புத்தக விமர்சனம்

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0
ஐம்பதாயிரம் பிரதிகள் விற்ற “இட்லியாக இருங்கள் - எமோஷனல் இன்டெலிஜென்ஸ்” நூலின் இரண்டாம் பாகம். அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை. அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்கையும்கூட பெருமளவில்த கர்ந்துவிட்டது. இப்போது உலகை  ஆண்டுகொண்டிருப்பது EQ எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே. உள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியான முறையில் கையாளும் கலையை யார் திறன்படக் கற்கிறார்களோ அவர்களே இன்று வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல படிப்பு, அலுவலகம், தொழில் என்று வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் EQ முக்கியமானதாக மாறுகிறது. தலைமைப் பதவியை வகிக்கவேண்டுமா? போட்டியாளர்களைச் சமாளிக்கவேண்டுமா? கனவுகளை நினைவாக்கவேண்டுமா? நீங்கள் இயங்கும் துறையில் முதன்மைச் சாதனையாளராகத் திகழவேண்டுமா? உங்கள்  சிந்தனைகள், செயல்பாடுகள் இரண்டிலும் ஆச்சரியமூட்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமா? உங்களுடைய உகி திறனை மேம்படுத்திக்கொள்வதுதான் ஒரே அடிப்படை வழி. சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் IQ-வை விட ஏன் EQ  முக்கியம் என்பதையும் அதை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதையும் முறைப்படி கற்றுக்கொடுக்கிறது. ‘குமுதம் சினேகிதி’ இதழில் வெளிவந்து ஏகோபித்த பாராட்டைப் பெற்ற வாழ்வியல் தொடரின் புத்தக வடிவம்.

தடையேதுமில்லை
புத்தகங்களை மட்டுமே படித்துவிட்டு எவரும் வெற்றியாளர் ஆகிவிடமுடியாது. வாழ்க்கையைவிடச் சிறந்த வாத்தியார் இந்த உலகில் இல்லை. எனவே அனுபவங்களிலிருந்தும் ஒருவர் கற்கவேண்டியிருக்கிறது. ஆனால் அது அத்தனை சுலபமல்ல. எடுத்தோமா, படித்தோமா என்று கற்றுக்கொண்டுவிடமுடியாது. அனுபவத்தைப் புரிந்துகொள்ளவும் அதிலிருந்து முக்கியமான பாடங்களைக் கண்டுபிடித்து கிரகித்துக்கொள்ளவும் தனித்திறன் தேவைப்படுகிறது. திறந்த மனமும் தெளிவான சிந்தனையும் ருந்தால்தான் அனுபவப் பாடம் படிக்கமுடியும். சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் நம் வாழ்வை நாமே படித்துக்கொள்ள உதவும் ஒரு கைவிளக்காக இருக்கிறது. நம்மை முன்னேறவிடாமல் தடுக்கும் தடைக்கற்கள் எவையெவை என்பதை மிகத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தடைகளைத் தகர்த்து வெற்றிப் படிகளில் ஏறி உச்சத்தைத் தொட இந்தப் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் உதவும். ‘வாசகர்களின் தோளில் கைபோட்டுப் பேசும் திறன் கொண்ட புத்தகம் இது. கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் சோம. வள்ளியப்பனின் பாணி அபூர்வமானது.’ - பா.ராகவன்

முதல் உலகப்போர்
உலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்கூட. நூற்றாண்டுகால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியைத் துறந்தது. போரின் சாம்பலில் இருந்து அமெரிக்கா, ஒரு புதிய வல்லரசாக உயிர் பெற்று எழுந்தது. முதல் உலகப் போர் ஐரோப்பாவில் மையம் கொண்டது ஏன்? ஆஸ்திரிய இளவரசர் ஒருவரை, செர்பிய பிரஜை ஒருவன் சுட்டுக்கொன்றான் என்பதற்காக முழு ஐரோப்பாவும் போரில் குதிக்குமா? ஐந்து கோடி சிப்பாய்களைக் களத்தில் இறக்கி, ஒரு கோடி பேரை பலி வாங்குமா? ஒரு தலைமுறை இளைஞர்களை முற்றிலுமாகத் துடைத்து அழித்த இந்தப் போரைத் தவிர்த்திருக்கவே முடியாதா? இந்த நிமிடம் வரை மேற்கு ஆசியா பிரச்னைக்குரிய ஒரு பிரதேசமாக நீடிப்பதற்கும், இத்தாலியில் முசோலினி பாசிசத்தை வளர்த்தெடுத்ததற்கும், ஜெர்மனியில் ஹிட்லர் எழுச்சி பெற்ற-தற்குமான மூல காரணம், முதல் உலகப் போரில் இருக்கிறது. இரண்டாம் உலகப் போர் என்பது முதல் உலகப் போரின் தொடர்ச்சி. அல்லது, விளைவு. மருதனின் இந்தப் புத்தகம், முதல் உலகப் போரின் அரசியல், சமூக, ராணுவ வரலாற்றை விரிவாகப் பதிவு செய்கிறது

ஜெயமோகன் குறுநாவல்கள்

இத்தொகுதியில் உள்ள குறுநாவல்கள் சிறுகதைக்குரிய வேகமான கதையோட்டத்துடன் நாவலுக்குரிய விரிவான சித்தரிப்பும் கொண்டவை. இக்கதைகள் விதவிதமான நிலக்காட்சிகளின் வழியாக வேறுபட்ட வாழ்க்கைகளைக் கண்டபடி பயணம் செய்யும் அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத குறுநாவல்கள் பல உள்ள முழுமையான தொகுப்பு இது.


கல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்
மரு. வீ. புகழேந்தி , மரு. ரா. ரமேஷ் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழுபூவுலகின் நண்பர்கள்அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்

ஆண்பால் பெண்பால்

எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண்-பெண் பாகுபாடு போல இல்லை. மனிதர்களில் உள்ள ஆண்-பெண் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துக்கள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி. எதிர்பார்ப்பு நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு, கையெழுத்து, குரல் ,சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவபந்தம். பொழுதுபோக்கு மட்டுமின்றி, அரசியல் விஷயங்களிலும் கணவன்களிடம் விலகி முடிவெடுத்தார்கள் மனைவிகள். அந்தவிதத்தில் பொழுதுபோக்கு, அரசியல் இரண்டிலும் தன்னிகரில்லா ஒரு வரலாற்று நாயகன் இநத் நாவலின் மையப்புள்ளியாகியிருக்கிறார்


ஆட்டிசம் : சில புரிதல்கள்

தங்களின் குழந்தைக்கு இன்னது என்று உணர்ந்துகொள்ள முடியாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான பெற்றோரில் ஒருவருக்காவது இப்புத்தகம் பயன்பட்டால் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். சரி, என் குழந்தை நல்லா இருக்கு. நோ ப்ராபளம் என்பவரா.... நீங்கள்... அப்படியெனில்... நீங்களும் தான் எங்களின் இலக்கு. குறைவான ஆட்டிசப்பாதிப்பு உள்ள குழந்தைகளையும், அதிலிருந்து மீண்டுவரும் குழந்தைகளையும் சிறப்பு பள்ளிகளுக்கு அனுப்பவேண்டாம், சாதாரணப்பள்ளிக்கு அனுப்புங்கள் என்று மருத்துவர்களும், தெரபிஸ்டுகளும் வலியுறுத்துகின்றனர். ஆனால், இக்குழந்தைகளை பெரும்பாலான பள்ளிகள் சேர்ந்துக்கொள்ள மறுத்துவிடுகின்றன. அதற்கு பள்ளி சொல்லும் காரணம், தங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது வந்துவிடுமோ என்று மற்ற பெற்றோர் பயப்படுவதாக சொல்கிறது. தொட்டுவிட்டால் ஒட்டிக் கொள்கின்ற தொற்று நோய் அல்ல ஆட்டிசம். சாதாரணக்குழந்தையின் பெற்றோராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், ஆட்டிசக்குழந்தைகளை ஒதுக்க வேண்டாம். அவர்களையும் நாம் இயல்பு வாழ்க்கையை வாழவழி செய்ய முடியும். இவர்களுக்கான உரிமையை மறுப்பவரிடம் இக்குழந்தைகளின் சார்பில் நீங்களும் வாதிட முடியும். அதற்கு இப்புத்தகம் துணை நின்றால் உள்ளபடியே மகிழ்வோம்.


எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்

கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள். எஸ்.ராமகிருஷ்ணன் நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணனின் முழுமையான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. காலத்தால் புறக்கணிக்கப்பட்டு சாம்பல் படிந்து கிடக்கும் கிராமங்களையும், நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்களாகத் தனிமையும் துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் ராமகிருஷ்ணன் படைப்புகள் எங்கும் காணமுடிகிறது. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும் இவரது மிகுபுனைவும் கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் புதியதொரு தமிழ்ப் புனைவியலை உருவாக்குகின்றன என்பதே அதன் சிறப்பம்சம்.


ப்ளிங்க்

நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தை நாம் எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதை `தி டிப்பிங் பாயிண்ட்’ புத்தகத்தில் வழியாக மறுவரையறை செய்த மால்கம் க்ளாட்வெல், தற்போது `ப்ளிங்க்’ புத்தகத்தின் வழியாக நமக்குள் இருக்கக்கூடிய உலகத்தை நாம் புரிந்துகொள்ளும் உத்திகளைக் கற்றுத்தருகிறார். ஒரு தம்பதியை சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்து, அவர்கள் பேசிக்கொள்வதை உள்வாங்கி, அவற்றின் வழியாக அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக நீடிக்குமா? அல்லது விவாகரத்தில் முடிந்துவிடுமா? என்று கணித்துவிட முடியுமா? உங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு மனிதரைச் சந்திக்கும்போது, அவர் குறித்த ஒரு துல்லியமான நிலைப்பாட்டை உங்களால் எடுத்துவிட முடியுமா? உங்களுக்கு முற்றிலும் புதியதொரு விஷயத்தைப் பார்த்த மாத்திரத்தில், அது குறித்த தீர்மானமான முடிவுக்கு உங்களால் வந்துவிடமுடியுமா? மேற்கண்ட மூன்று கேள்விகளுக்கும் முடியும் என்பதுதான் உங்கள் பதில் என்று வைத்துக் கொள்வோம். எனில், உங்கள் கணிப்பு எல்லா சமயங்களிலும் சரியாக இருக்குமா? எப்போது சரியாக இருக்கும்? அல்லது எப்போது தவறாகப் போகக்கூடும்…? மால்கம் க்ளாட்வெல்லின் ஆய்வில் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், உங்களைப் பற்றிய, உங்கள் முடிவெடுக்கும் திறன் பற்றிய கேள்விகளுக்கு உளவியல் ரீதியான பதில்களைக் கற்றுத்தருகிறது. வேக உணர்திறன்(Rapid Cognition)என்பது தேவதைகளின் ஆசிபெற்றவர்களுக்கு மட்டுமல்ல, சாமானிய மனிதருக்கும் சாத்தியமாகக்கூடியது என்பதை உளவியல் ரீதியாக நிறுவுகிறார் மால்கம் க்ளாட்வெல். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை அதன் உள்ளடக்க வீரியத்துக்குத் துளியும் பங்கம் வராமல் சுவாரஸ்யமாக மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம். ”மிஸ்டர் க்ளாட்வெல் வரம் பெற்ற ஒரு கதை சொல்லி, எங்கே சென்றாலும் நினைவில் நிற்கக்கூடிய பாத்திரங்களையும், மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளையும் கண்டறியக் கூ டிய திறமையுள்ளவர்” – ஜார்ஜ் ஆண்டர்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்தப் புத்தகத்தை வாங்குங்கள்: நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்” – டேவிட் புரூக்ஸ், நியூயார்க் டைம்ஸ் புக் ரெவியூ.


ஒரே ஒரு ஊரிலே

நகரமும் கிராமமும் அல்லாத ஒரு ஊரில் நான்கு நண்பர்களுக்குள் நிகழும் நட்பு பற்றிய கதை. அவர்களின் உலகம், மகிழ்ச்சி, ஒரு கோடை விடுமுறைக்கு என்ன செய்தார்கள், எங்கு சென்றார்கள், யாரை சந்தித்தார்கள், என்ன விபரீதம் நிகழ்ந்தது, அவர்கள் நட்பு என்ன ஆனது என்பதே இந்த சிறார் நாவல் ‘ஒரே ஒரு ஊரிலே’