Common
ஒருமுறை ஒரு சிறுவன், ” எங்கள் ஆசிரியர் எவ்வளவு பெரிய மகான் என்று தெரியுமா? என்று பெருமையாகச் சொன்னான். அதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது சிறுவன், ” எந்த விஷயத்தைக் கொடுத்தாலும் அதைப் பற்றி அவர் ஐந்து மணி நேரமாவது உரையாற்றுவார் ” என்றான்.
மேலும் படிக்க...
Thursday 15 Jan 2015 | Common |
புத்தகங்கள்தான் சமூக அக்கறையையும் பகுத்தறிவையும் தூண்டுகின்றன. - வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில்
கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் பேச்சு -
வந்தவாசி.டிசம்.20. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற 'சந்திப்பு' சிறப்பு நிகழ்வில், ஒவ்வொரு மனிதனும் சமூக அக்கறையுடன் இருக்கவும், பகுத்தறிந்து வாழ்க்கையை சிறப்பாக நடத்தவும் புத்தகங்களே தூண்டுகின்றன என்று கரூர் வைஸ்யா வங்கியின் மேலாளர் பா.சுந்தரமூர்த்தி பேசினார்.
மேலும் படிக்க...
Wednesday 31 Dec 2014 | Common, Uncategorized |
இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில், உடலுழைப்பு என்பது அனைவருக்கும் குறைந்துவிட்டது. நம் உணவு முறையும் மாறிவிட்டது. இயற்கை உணவு வகைகள், நம்மை விட்டு ரொம்பவே விலகிவிட்டன. செயற்கை உணவு வகைகளும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் நம்மை ஆக்கிரமித்துவிட்டன. இதனால், இளமையிலேயே உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் என்று நோய்களின் வரிசை நீள்கிறது. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், உடற்பயிற்சி செய்வதுதான் சிறந்த வழி.உடலுக்கு நன்மை செய்யும் உடற்பயிற்சிகளில், நடைப்பயிற்சி மிகவும் முக்கியமானது; சிரமமில்லாதது; எல்லோருக்கும் ஏற்றது. உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுமைக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கொடுக்க வேண்டுமானால், அது நடைப்பயிற்சியால் மட்டுமே முடியும். வேறு எந்த உடற்பயிற்சியைச் செய்ய முடிவெடுத்தாலும், அதற்கெனப் பிரத்யேகக் கருவிகளும் பயிற்சியாளரும் பயிற்சி மையங்களும் தேவைப்படும். செலவும் ஆகும். ஆனால், நடைப்பயிற்சிக்கு இவை எதுவும் தேவையில்லை. பணச் செலவும் இல்லை. இதனால்தான் நடைப்பயிற்சியை ‘உடற்பயிற்சிகளின் அரசன்’ என்கிறோம்.
மேலும் படிக்க...
Monday 08 Sep 2014 | Common |
பாட்டி வைத்தியம் !
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
மேலும் படிக்க...
Monday 08 Sep 2014 | Common |
காலச்சுவடு இதழும் கடவு அமைப்பும் சேர்ந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ‘தமிழில் புத்தகப் பண்பாடு’ என்ற இரண்டு நாட்களுக்கான கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அடுத்த வாரம்- ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் நாட்களில்.
மேலும் படிக்க...
Monday 18 Aug 2014 | Common |
சிறுவர்களுக்கான சஞ்சிகைகள் இப்பொழுது தமிழில் மிகக் குறைந்துவிட்டன. இரண்டு மாதங்களுக்கு முன்பாக பள்ளி மாணவர்களுக்கு தோதான சஞ்சிகைகளைத் தேடும் போது திணற வேண்டியதாகிவிட்டது. யாராவது ஒருவர் ஒரு சஞ்சிகையின் பெயரைச் பரிந்துரைத்தால் ‘இப்போ அது சரியில்லைங்க’ என்று இன்னொருவர் கண்டிப்பாகச் சொன்னார். சலித்துப் போனதுதான் மிச்சம். கடைசியில் சுட்டி விகடன் மட்டும்தான் மிஞ்சியது.
மேலும் படிக்க...
Thursday 07 Aug 2014 | Common |
“நான் நிறைவாக வாழவில்லை!”
நிஜம் பேசும் ஜெயகாந்தன்
தமிழ்மகன், டி.அருள் எழிலன்
படங்கள்: கே.ராஜசேகரன்
ஜெயகாந்தன் அகவை 80-ஐ எட்டும் வேளையில், 'ஜெயகாந்தன் கதைகள்’ விகடன் பிரசுர வெளியீடாக வருகிறது. ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பாக வரவிருக்கும் இந்த நூலைத் தொகுத்திருப்பவர்கள் இங்கிலாந்தில் வசிக்கும் டாக்டர் என்.ராம், வனிதா ராம் தம்பதி.
ஓய்வாக இருக்கிறார் ஜெயகாந்தன். முதுமை உருவாக்கிய கனிவுக் கண்களால்... 'அப்படி என்ன கேட்டுவிடப்போகிறீர்கள்?’ என்கிறது வலது கண். 'இன்னும் சொல்ல என்ன இருக்கிறது?’ என்கிறது இடது கண். அறைக்குள் நுழையும் பேத்தி ஷைலுவைக் கொஞ்சும்போது, குழந்தை ஆகிறார்.
மேலும் படிக்க...
Saturday 19 Jul 2014 | Common |
லண்டன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற யூ.கே மற்றும் தமிழ்நாடு வர்த்தக சங்கத்தின், வர்த்தக கூட்டத்தில் அதன் தலைவர் தமிழகத்தை சேர்ந்த திரு. ரவிபாலன் அவர்களின் பெரும் முயற்சியால் நமது தமிழகத்தை சேர்ந்த தோசா பிளாசா அதிபரும், மகாராஷ்டிரா தமிழ் சங்கத்தின் இணை செயலாளருமான திரு. பிரேம் கணபதி அவர்களின் சேவையை பாராட்டியும் அவரது தன்னம்பிக்கையை மரியாதை செய்யும் விதத்தில் கவுரவிக்கப்பட்டது.
மேலும் படிக்க...
Monday 19 May 2014 | Common |
சென்னை கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகரில் 11-05-2014 ஞாயிறு மாலை 2 மணி முதல் 6 மணி வரை தமிழ் எழுச்சிப் பேரவை,எண்ணம் அறக்கட்டளை எழுத்தேணி கல்விதொண்டு அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் கூட்டம் முனைவர் இறையரசன் தலைமையில்நடைபெற்றது. கவிஞர் மறத்தமிழ் வேந்தன் வரவேற்றார். தேனிசை செல்லப்பாவின் பேரன் கரிகாலன் தமிழிசைப் பாடல்களைப் பாடினார். புதுவை திராவிடப் பேரவைத் தலைவர் நந்திவர்மன் உலக மொழிகளில் திருக்குறள் இதுவரை மொழிபெயர்க்கப் பெற்றுள்ள நூல்கள் பற்றியும் ஈழத்தமிழினப் படுகொலை பற்றியும் எஞ்சியுள்ள மக்களைக் காப்பதுபற்றியும் மற்ற மாநிலத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் அவரவர் மொழியில் எடுத்துக் கூற வேண்டும் என்றார். கவிக்குயில் ஆசிரியர் ஆனைவாரி ஆனந்தனார் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 % இடஒதுக்கீடு செய்துள்ளதைப் பாராட்டினார்; மற்ற 75% மாணவர்களுக்குக் கூறப்படும் பாடத்தை அவர்கள் கேட்கிறார்களே தவிர சீருடை, புத்தகம், போக்குவரத்து ஆகிய அனைத்தும் ஏழை மாணவர்களுடையதே; எனவே அப்பள்ளிகளுக்கு மானியம் அளிக்கத் தேவையில்லை என்றார்.
அமெரிக்கக் கரோலினா தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் சுந்தர செயபாலன் எழுத்தேணி அறக்கட்டளையின் சார்பில் ஏழை மாணவர்களின்கல்வித்தொகை வேண்டல் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டு பேசுகையில், அமெரிக்காவில் 18 வயதுவரை மாணவர்களுக்கு இலவசக் கல்வியும் மதிய உணவும் வழங்கப் பெறுகின்றன; ஆனால் தமிழ் நாட்டில் 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி என்ற சட்டம் இருக்கும்போது தனியார் பள்ளிகள் பல ஆயிரக் கணக்கான ரூபாய் கட்டணம் பெறுகின்றன; எல்லோருக்கும் கட்டாயம் இலவசக் கல்வி தரவேண்டும்; மதுவால் மக்கள் பொருளாதாரமும் பண்பாடும் அழிகின்றன; மதுவிலக்கைக் கொண்டுவந்தால் அரசுக்கு 23 ஆயிரம் கோடி இழப்பு என்கின்றனர்; இலவசமாக டி.வி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி என வழங்குவதை நிறுத்தி இந்த இழப்பைச் சரிசெய்யலாம் என்றார். கல்வி உதவிதொகை பெற விரும்பும் மாணவர்கள் “எழுத்தேணி அறக்கட்டளை, புதுப் புல்லுக் காரத் தெரு, தஞ்சாவூர்” என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்; “
ezuththenitrust@gmail.com” என்ற மின்னஞ்சலுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அறக்கட்டளைச் செயலாளர் முனைவர் இறையரசன் கூறினார்.
கலந்து கொண்டோர்க்கு திருமூலர் தவ மைய நிறுவனர் தனசேகரன் வர்மக் கலையில் ஓர் புள்ளியைக் கற்றுத்தந்தார். வர்மக் கலையை முழுதும் கற்றுக் கொள்ள விரும்புவோர் வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள வகுப்பில் கலந்துகொள்ளலாம் என்று அவர் கூறினார். கவிஞர் வாலறிவன், தமிழாசிரியர் பொன்னுசாமி ஆகியோரும் உரையாற்றினர். மகளிரும் மாணவர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
Monday 12 May 2014 | Common |
காதலர் தினத்தில் தமிழ் மண்ணே வணக்கம் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஸ்ரீபாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் அரங்கேறியது. கல்லூரியின் தலைவர் தனசேகரனும், முதல்வர் ஜானகி சுவாமிநாதனும் வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனர்.
மேலும் படிக்க...
Monday 24 Feb 2014 | Common |