர் வைக்கும்போது சிலர் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இப்பெயர் வைத்தால் இந்துக்களே கூட புத்தகத்தை வாங்க மாட்டார்கள் என்று காரணம் சொன்னார்கள். நாம் லாபம் ஈட்டும் நோக்கத்தோடு இப்பதிப்பகத்தை ஆரம்பிக்கவில்லை.
இந்துத்துவம் மனித நேயத்திற்கான சிந்தனை.
இந்துத்துவம் உயர்நெறிகளின் சிந்தனை.
இந்துத்துவம் நல்வாழ்விற்கான சிந்தனை.
இந்துத்துவம் உலக சகோதரத் துவத்திற்கான சிந்தனை.
உலகத்தின் மானுட சமுதாயத்திற்கான மிகச்சிறந்த சிந்தனையே இந்துத்துவம் -
என்பதைப் பறைசாற்றவே இந்துத்துவப் பதிப்பகம் ஆரம்பிக்கப்படுகிறது என்று பதில் சொன்னோம்”
என்கிறார் ம.வெங்கடேசன்.
இந்துத்துவத்தை உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு பறைசாற்றவே இப்பதிப்பகம். இந்து மதம் மீதோ அல்லது பண்பாட்டின் மீதோ அல்லது இந்து வாழ்க்கை முறையின் மீதோ ஒரு உணர்வு ரீதியான ஒட்டுதலும் பற்றும் கொண்டவர்கள் இந்த புத்தகங்களை வாங்கி மற்றவர்களுக்கு பரப்பினாலே கூட போதும், இப்பதிப்பகத்தின் நோக்கங்கள் நிறைவேறும். அதையே தான் இப்பதிப்பகமும் விரும்புகிறது.
You can buy Tamil books from Hindutva Pathippagam (இந்துத்துவ பதிப்பகம்). இந்துத்துவ பதிப்பகம் is a leading Tamil books publisher.
Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam
All tamil books published by Hindutva Pathippagam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.


Updating ..







