-
பூமிப்பந்தின் அதிசயங்களில் உன்னதமானவற்றை பட்டியலிட்டால் நிச்சயமாக 'மரம்' என்பதற்கு மறுக்கமுடியாத ஓர் இடம் இருக்கும். மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லாமல் மனித இனம் ஒரு நிமிடம்கூட நீடிக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்காமல், மரங்களை காட்டுத்தனமாக வெட்டி வீழ்த்துவது சோகமான நிஜம்! 'வாழ்க்கையின் பல்வேறு தேவைகளுக்கு மரங்கள் அவசியப்படும்போது வெட்டித்தானே ஆகவேண்டும்' என்பதில் சந்தேகமில்லை... ஆனால், அதுவே கண்மூடித்தனமாக நடத்தப்படும்போது அதன் பாதிப்பை மனித சமூகம் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியிருக்குமே..? 'அப்படியென்றால் நமக்குத் தேவையான மரங்களுக்கு எங்கே போவது..?' என்றொரு கேள்வி எழும். அதற்கான பதில் _ 'மரங்களை விவசாய பயிர்களாக வளர்த்தெடுப்பதுதான்!' தற்போது, விவசாயிகளிடையே 'மரப்பயிர் வளர்ப்பு' என்பது பரவலாகி வருகிறது. காகிதத் தயாரிப்பில் ஆரம்பித்து கப்பல் கட்டுவது வரை, பல்வேறு தேவைகளுக்கும் மரங்கள் இன்றியமையாதவைகளாக இருக்கின்றன. இதையெல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் மரம் வளர்ப்பை பல்வேறு நிறுவனங்களும் ஊக்குவித்து வருகின்றன. இது ஒரு பணப்பயிர் என்பதாகவே தற்போது பார்க்கப்படுகிறது. மரங்கள் நம் பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் அதேசமயம், நாட்டில் மரங்கள் வளர வளர, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகள் குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, தம் தேவைகளைப் பூர்த்திசெய்தோடு, சூழலுக்கும் நன்மை செய்யும் வகையில் மரப்பயிர் வளர்ப்பில் ஈடுபட்டு, அசகாய சாதனைகளைப் படைத்துவரும் விவசாயிகள், 'பசுமை விகடன்' இதழில் வரிசையாக முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் சிலரை, உங்களுக்காக இந்த நூலில் பதியம் போடுவதில் விகடன் பிரசுரம் பெருமை கொள்கிறது.
-
This book Maram Valarpoam Panam Peruvoam is written by Vikatan Prasuram and published by Vikatan Prasuram.
இந்த நூல் மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம், விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maram Valarpoam Panam Peruvoam, மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம், விகடன் பிரசுரம், Vikatan Prasuram, Vivasayam, விவசாயம் , Vikatan Prasuram Vivasayam,விகடன் பிரசுரம் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vikatan Prasuram books, buy Vikatan Prasuram books online, buy Maram Valarpoam Panam Peruvoam tamil book.
|
மரம் வளரிபோம் உதவி தேவை மரக்கன்றுகள் தேவை ஓன்று சருவோம் பசுமை இந்தியாவை உருவாக்குவோம் திண்டுக்கல் மாவட்திளிருநடு
தொடங்குவோம் நாடு முழுக்க பசுமை உண்டாக்குவோம்
சென்னை: இரண்டாவது பசுமைப் புரட்சி தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும் என்றார் நடிகர் விவேக்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை நடிகர் விவேக் சந்தித்து பேசியபோது, மரக்கன்றுகள் நடும் அவசியத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து, தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் ‘பசுமை கலாம் திட்டத்தை’ தொடங்கியுள்ளார்.
முதல்கட்டமாக சென்னையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் நேற்று தொடங்கியது. வளசரவாக்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, எக்ஸ்னோரா அமைப்பு, விவேக் நற்பணி மன்றம் மற்றும் அமெரிக்கன் கண் மருத்துவ மையம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.
நிகழ்ச்சியில் நடிகர் விவேக் கலந்துகொண்டு, மரக்கன்றுகளை நட்டு, பசுமை கலாம் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
அவர் பேசுகையில், “பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவில் மீண்டும் பசுமை புரட்சி ஏற்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். நாட்டில், நீர் வேண்டும் என்றால் மழை வேண்டும். மழை வேண்டும் என்றால் மரம் வேண்டும்.
நாட்டில், விவசாயம், மண் வளம், ஆக்சிஜன் ஆகியவை குறைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் என்னிடம் கூறினார். 10 லட்சம் மரக்கன்றுகளை நடவேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஏற்று, திருச்சியில் பசுமை கலாம் திட்டம் தொடங்கப்பட்டது.
கோவையில் 23-ந் தேதி…
சென்னையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளேன். வரும் 23-ந் தேதி கோவையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 25-ந் தேதி சேலத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்படும்.
அதன்பிறகு, வேலூர், வேதாரண்யம், தஞ்சாவூர், அடுத்து நான் பிறந்த திருநெல்வேலி என ஒவ்வொரு ஊராக இந்த திட்டம் நிறைவேற உள்ளது. இறுதியாக 10 லட்சம் மரக்கன்றுகளின் இறுதி மரக் கன்றை கடலூரில் உள்ள கிராமம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நட்டுவைப்பார்.
வீட்டுக்கு இரண்டு மரம்….
ஒவ்வொருவரும் வீட்டில் 2 மரக்கன்றுகளை நடவேண்டும். இந்த விஷயம் மக்கள் மனதில் பதிய வேண்டும். இவ்வாறு மரக்கன்றுகள் நட்டால் காற்றில் நச்சுத் தன்மை குறையும். எனவே, தமிழகத்தில் இருந்து பசுமை புரட்சி தொடங்க வேண்டும்,” என்றார்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் பத்து லட்சம் மரக்கன்றுகளை நடுகிற பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார் நடிகர் விவேக்.
இதுவரை சுமார் மூன்றரை லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடித்திருக்கும் அவர், தனது லட்சியத்தை நிறைவடைய செய்யும் அந்த பத்து லட்சமாவது மரக்கன்றை கடலூரில் நட திட்டமிட்டிருக்கிறார். இவ்வளவு மரக்கன்றுகள் அவருக்கு எப்படி கிடைக்கின்றன, அதற்கான முதலீடு யாருடையது என்ற கேள்விகள் எழுமல்லவா? அதை ‘தி கிரீன் சென்டீ’ என்ற நர்சரி தோட்ட திறப்பு விழாவில் நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார் விவேக். இந்த தோட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சென்டீ என்றால் ஜப்பானிய மொழியில் பூத்துக்குலுங்கும் தோட்டமாம்.
விவேக் பேசும் போது கூறியதாவது:
“கலாம் அய்யா என்னிடம் தமிழகம் முழுவதும் டிசம்பர் மாதத்திற்குள் பத்து லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கேட்டுக் கொண்டவுடன் என்னால் முடியுமா என்ற எண்ணம்தான் முதலில் வந்தது. ஆனால் முயன்றுதான் பார்ப்போமே, அந்த முயற்சியில் தோற்றால் கூட தப்பில்லை. 500 கோடியில் தயாரிக்கும் ராக்கெட்டே புறப்பட்ட பத்தாவது நிமிடத்தில் கடலில் விழுந்துவிடுகிற போது, நமது லட்சியம் சரிவர நிறைவேறாமல் போனால் கலங்கிவிடக் கூடாது. முடிந்தவரை போராடிப் பார்ப்போம் என்று இறங்கினேன்.
ஆரம்பத்தில் நான் இப்படி நினைத்தாலும் இப்போது எனக்கு முழு நம்பிக்கை வந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, மரங்களை நாம் இப்போது நட வேண்டிய அவசியம் என்ன என்பதை விஞ்ஞான பார்வையோடு கலாம் என்னிடம் விளக்கியிருந்தார்.
இந்தியா முழுவதுமே 100 கோடி மரங்களை நட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம் எல்லாரும். அப்படி பார்த்தால் வீட்டுக்கு ஒரு மரம் என்று கூட சொல்ல மாட்டேன். ஆளுக்கொரு மரம் நட்டால்தான் அது முடியும்.
பத்து லட்சம் மரக்கன்றுகளை நான் நட வேண்டும் என்று கிளம்பியபோது ஒவ்வொரு ஊரிலும் எனக்கு பெரிய ஆதரவு கொடுத்தது மக்களும் சமூக அமைப்புகளும்தான். இந்த தோட்டத்தை நான் திறந்து வைக்க வேண்டும் என்று என்னை அழைத்தபோது நான் கேட்டது பணமல்ல. பதிலாக எனக்கு மரக்கன்றுகளை கொடுங்கள். நான் அவற்றை நட்டுக் கொள்கிறேன் என்றேன். நான் கேட்டவுடன் முப்பதாயிரம் மரக்கன்றுகளை தருவதாக கூறினார் தோட்டக்கலை நிபுணர் சரவணன். இவரைப் போன்றவர்களின் உதவியால்தான் நான் இப்படி ஒரு பெரிய காரியத்தை செய்ய முடிகிறது.
பத்து லட்சம் மரக்கன்றுகளை டிசம்பருக்குள் உங்களால் நட்டு விட முடியுமா? அப்படியே நட்டாலும் அதன் பிறகு அவற்றை பராமரித்து கண்காணிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். இதுவரை மூன்றரை லட்சம் மரக்கன்றுகளை நட்டு விட்டேன். இந்தப் பத்து லட்சம் மரகன்றுகளும் நடப்பட்டு நல்லபடியாக பரமரிக்கப் பட்டு வருகிறது என்ற பசுமைக் கணக்கை புகைபட ஆதாரத்துடன் நான் கலாம் அய்யா அவர்களிடம் ஒப்படைத்தாக வேண்டும். அவரை நான் ஏமாற்றி விட முடியாது.
சரவணன் போல தரமான மரக்கன்றுகளை கொடுத்து உதவ பலர் முன் வந்திருகிறார்கள். நான் ‘க்ரீன் கலாம்’ என்ற இந்த லட்சிய பயணத்தை தொடங்கிய பிறகு தமிழகம் முழுவதும் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்புக்கள் குவிந்த வண்ணம் இருகின்றன. ஒரு நடிகன் என்பதற்காக வரும் அழைப்புகள் அல்ல இவை. நல்ல லட்சியத்துகாக கிடைத்திருக்கும் அங்கீகாரம். ஒரு லட்சியத்தை தேர்ந்தெடுங்கள், அதை நோக்கி போராடுங்கள், அந்த லட்சியப்போராட்டத்தில் நீங்கள் கூட செத்து விடலாம். ஆனால் உங்கள் லட்சியம் ஒருபோதும் சாகாது என்று சொன்னார் சுவாமி விவேகாநந்தர். அவரது வார்த்தைகள்தான் எனக்கு இப்போது வேதம். கலாம் அவர்களின் வழிகாட்டல்தான் எனக்கு வேகம்,” என்றார்.
முன்னதாக நடைபெற்ற கிரீன் சென்டீ திறப்பு விழாவில், தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐஏஎஸ், கே.ஏ.செந்தில்வேலன் ஐபிஎஸ், டாக்டர் முத்துசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். அனைவரையும் தி கிரீன் சென்டீ நிறுவனர் சரவணன் வரவேற்றார்.
சென்னை: தமிழகம் முழுவதும் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் ‘பசுமை கலாம்’ திட்டத்துக்கு, தமிழக அரசு இலவசமாக மரக்கன்றுகள் தரவேண்டும் என்று நடிகர் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இந்தியா முழுவதும் 100 கோடி மரக்கன்றுகள் நடப்பட வேண்டுமென்று அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து நடிகர் விவேக் தன்னுடைய பெயரில் செயல்படும் நற்பணி மன்றங்களும், எக்ஸ்னோரா அமைப்பும் சேர்ந்து, தமிழ்நாட்டில் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யும் என்று அறிவித்திருந்தார்.
இந்த திட்டத்துக்கு `பசுமை கலாம்’ திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தின் எதிரொலியாக முதல் மரக்கன்று திருச்சியில் நடப்பட்டது.
தொடர்ந்து ஆங்காங்கு உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்ற வளாகங்களில் இந்த மரக்கன்றுகளை, மாணவர்களை பயன்படுத்தி நடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. பல தனியார் நிறுவனங்கள், தனியார் இந்த திட்டத்தில் பங்கு பெற ஆர்வத்தோடு இருக்கிறார்கள். வாகை, வேம்பு, பிளேம் ஆப் த பாரஸ்ட் போன்ற வகையான மரக்கன்றுகள் இந்த திட்டத்தின்கீழ் நடப்படுகின்றன.
இந்த நிலையில், நடிகர் விவேக் நேற்று தமிழக அரசு வனத்துறை அமைச்சர் பச்சைமால் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தார்.
இந்த திட்டத்தை நிறைவேற்ற மாணவர்கள், இளைஞர்கள் உள்பட ஏராளமானவர்கள் தயாராக இருக்கிறார்கள். மொத்தத்தில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் இருக்கிறது. வனத்துறை மூலமாக எவ்வளவு மரக்கன்றுகளை இலவசமாக தர முடியுமோ, அவ்வளவு மரக்கன்றுகளை தருவதற்கு பரிசீலிக்க வேண்டும் என்று ஒரு மனுவை கொடுத்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் பச்சைமால், இதுகுறித்து முதல்வரின் உத்தரவை பெற்று தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதி அளித்ததாக விவேக் கூறினார்.