-
சுய முயற்சி இல்லாதவனே ஊனமுற்றவனாகின்றான். எப்போழுதும் ஊக்கமுடன் செயல்பட தயாராக இருக்கவேண்டும். எதிலும் வாகைசூட எப்போதும் உழைத்திடத் தயாராக இருக்க வேண்டும். சோம்பல் சுயமுன்னேற்றத்தின் பரம்பரை எதிரி. அது பிச்சைக்காரனாக்கிவிடும். ஒரு பழமொழி உண்டு. ஒரு சோம்பேறி பிச்சைக்காரனுக்கு சகோதரனாகி விடுகின்றான். நீச்சல் தெரியாதவன் நீருக்கு அஞ்சுவது இயல்பு. வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடத் தெரியாதவன் வாழ்வதற்கு அஞ்சுவான் . களத்தில் இறங்கியவருக்கே உண்மை நிலை புரியும். பயிற்சி பயன்தரும் 'சித்திரமும் கைப்பழக்கமு செந்தமிழும் நாபழக்கம் என்று கூறுவதை மனிதில் நிறுத்துங்கள் . எதையும் பயிற்சிகள் மூலம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். அதற்கான வலிமை உன்னிடமே உள்ளது. பயிற்சி பயன்தரும் என்பது எவ்வளவு உண்மையோ அதே போல முயற்சி நிச்சயமாக உயர்வு தரும். உயர்வுக்கு இலக்கணம் ஒப்பற்ற முயற்சி என்று கூறினால் மிகையாகாது. அதே போன்று நல்ல எண்ணம் என்னும் விதைகளை மனதில் போடும்போது அது பயனாகிறது. உங்களை நீங்கள்தான் உயர்த்திக் கொள்ள முடியும். மற்றவர்கள் உங்களை உயர்ந்நிட முடியாது. நீங்கள் உயர்ந்திட மற்றவர்கள் உதவலாம். உயர்த்திப் கொள்ள வேண்டியது நீங்கள்தான். சிந்தித்தது போதும் செயல்படுங்கள். தேடுவதை நிறுத்துங்கள், தேடியது கிடைக்கும் . வாழ்க்கையை செம்மைப்படுத்த வாழ்வாங்கு வாழ நல்லன கூட்டி,தீயன கழித்து உழைப்பை பெருக்கி, வாழ்வை நன்கு வகுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் வளமாக வாழலாம் வாகை சூடலாம்.
-பதிப்பகத்தார்.
-
This book Vaagai Soodalaam Vaa is written by Gunamangala Selvarachan and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் வாகை சூடலாம் வா, குணமங்கல செல்வராசன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaagai Soodalaam Vaa, வாகை சூடலாம் வா, குணமங்கல செல்வராசன், Gunamangala Selvarachan , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Gunamangala Selvarachan Suya Munnetram,குணமங்கல செல்வராசன் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Gunamangala Selvarachan books, buy Karpagam Puthakalayam books online, buy Vaagai Soodalaam Vaa tamil book.
|