Uncategorized
எம்.வி வெங்கட்ராமின் தேர்ந்தெடுத்த பதினோரு சிறுகதைகளும் ‘பெட்கி’, ‘குற்றமும் தண்டனையும்’ என்னும் இரண்டு குறுநாவல்களும் அடங்கிய தொகுதி
Saturday 20 May 2017 | Uncategorized |
மரு. வீ. புகழேந்தி , மரு. ரா. ரமேஷ்
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழுபூவுலகின் நண்பர்கள்அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்
Thursday 20 Apr 2017 | Uncategorized |
மதுரை: முதுபெரும் தமிழறிஞர் தமிழண்ணல் (வயது 88) மதுரையில் நேற்று இரவு காலமானார். அவரது உடல் நல்லடக்கம் மதுரையில் நாளை நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையைச் சேர்ந்த தமிழண்ணலின் இயற்பெயர் ராம. பெரியகருப்பன். காரைக்குடியில் பள்ளி ஆசியராக பணியைத் தொடங்கினார். பின்னாளில் மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராகவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். சங்க இலக்கியம் உட்பட 80-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். மத்திய அரசின் தமிழறிஞர்களுக்கான 'செம்மொழி விருது', தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு.வி.க. விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார் தமிழண்ணல். 1990களின் இறுதியில் தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தி தமிழறிஞர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் தமிழறிஞர் தமிழண்ணல். சிங்கப்பூர் அரசுக்கு தமிழ்க் கல்வி பாடநூல்களையும் எழுதியுள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர்கள் கா.காளிமுத்து, மு.தமிழ்குடிமகன் ஆகியோருக்கு ஆய்வு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் தமிழண்ணல். இவருக்கு மனைவி தெய்வானை, 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
தமிழண்ணல் இறுதிச் சடங்கு மதுரை வண்டியூர் பிரதான சாலை சதாசிவ நகரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும்.
தமிழறிஞர் தமிழண்ணல் குறித்து முனைவர் மு. இளங்கோவன் தமது இணையப் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
பிறப்பு
தமிழண்ணல் அவர்கள் 12.08.1928 இல் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் இட்டபெயர் பெரியகருப்பன் என்பதாகும். இவர்தம் பெற்றோர் இராமசாமி, கல்யாணி ஆச்சியாவர்.
கல்வி
மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர்(1948). பிறகு தன்முயற்சியால் கற்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளியல்) (1948), முதுகலைத் தமிழ்(1961) ஆகிய பட்டங்களைப் பெற்றவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கிய மரபுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்(1969). முனைவர் சி.இலக்குவனாரும், முனைவர் அ.சிதம்பரநாதனாரும் இவர்தம் ஆய்வு நெறியாளர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆசிரியர் பணி
தமிழண்ணல் அவர்கள் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். இங்குத் தம் கல்லூரித் தோழர் கவிஞர் முடியரசனாருடன் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பதின்மூன்று ஆண்டுகள் இங்குப் பணிபுரிந்த பிறகு மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பத்தாண்டுகள் தமிழ்ப் பேராசிரியர் பணியாற்றினார். இவர் தம் சங்க இலக்கியப் புலமையை அறிந்த ஆலை அரசர் கரு. முத்து. தியாகராசனார் இவருக்கு உள்ளன்போடு பணி வழங்கியதை அண்ணல் அவர்கள் நெகிழ்ந்து கூறுவார்கள்.
1971 முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியும் பின்னர் இணைப்பேராசிரியர், அஞ்சல்வழிக் கல்விப் பேராசிரியர், தமிழியல்துறைப் பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் பணி என மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பல நிலைகளில் பணிபுரிந்துள்ளார். இவர்தம் பணிக்காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிறப்பு நிதியுதவித் துறையாக உயர்வுபெற்றது.
குடும்பம்
தமிழண்ணல் அவர்களுக்கு 1954, ஆகத்து 30 இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குச் சோலையப்பன், கண்ணன், மணிவண்ணன் என்ற ஆண்மக்களும், கண்ணம்மை, அன்புச்செல்வி, முத்துமீனாள் என்ற பெண்மக்களும் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.
தமிழண்ணல் பெற்ற சிறப்புகள்
1971 இல் குடியரசு நாளில் புதுதில்லி அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு இவர் செல்வம் என்ற தலைப்பில் பாடிய கவிதை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப் பெற்ற சிறப்பிற்கு உரியது. மதுரை மீனாட்சியம்மை பற்றி இவர் பாடிய பாடல்கள் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் என்ற இவர் நூலும் பரிசுபெற்ற ஒன்றாகும். தமிழக அரசால் சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டார். 1985 முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் சங்க இலக்கியக்குறள் பீடத்தின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தவர். பல்கலைக்கழக நல்கைக்குழு தமிழண்ணல் அவர்களை 1981-82 ஆம் கல்வியாண்டில் தேசியப் பேராசிரியராகத் தேர்வு செய்து சிறப்புச்செய்தது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்கும் சென்று தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு, இலக்கியக் கொள்கைகளைப் பற்றி சொற்பொழிவாற்றிப் பிற மொழியினருக்குத் தமிழின் சிறப்பை எடுத்துரைத்தவர். இலங்கை, சப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று கருத்தரங்குகளில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர். இவர் மேற்பார்வையில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். முனைவர் மு.தமிழ்க்குடிமகன் உள்ளிட்டவர்கள் இவரின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்டம்பெற்றவர்கள். தினமணி உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் புகழ்பெற்றவைகளாகும். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இவருக்கு 1989 ஆம் ஆண்டில் தமிழக அரசின் திரு.வி.க.விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். சிங்கப்பூர் அரசின் அழைப்பில் தமிழ்க்கல்விக்கு உரிய பாடநூல் எழுதும் பணியிலும் ஈடுபட்டவர். தமிழகப்புலவர் குழுவின் உறுப்பினராக இருந்து திறம்படப் பணிபுரிந்து வருகிறார். தமிழ்ச்சான்றோர் பேரவை தமிழ்வழிக் கல்வியை முன்னிலைப்படுத்தித் தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டம் நிகழ்த்திய பொழுது அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் போராட்டத் தலைமையிலிருந்து விலகிக்கொண்டபொழுது தாமே முன்வந்து தமிழ்வழிக் கல்விக்காகச் சாகும்வரை உண்ணா நோன்பில் தலைமைதாங்கி நடத்திய வரலாற்றுப் பெருமைக்கு உரியவர் நம் தமிழண்ணல் அவர்கள். அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் தொல்காப்பியப் பதிப்பை அறிஞர் இராமலிங்கனார், பகீரதன் ஏற்பாட்டில் பதிப்பித்துப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் அறிஞர்கள் முன்னிலையில் வெளியிட்டபொழுது தமிழுக்கு இந்நூல் கேடானது எனத் துணிந்து குரல்கொடுத்து கண்டித்தவர் நம் தமிழண்ணல் அவர்கள். (இத்துணிவும் தமிழ்ப்பற்றும் கண்ட பிறகே அந்நாளில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுமாணவனாக இருந்த இக் கட்டுரையாளனுக்கு இவரின் மேல் அளவுக்கு அதிகமான ஈடுபாடு வந்தது.இவர்தம் தலைமையில் தம் திருமணம் நிகழவேண்டும் என உறுதி செய்து பல ஆண்டுகளுக்குப் பிறகு செயங்கொண்டத்தில் 31.03.2002 இல் திருமணம் நிகழ்ந்தது)
தமிழண்ணல் நூல்கள்
தமிழண்ணல் தமிழ் இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, நாட்டுப்புறவியல், உரை, படைப்பு எனப் பல திறத்தில் அமையும் நூல்களை வழங்கியுள்ளார். அவற்றுள் சில :
வாழ்வரசி புதினம்
நச்சுவளையம் புதினம்
தாலாட்டு
காதல் வாழ்வு
பிறைதொழும் பெண்கள் சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கியக் கொள்கைகள் (2003)
சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கிய வகைகள்(2005)
தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்(2004)
புதியநோக்கில் தமிழ்இலக்கிய வரலாறு தமிழியல் ஆய்வு(இ.முத்தையாவுடன்)
ஆய்வியல் அறிமுகம்(இலக்குமணனுடன்)
ஒப்பிலக்கிய அறிமுகம்
குறிஞ்சிப்பாட்டு
இலக்கியத் திறனாய்வு விளக்கம்
தொல்காப்பியம் உரை
நன்னூல் உரை
அகப்பொருள் விளக்கம் உரை
புறப்பொருள் வெண்பாமாலை உரை
யாப்பருங்கலக் காரிகை உரை
தண்டியலங்காரம் உரை
சொல் புதிது சுவை புதிது
தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்
தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?
பேசுவது போல் எழுதலாமா? பேச்சுத் தமிழை இகழலாமா?
பிழை திருத்தும் மனப்பழக்கம்
உரை விளக்கு தமிழ்
உயிருள்ள மொழி
தமிழ் கற்பிக்கும் நெறிமுறைகள்
தமிழ்த்தவம்
உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்
திருக்குறள் உரை
இனிய தமிழ்மொழியின் இயல்புகள் முதலியன
முனைவர் தமிழண்ணல் அவர்களின் முகவரி :
முனைவர் தமிழண்ணல் அவர்கள் ஏரகம், 4/585 (732) சதாசிவ நகர், வண்டியூர்ச்சாலை, மதுரை - 625 020
Wednesday 30 Dec 2015 | Announcement, Uncategorized |
சென்னை புத்தகக் கண்காட்சி - 2015
முதல் நாள் - 9.1.15 அன்று டாப் 10 விற்பனை:
கிமு கிபி
கிருஷ்ணதேவ ராயர்
உலகை மாற்றிய புரட்சியாளர்கள்
அள்ள அள்ள பணம் - டிரேடிங்
அர்த்த சாஸ்திரம்
சே குவேரா - வேண்டும் விடுதலை
ஹிட்லர்
நவீன இந்தியாவின் சிற்பிகள்
சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ
கருப்பு வெள்ளை - மார்ட்டின் லூதர் கிங்
Saturday 10 Jan 2015 | Uncategorized, புத்தகங்கள் |
Dear friends,
We have reached 28,150 plus
books in our catalog , more than 26,500 Tamil books, and you can buy any of these tamil books from your home, most of the time these books gets delivered in a day or two, otherwise in a week time.
we use professional courier to ship our orders within Tamilnadu/Kerala/Pondy/Karnataka(only at Bangalore and Mysore)regions and it will get delivered in a day or two.
For other places we use DTDC Courier and India post. Your tamil books will get delivered in a day or two.
we have more than 13,000 customers and many of them buy books from us regularly.
So we welcome and try
Online Tamil books buying experience.
thanks,
Sugan
Noolulagam.com
Keywords:
tamil books online shopping
tamil books
buy tamil books online
tamil books buy online
online tamil books shopping
tamil books online
Sunday 04 Jan 2015 | Announcement, Uncategorized |
புத்தகங்கள்தான் சமூக அக்கறையையும் பகுத்தறிவையும் தூண்டுகின்றன. - வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில்
கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் பேச்சு -
வந்தவாசி.டிசம்.20. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற 'சந்திப்பு' சிறப்பு நிகழ்வில், ஒவ்வொரு மனிதனும் சமூக அக்கறையுடன் இருக்கவும், பகுத்தறிந்து வாழ்க்கையை சிறப்பாக நடத்தவும் புத்தகங்களே தூண்டுகின்றன என்று கரூர் வைஸ்யா வங்கியின் மேலாளர் பா.சுந்தரமூர்த்தி பேசினார்.
மேலும் படிக்க...
Wednesday 31 Dec 2014 | Common, Uncategorized |
சென்னை: இந்த ஆண்டுக்கான சாகித்தியஅகாதெமி விருது தமிழ் எழுத்தாளார் பூமணிக்கு வழங்கப் பட்டுள்ளது. அவரின் அஞ்ஞாடி என்ற நாவல் இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
எழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். இவர் 1947 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர்.பூமணி பல்வேறு இலக்கியப் பங்களிப்பை தமிழில் தொடர்ந்து செய்து வருகிறார். இவரின் வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், வெக்கை, நைவேத்தியம், பிறகு, வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்கள் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவை.
அஞ்ஞாடி நாவல் 19 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் சமணர் கழுவேற்றம், பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி, நாயக்க மன்னர்களின் வருகை, பாளையக்காரர்களிடையே நடைபெற்ற உள்நாட்டு மோதல்கள், ஜமீன்கள் அமைப்பு போன்றவற்றை வெளிப் படுத்துகிறது.
மேலும் கழுகுமலை மற்றும் சிவகாசி சாதிக்கலவரங்கள், நாடார் மக்களின் எழுச்சி, ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்போக்குகள் என ஆயிரம் ஆண்டு வரலாற்றை கதை நுட்பத்தோடு வெளிப் படுத்துகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
Friday 19 Dec 2014 | Awards, Uncategorized |
கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் எழுதிய ‘தலைவர்-தம்பி-நான்’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.சென்னை வடபழனி ஆர்கேஜி அரங்கில் மாலை வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. தலைவர் இந்தியாவில் இருந்த காலகட்டங்களில் நடைபெற்ற சம்பவங்களை பதிவாக்கியுள்ளார்.
1984ல் மட்டக்களப்பு சிறையை உடைத்து மீட்கப்பட்ட தோழர்கள் நிர்மலா நித்தியனந்தன் மற்றும் அவரது கணவர், பேபி உள்ளிட்ட பலர் அய்யா.புலமைபித்தன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.இவர்களை அழைத்துவந்த தம்பி அவரது அண்ணியிடம் (புலமைப்பித்தனின் மனைவி) “ எங்களுக்கு சிற்றுண்டி தயார் செய்யுங்கள் “ என்றார். ரகு அண்ணிக்கு உதவி செய்தார்.
மேலும் படிக்க...
Saturday 02 Aug 2014 | Uncategorized |
Dear friends,
We are nearing 12,000 books in our catalog , more than 11500 Tamil books, and you can buy any of these tamil books from your home, most of the time in a day or two, otherwise in a week time.
For with in tamilnadu/Karnataka (only at Bangalore and Mysore) /Kerala we use professional courier to ship our orders and it will get delivered in a day or two. When we use India post for other parts of India. your tamil books will get delivered in a day or two.
we have more than 10,000 customers and many of them buy books from us regularly.
So we welcome and try Online Tamil books buying experience.
thanks,
Admin
Noolulagam.com
Saturday 12 Jul 2014 | Uncategorized |
தேவகோட்டை தே பிரித்தோ மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இணைந்து எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தேவகோட்டை தே பிரித்தோ மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இணைந்து எழுதிய உளிகள் வடித்த துளிகள் நூல் வெளியீட்டு விழா பள்ளி அதிபர் மற்றும் தாளாளர் லியோ தாகூர் தமையிலும்,லசாக் மாணவர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கென்னடி, சுங்கத்துறை கண்காணிப்பாளர் நெடுஞ்செழியன், லயோலா அகாதெமியின் முதல்வர் இக்னேஷியஸ் பிரிட்டோ, கவிஞர்கள் பிரைட், சந்திரன், முருகேஷ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
விழாவில் தமிழக இயேசு சபை மாநில தலைவர் செபஸ்தி எல்.ராஜ் நூலை வெளியிட்டார். தலைமை ஆசிரியர் யாகு ஏற்புரை நிகழ்த்தினார். நூல் ஆசிரியர்கள் கெüரவிக்கப்பட்டனர்,
Monday 24 Mar 2014 | Uncategorized |