Awards
சென்னை: இந்த ஆண்டுக்கான சாகித்தியஅகாதெமி விருது தமிழ் எழுத்தாளார் பூமணிக்கு வழங்கப் பட்டுள்ளது. அவரின் அஞ்ஞாடி என்ற நாவல் இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
எழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். இவர் 1947 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர்.பூமணி பல்வேறு இலக்கியப் பங்களிப்பை தமிழில் தொடர்ந்து செய்து வருகிறார். இவரின் வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், வெக்கை, நைவேத்தியம், பிறகு, வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்கள் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவை.
அஞ்ஞாடி நாவல் 19 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் சமணர் கழுவேற்றம், பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி, நாயக்க மன்னர்களின் வருகை, பாளையக்காரர்களிடையே நடைபெற்ற உள்நாட்டு மோதல்கள், ஜமீன்கள் அமைப்பு போன்றவற்றை வெளிப் படுத்துகிறது.
மேலும் கழுகுமலை மற்றும் சிவகாசி சாதிக்கலவரங்கள், நாடார் மக்களின் எழுச்சி, ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்போக்குகள் என ஆயிரம் ஆண்டு வரலாற்றை கதை நுட்பத்தோடு வெளிப் படுத்துகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
Friday 19 Dec 2014 | Awards, Uncategorized |
Wednesday 18 Jun 2014 | Awards |
டெல்லி: 2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் 'கொற்கை' நாவலை எழுதிய ஜோ.டி. குரூஸுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட 21 மொழிகளில் வெளியாகும் சிறந்த கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் சுயசரிதைகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழில் இந்தாண்டு 'கொற்கை' என்ற நாவலை எழுதிய ஜோ.டி. குரூஸ் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆழிசூழ் உலகு' என்னும் தன் முதல் நாவலின்மூலம் சூழலில் கவனம் பெற்ற ஆர்.என். ஜோ டி குரூஸின் இரண்டாம் நாவல் கொற்கை. காலம்'. இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். நூறாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்யும் இந்த நாவல், கடல்சார் பரதவர் சமூகத்தின் மாற்றத்தைச் சித்தரிக்கிறது. ஆங்கிலேய இந்திய ஆட்சி, கிறித்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திரப் போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் கூறியுள்ளார் ஜோ டி குரூஸ். பல விதமான நிகழ்வுகளையும்மனிதர்களின் வெவ்வேறு முகங்களையும் மாற்றத்தின் வியக்கவைக்கும் கோலங்களையும் நுட்பமான சித்தரிப்பில் வெளிப்படுத்துவதன்மூலம் கலைபூர்வமான வரலாற்று ஆவணமாகவும் திகழ்கிறது இந்த நாவல். இதனாலேயே புவியில் எல்லைகளையும் காலப் பரப்பையும் மூகவரையறைகளையும் தாண்டி விரிவுகொண்டு நிற்கிறது இந்த நாவல்.
Thursday 19 Dec 2013 | Awards |
Saturday 30 Nov 2013 | Awards, Common |
டல்லாஸ் (யு.எஸ்): தமிழகக் குழந்தைகளுடன் போட்டி போடும் அளவுக்கு அமெரிக்க் தமிழ் குழந்தைகள், வாரந்தோறும் தமிழ்ப் பள்ளிகள் சென்று தமிழ் கற்று வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பாக டல்லாஸில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் திருக்குறள் போட்டி அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற போட்டியாகும். வரும் 2013 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் திருக்குறள் போட்டியை டெக்சாஸ் மாநில அளவில் விரிவுபடுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க...
Saturday 22 Dec 2012 | Awards, செய்திகள் |
2008-09 ஆண்டுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை வழங்கினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் மொழி வளர்ச்சிக்காக சேவையாற்றிவரும் 92 வயது புலவர் சி. கோவிந்தராசனாருக்கு "தொல்காப்பியர் விருது' வழங்கப்பட்டது.
மேலும் படிக்க...
Saturday 22 Dec 2012 | Awards, செய்திகள் |
முற்போக்கு எழுத்தாளர் டி.செல்வராஜ் எழுதிய ‘தோல்' நாவல் இந்த ஆண்டிற்காக (2012) சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் மதிப்பிப்பிற்குரிய விருது சாகித்ய அகாடமி விருது.
இந்த விருது கடந்த 1955ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் முதலாக விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாவலுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. 2009ம் ஆண்டு முதல் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 10000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை செய்வது சாகித்ய அகாடமி அமைப்பு. இந்த அமைப்பு இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது.
மேலும் படிக்க...
Friday 21 Dec 2012 | Awards, செய்திகள், புத்தகங்கள் |
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பவித்ரம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறந்த அறிவியல் மற்றும் ஆன்மீக தமிழ் புத்தகங்களுக்கு ராமமூர்த்தி நினைவு விருது வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் (இடமிருந்து 3-வது). உடன் சிறப்பு விருந்தினர்கள் (இடமிருந்து) எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, இந்தியா சிமெண்ட் நிறுவன துணைத் தலைவர் (நிதி) ஹரிஹர சுப்பிரமணியன், பவித்ரம் நிர்வாகி எஸ்.எஸ்.ஆர்.ராஜ்குமார், கௌரவ ஆலோசகர் டாக்டர் ஜெ.ஜாய்ஸ் திலகம், நாடக ஆசிரியர் சி.வி.சந்திரமோகன். விருது பெற்றவர்கள் கீழ்வரிசை (இடமிருந்து) ஆர்.வி.பதி (மனதை மயக்கும் கண்ணனின் கதைகள்), ஜெ.வீரநாதன் (எளிய தமிழில் இணையத்தை அறிவோம்), பி.முத்துகுமாரசுவாமி (நகரத்தார் கோயில்களில் ஒன்பது), வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (எல்லோருக்கும் எப்போதும் உணவு) சார்பில் பேராசிரியர் ராமன், டாக்டர் முத்துசெல்லக்குமார்.
Wednesday 07 Mar 2012 | Awards, செய்திகள் |
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல் விருது இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பு வாய்ந்த விருதினைப்பெறும் எஸ்.ராமகிருஷ்ணனை பாராட்டி உயிர்மை வரும் பிப்ரவரி 2 ஆந்தேதி சென்னையில் மாபெரும் பாராட்டுவிழாவினை நடத்துகிறது. தமிழகத்தின் முதன்மையான கலையுலக ஆளுமைகள் பங்கேற்கும் இந்த நிகழ்வு குறித்து முழுமையான தகவல் நாளை வெளிவரும்.
மேலும் படிக்க...
Wednesday 25 Jan 2012 | Awards, செய்திகள் |
திறமையான நடிகர் எனப் பெயரெடுத்திருந்தாலும், தனக்கான வாய்ப்புகள் அமையவில்லையே என்ற ஏக்கம் தலைவாசல் விஜய்க்கு.
அவரது இந்த ஏக்கத்தைப் போக்கியுள்ளது மலையாளத் திரையுலகம்.
மேலும் படிக்க...
Saturday 19 Nov 2011 | Awards |