புத்தகங்கள்தான் சமூக அக்கறையையும் பகுத்தறிவையும் தூண்டுகின்றன. – வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில்
கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் பேச்சு –

வந்தவாசி.டிசம்.20. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற ‘சந்திப்பு’ சிறப்பு நிகழ்வில், ஒவ்வொரு மனிதனும் சமூக அக்கறையுடன் இருக்கவும், பகுத்தறிந்து வாழ்க்கையை சிறப்பாக நடத்தவும் புத்தகங்களே தூண்டுகின்றன என்று கரூர் வைஸ்யா வங்கியின் மேலாளர் பா.சுந்தரமூர்த்தி பேசினார்.

இவ்விழாவிற்கு, நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷ் தலைமையேற்றார். கிளை நல்நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் பெ.பார்த்திபன், எஸ்.ராமமூர்த்தி, மூன்றாம் நிலை நூலகர் ச.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக நகர்மன்ற உறுப்பினர் சை.சையது அப்துல் கரீம், கரூர் வைஸ்யா வங்கியின் மேலாளர் பா.சுந்தரமூர்த்தி ஆகியோ கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

கரூர் வைஸ்யா வங்கியின் மேலாளர் பா.சுந்தரமூர்த்தி பேசும்போது, இன்றைக்கு மனிதர்களிடையே பேராசையும், தீவிரவாதமும் பெருகிப்போய் கொண்டிருக்கிறது. சக மனிதர்கள் மேல் அன்பு செய்யவும் முடியாமல், பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். எப்போதும் தேவையறிந்து செலவு செய்ய வேண்டும். நம் வருமானத்தின் தன்மைகேற்ப கடன் பெறும்போதுதான், நம்மால் திருப்பி செலுத்திட முடியும். வரவு இன்றி செலவு செய்யும்போது பெருந்துயரத்திற்கு ஆளாக நேரிடும்.

நமது குழந்தைகள் இன்று செல்போன், கம்ப்யூட்டர், வீ டியோ கேம் போன்றவற்றில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அவர்களை சமூக விழிப்புணர்வுமிக்க குழந்தைகளாக மாற்றிட புத்தங்களைப் படித்திட வையுங்கள். ஒவ்வொரு மனிதனின் வெற்றியும் படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்கள்தான் என்று குறிப்பிட்டார்.

ரூ.1000/- செலுத்தி 156 மற்றும் 157-ஆவது நூலகப் புரவலர்களாக மேலாளர் பா.சுந்தரமூர்த்தி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பொன்.தயாளன் ஆகியோர் இணைந்தனர். நிறைவாக, அலுவலக உதவியாளர் மு.இராஜேந்திரன் நன்றி கூறினார்.

படக்குறிப்பு;

வந்தவாசியில் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற சந்திப்பு நிகழ்வில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கரூர் வைஸ்யா வங்கியின் மேலாளர் பா.சுந்தரமூர்த்திக்கு நகரமன்ற உறுப்பினர் சை.சையது அப்துல் கரீம் நினைவுப் பரிசு வழங்கியபோது எடுத்த படம். அருகில் நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷ், கிளை நல்நூலகர் இரா.பழனி ஆகியோர் உள்ளனர்.

015 (1)

011 (1)