ஆனந்த விகடன் (Ananda Vikatan)
இயற்கை தரும் இளமை வரம்
No Responses Tuesday 20 Jun 2017 | ஆனந்த விகடன் (Ananda Vikatan), புத்தக விமர்சனம் |
வட்டியும் முதலும்
No Responses Thursday 15 Jun 2017 | ஆனந்த விகடன் (Ananda Vikatan), புத்தக விமர்சனம் |
சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு
தற்கால நவீன மருத்துவம் செலவுமிக்கதாக இருக்கிறது. இதற்கு இன்ஷூரன்ஸ் வேறு செய்து கொள்ள வேண்டும். சம்பாத்தியம் முழுவதும் மருத்துவத்துக்கே சென்றுவிடுமோ என்று மருட்சியாக இருக்கிறது. ஆனால், இயற்கை, உணவிலேயே மருந்தைக் கொடுத்திருக்கிறது. மண்ணுக்குப் போகும் உடலைக் காக்க மண்ணிலிருந்து வரும் இயற்கை உணவும் மூலிகையுமே உதவுகின்றன. இந்த விந்தையை ஆற்றுகிறது இயற்கை. இந்த ரகசியத்தை சித்த மருத்துவம் நன்கு உணர்ந்திருக்கிறது. சித்த மருத்துவம் எளிதில் கிடைக்கும் மூலிகைப் பொருட்களையே உபயோகிக்கிறது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருட்களான எலுமிச்சம்பழம், அன்னாசிப் பழம் போன்ற எளிய உணவுப் பொருட்களே மருந்தாகின்றன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், ஆஸ்துமா, படர் தாமரை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், உதிரப்போக்கு, அல்சர், மஞ்சள் காமாலை, ஆண்மைப் பிரச்னை, மூச்சுத் திணறல்... போன்ற அனேக வியாதிகளுக்கு எளிய சித்த மருத்துவ முறைகளை இந்த நூலில் விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர் சுஜாதா ஜோசப். உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மூலிகைகளைத் தவிர மூலிகைகளைக் கொண்டு உடலில் பற்றுப் போடுதல், தோலின் மேலே களிம்புபோல வைத்துக் கட்டுதல் ஆகியவற்றையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர். சுவையைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டால் எளிய உணவுப் பொருட்களிலிருந்து ஆரோக்கியத்தை எளிதாகவும் செலவில்லாமலும் பெறலாம். மேலும், சித்த மருந்துப் பொருட்களைச் சுவைத்தும் சாப்பிடலாம். டாக்டர் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.
No Responses Wednesday 10 May 2017 | ஆனந்த விகடன் (Ananda Vikatan), புத்தக விமர்சனம் |
மோட்டார் வாகனச் சட்டம்
No Responses Tuesday 09 May 2017 | ஆனந்த விகடன் (Ananda Vikatan), புத்தக விமர்சனம் |
செய்… செய்யாதே!
எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. ஆனால், எல்லோரது கேள்விகளுக்கும் பதில் இருக்கிறதா..?! ‘நிச்சயம் இருக்கிறது’ என்பதுதான் சத்குருவின் நம்பிக்கை தரும் பதில். சிலருக்கு வாழ்க்கை பெரும் குழப்பம்தான். எதைச் செய்வது... எதைச் செய்யாமல் இருப்பது... என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள். எதைச் செய்தால் வாழ்க்கையின் சிகரத்தை எட்ட முடியும்? எதைச் செய்யாமல் இருந்தால் வாழ்க்கையின் சிக்கல்களில் இருந்து தப்ப முடியும்? நாம் சென்றுகொண்டிருக்கும் பாதை சரியான பாதைதானா? நம்முடைய சிந்தனைகளும் சரியானதா? வாழ்க்கை நமக்கு வசப்பட வேண்டுமானால், இப்படிப்பட்ட கேள்விகளைக் கடந்துதான் வரவேண்டியிருக்கிறது. வாழ்க்கை, பெரும் விசித்திரங்களையும் மாய வித்தைகளையும் தன்னுள் நிரப்பி வைத்திருக்கிறது. அவற்றைப் புரிந்து கொண்டால்தான் தெளிவு கிடைக்கிறது. வாழ்க்கையை வளமாக அமைத்துக் கொள்ள எண்ணற்ற கேள்விகளுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த நூலில் தெளிவான பதில் தருகிறார். ஆனந்த விகடன் இதழ்களில் ‘செய்... செய்யாதே!’ என்ற தலைப்பில் தொடராக வெளிவந்து, வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இந்த கேள்வி&பதில் பகுதி
No Responses Wednesday 03 May 2017 | ஆனந்த விகடன் (Ananda Vikatan), புத்தக விமர்சனம் |
குற்றவாளிக்கூண்டில் ராஜபக்ஷே
மரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’! கொடூரக் கொலைகளையும், திசை அறியாது பதைபதைத்து ஓடும் அவலத்தையும், குண்டு வீச்சுகளைத் தாங்கித் தாங்கி ஈரம் காய்ந்துபோன மண்ணையும் ஒருங்கே கண்டு நடுங்கிய ஈழ தேசத்து மக்களின் பரிதாப நிலைகளை, ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இதழ்கள் தொடர்ந்து கட்டுரைகளாக வெளியிட்டு, உண்மையை உலகறியச் செய்தன. இலங்கைத் தமிழர்களுக்கும், அவர்களின் வாழ்விடங்களை சீரழித்துவரும் சிங்களப் படையினருக்கும் உள்ள பல்வேறு நிலைப்பாடுகள் முதல், முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலித் தலைவர் பிரபாகரன் எதிர்கொண்ட இறுதிப்போர் வரை நடைபெற்ற சம்பவங்களைத் தொகுத்து, ‘ஈழம் இன்று!’ என்கிற தலைப்பில் ஏற்கெனவே நூலாக வெளியிட்டுள்ளது விகடன் பிரசுரம். அதிர்ச்சியூட்டும் புதிய உண்மைகள் அடங்கிய இரண்டாம் பாகம் இது. ஈழப் பிரச்னை, உலகலாவிய பிரச்னை ஆனதற்கான காரணம், தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படுவது, போர்க் குற்றங்கள், இலங்கை அரசின் இன்றைய அரசியல் நிலை... என பல்வேறு தகவல்களை இந்த நூலில் தொகுத்துள்ளார் நூலாசிரியர் ப.திருமாவேலன். தன் நாட்டு மக்களையே கொடூரமாகக் கொன்று குவித்து, சிறிதும் குற்ற உணர்வே இல்லாமல், கொடுங்கோல் ஆட்சி நடத்திவரும் ராஜபக்ஷே சகோதரர்களின் கூட்டுச்சதியை அம்பலமாக்கும் முக்கிய சாட்சியமே இந்த நூல்.
No Responses Wednesday 03 May 2017 | ஆனந்த விகடன் (Ananda Vikatan), புத்தக விமர்சனம் |
இயற்கை தரும் இளமை வரம்
‘அடுக்களையிலேயே இருக்கிறது அழகுக்கலை’ என்பதுதான் நம் முன்னோர்களின் சித்தாந்தம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறி மற்றும் பூ வகைகளைக் கொண்டே அழகைப் பாதுகாக்கும் அற்புதக் கலையை அறிந்துகொள்ள யாருக்குதான் ஆசை இருக்காது? இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டே அகத்துக்கும் புறத்துக்கும் வேண்டிய ஆரோக்கியம் மற்றும் தற்காப்பு முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மா, பலா, வாழை, பேரீச்சை, ஆரஞ்சு, தர்பூசணி... போன்ற பழ வகைகள், மல்லிகை, ரோஜா, சம்பங்கி... போன்ற பூ வகைகள், துளசி, மரிக்கொழுந்து... போன்ற மூலிகை வகைகளின் சிறப்புகளையும், அதில் ஒளிந்துள்ள சத்துகளையும், அவை நமது உடலின் அழகை எப்படிப் பாதுகாக்கிறது என்கிற விவரங்களை விளக்கும் விதமாக ‘இயற்கை தரும் இளமை வரம்’ என்கிற தலைப்பில் ‘அவள் விகடன்’ இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.
No Responses Tuesday 02 May 2017 | ஆனந்த விகடன் (Ananda Vikatan), புத்தக விமர்சனம் |
கனவு மெய்ப்பட வேண்டும்
தொலைநோக்குப் பார்வையோடும், சமதர்ம சிந்தனையோடும் சமூகத்தை உற்று நோக்கியவர் மகாகவி பாரதி. இனம், மொழி, நாடு, சாதி என்று அனைத்தையும் கடந்து சிந்தித்த அற்புத பிறவி! அடித்தட்டு மக்கள் சந்திக்கும் அவலங்களை எளிய கவிதை வரிகளாலே உணர்த்திய மாமனிதர்! அவருடைய புரட்சிகர சிந்தனைகளில் பெண்கல்வி, விதவை மறுமணம், பெண் விடுதலை, மதநல்லிணக்கம். கலப்புத் திருமணம் என எல்லாமே சமுதாய சீர்திருத்த நோக்குடன் அமைந்தவை. கொள்கைகள் யாருடையதானாலும், அதிலுள்ள குறைகளையும் நிறைகளையும் சமூக நலன் சார்ந்த கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, தன் கருத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்துவதில் பாரதிக்கு இணை பாரதிதான்! . சமூக மறுமலர்ச்சியையும், தேசத்தின் விடுதலையையும் தனது உயிர்மூச்சாகப் பாவித்த பாரதியின் கவிதைகள், உரைநடைகள், கடிதங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி, புரட்சிகரமான நடையில் இந்த நூலை எழுதியிருக்கிறார் தமிழருவி மணியன். மானுடத்துக்கும் மனிதநேயத்துக்கும் சான்றாக அமைந்திருக்கும் கவிஞரின் எண்ணங்களையும், அவர் ஏற்படுத்திய எழுச்சி மிகு மாற்றங்களையும் இந்த நூலில் தெளிவாக விளக்குகிறார். தேசத்தின் ஒற்றுமைக்கும், சமுதாய மேம்பாட்டுக்கும் உகந்த ஆழ்ந்த சிந்தனைகளைக் கொட்டிக் குவித்த ‘பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும்’ என்பதை தன் எழுத்தின் வன்மையோடு விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். தேசியம், தெய்விகம், மதம் என பல விஷயங்களிலும் பாரதியின் பார்வை எத்தகையது என்பதைப் படித்தறிய _ பகுத்தறிய உதவும் நூல் இது.
No Responses Monday 24 Apr 2017 | ஆனந்த விகடன் (Ananda Vikatan), புத்தக விமர்சனம் |
பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ்
இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்! பெண்கள் அறிவுமிக்கவளாக,அன்பு நிறைந்தவளாக, நேசப் பார்வை கொண்டவளாக, சுதந்திரம் உள்ளவளாக, நம்பிக்கை அளிப்பவளாக, பண்பு மிக்கவளாக தங்களை உருவாக்கிக் கொண்டால், இந்த உலகம் பெண்களை மிகப்பெரும் சக்தியாகப் போற்றும். அப்படிப்பட்ட பெண்களுக்கு ஆண்களும், அவர்களது குடும்பத்தாரும் நம்பிக்கையான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தால் நிச்சயம் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். பெண்கள் மன மகிழ்ச்சியோடு இருந்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். இதற்காக கோபம், சந்தேகம், மன அழுத்தம், பொருளாதாரம் போன்ற சிக்கலான சூழ்நிலைகளைக் கடந்து பெண்கள் முன்னேற வேண்டியுள்ளது. இப்படி, பெண்களின் மனநிலையை அறிந்து, அவர்களிடத்தில் சிக்கிக் கிடக்கும் மன அழுத்தங்களை விலக்கி, அவர்களின் இதயத்தை இலகுவாக்குகிறார் சுவாமி சுகபோதானந்தா. அவள் விகடன் இதழ்களில் ‘பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’ தொடராக வந்தபோதே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த தன் உணர்வு கட்டுரைகள், இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் வீற்றிருக்கிறது. பெண்களின் மன இறுக்கத்தையும், மனதில் ஏற்படும் சந்தேக நோயையும் விளக்கி, பெண்களின் வாழ்க்கையைப் பண்படுத்தும் பயனுள்ள நூல் இது!
No Responses Wednesday 19 Apr 2017 | ஆனந்த விகடன் (Ananda Vikatan), புத்தக விமர்சனம் |
பாஸ்வேர்டு
வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழையாக மனித வாழ்க்கையும் இருந்தால் யாருக்கு என்ன லாபம்? நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனித்து, வாழ்க்கை என்பது உயர்ந்த குணங்களுடன் வாழ்வதுதான் என்பதை உணர்ந்து, உயர்வாக நடப்பவர்களைப் போற்றி, அவர்களிடமிருந்து கற்று, அதன்படி ஒழுகி வாழ்வதும், கயவுச் சிந்தனைகளைத் தவிர்த்து வாழ்வதும்தான் வாழ்க்கை. அப்படி உயர்வாக வாழ்வது ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல. மனத் திண்மை ஒன்றால் மட்டுமே அது சாத்தியம்! அதுவே வீரம்! ஒரு நாள் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். எல்லோரைச் சுற்றியும் வாழ்க்கை இழைந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், சுற்றிலும் நடப்பதைக் கவனிப்பது எல்லோருக்கும் கைவந்த கலை அல்ல. அப்படிக் கவனித்து, பாலையும் நீரையும் பிரித்து பாலைப் பருகிச் சிறகை விரித்து வானில் எழும் அன்னப் பறவையைப் பால இருப்பவர்கள் மேன்மக்களே! இந்த நூலில் தன்னைச் சுற்றி நடந்தவற்றைக் கவனித்து அதில் மனிதர்களின் உணர்ச்சிகளை அளந்திருக்கிறார் நூல் ஆசிரியர் கோபிநாத். மனித உணர்வுகளை மதித்து நடந்தவர்களும் வந்து போகிறார்கள்; அதைக் காலில் போட்டு மிதித்துச் சின்னத்தனமாக நடந்துகொண்டவர்களும் வந்துபோகிறார்கள். ஆனாலும், யார் வழியில் நடந்தால் வாழ்க்கை நிம்மதி என்பது தெளிவாகத் தெரிகிறது! ‘இப்படியெல்லாம் நடந்துகொள்’ என்று ‘அட்வைஸ்’ செய்வது போல இல்லாமல், என்னால் மனிதனின் மகோன்னதத்தைப் பார்க்க முடிந்தது; உங்களாலும் முடியும் என்ற பாணியில் எழுதியிருப்பது சிலாகிக்கக் கூடியது. வாழ்க்கையில் சோர்ந்துபோனவர்களும், ஏமாற்றப்பட்டவர்களும்கூட மனிதன் மேல் இன்னும் நம்பிக்கைகொண்டிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது! எவ்வளவுதான் கொடூரங்கள் சுற்றிலும் நடந்தாலும் உலகம் கொடூரமானதல்ல சாதுவானவர்களும் ஈரம் உள்ளவர்களும் இந்த உலகத்தைக் காப்பாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற பெரிய நம்பிக்கை ஏற்படுகிறது. இவர்களால் தான் மழை இன்னும் பெய்கிறது. இது எல்லாமும் நம்மைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே சாத்தியம். மனிதத்தைப் போற்றும் இந்த நூல் உங்களை ஈர்க்கும் என்பது திண்ணம்!
No Responses Monday 17 Apr 2017 | ஆனந்த விகடன் (Ananda Vikatan), புத்தக விமர்சனம் |