ஜூ.வி. நூலகம்
'கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து
மனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று
புத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து
கவியெழுதும் எனக்கு மோட்சம் கிடைக்கப்பெறுமா அரசனிடமிருந்து?’ - என்று துணிச்சலாய் கேட்ட சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தன, இப்போது ஃபிரான்ஸில் வசிக்கிறார். 'மேரி எனும் மரியா’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்கள அரசால் 2000-ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அச்சம் இல்லாமல் தமிழர் தரப்பு நியாயங்களுக்காக இவரது கவிதைகள் பேசின. இலங்கை அரசால் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டபோது, இலங்கையில் வாழ முடியாமல் வெளியேறினார் மஞ்சுள வெடிவர்தன. சிங்களத்தில் அவர் எழுதிய கவிதைகளை, ஈழத்து தமிழ் இலக்கிய ஆளுமைகளான ஃபஹீமா ஜஹான், எம்.ரிஷான் ஷெரீப் ஆகிய இருவரும் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளனர். மேலும் படிக்க...
Saturday 21 Jun 2014 | ஜூ.வி. நூலகம் |
எல்.டி.டி.ஈ-யை காட்டி மிரட்டிய தமிழக போலீஸ் அதிகாரி!
ஆவணமற்றா அதிசயம்!
''என் இரவு தூக்கத்தைத் தமிழக அரசியல்வாதிகள் தொலைத்துவிட்டார்கள்'' - கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த எஸ்.ஒய்.குரைஷி ஆதங்கத்தோடு கொட்டிய வார்த்தைகள் இவை. இப்போது பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட குரைஷி,‘AN UNDOCUMENTED WONDER’ ஆவணமற்ற அதிசயம்) என்ற தலைப்பில் எழுதியிருக்கும் புத்தகம் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. திருமங்கலம் ஃபார்முலா, பண விநியோகம் என தேர்தல் தில்லுமுல்லுகளைத் தோலுரித்திருக்கிறார் குரைஷி. ஆனால், எந்த இடத்திலும் தனிப்பட்ட நபர்களின் பெயரையோ கட்சியின் பெயரையோ நேரடியாக குரைஷி குறிப்பிடவில்லை.
''தேர்தலில் அச்சுறுத்தல்கள் என்பது வெளியில் இருந்து மட்டுமல்ல... அதிகாரிகள் மட்டத்திலும் எதிரொலிக்கின்றன. நடுநிலை தவறும் அதிகாரிகளை உடனே மாற்றிவிடுவோம். 2011 சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்தவர், எஸ்.பி., டி.ஐ.ஜி-க்களை அழைத்து அரசியல் தொடர்பாக பேசிக்கொண்டிருப்பதாக தேர்தல் கமிஷனுக்குத் தகவல் வந்தது. அவருடைய அரசியல் செல்வாக்கால், போலீஸ் அதிகாரிகள் மீது கட்டுப்பாடு இருந்தது; இது ஆளுங்கட்சிக்கு உதவியாக இருக்கிறது என புகார்கள் வந்தன. இதனால், அவரை மாற்ற முடிவெடுத்தோம். சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து விசாரித்தோம். மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்குப் பார்வையாளராகப் போகச் சொன்னோம். உடனே அவர், 'தேர்தலைச் சீர்குலைக்கத் தமிழகத்தைத் தாக்க எல்.டி.டி.ஈ திட்டமிட்டிருக்கும் தகவல் உளவுத் துறை மூலம் கிடைத்திருக்கிறது. அதோடு தேசிய தலைவர்கள் மூன்று பேரைத் தாக்கவும் எல்.டி.டி.ஈ திட்டமிட்டிருக்கிறது’ என்று சொன்னார். அது தொடர்பாக முடிவு எடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடியை உருவாக்க முயன்றார். 'தேர்தலில் பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டால் உங்களைத்தான் சந்தேகப்படுவோம்’ என்று சொன்னேன். கடைசியில் அவர் விடுப்பில் மலேசியா சென்றுவிட்டார். அதன் பிறகு மத்திய உள்துறைச் செயலாளர் கோபால் பிள்ளையை அழைத்து விசாரித்தபோது 'எல்.டி.டி.ஈ மிரட்டல் எல்லாம் பொய். விடுதலைப் புலிகள் பற்றி அவருக்கு எதுவும் தெரிய வாய்ப்பு இல்லை’ என்றார். அதன் பிறகு மூன்று பேர் லிஸ்டில் இருந்து ஒருவரை உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி-யாகத் தேர்வு செய்தோம்'' என திகில் கிளப்பியிருக்கிறார் குரைஷி!
அடுத்து திருச்சியில் ஆர்.டி.ஓ-வாக இருந்த சங்கீதா பற்றி விவரிக்கிறார். ''பஸ்ஸில் 20 கோடி ரூபாய் பணம் கொண்டுசெல்லப்படுவதாக நள்ளிரவு 1.30 மணிக்கு சங்கீதாவுக்கு தகவல் கிடைக்க... உடனே பொன்நகர் ஏரியாவுக்குப் போகிறார் சங்கீதா. அங்கே பஸ்ஸும் இனோவா காரும் நிற்கின்றன. அருகில் இருந்த சி.ஆர்.பி.எஃப் போலீஸ்காரர்களுக்கு தகவல் கொடுக்கிறார் சங்கீதா. அவர்கள் வந்து சேர்வதற்குள் கார் கிளம்பிவிடுகிறது. பஸ்ஸை சோதனையிட்டபோது 5.01 கோடி ரூபாய் சிக்குகிறது.
சுய உதவிக் குழு, காது குத்துதல், மொட்டையடித்தல், ஆரத்தித் தட்டு, திருமண விழா என விதவிதமான வழிகளில் தேர்தலில் பணம் விநியோக விவகாரம் நடந்துவருகிறது. இப்படி 40 வழிகளில் பண விநியோகம் செய்யப்படுவதைக் கண்டறிந்தோம்.
2009-ல் மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலில் நடந்த பண விநியோகம் அமெரிக்கா வரை போனது. இதுபற்றிய உளவுத் தகவல் அமெரிக்காவுக்குப் போனதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது. அரசியல் கட்சிகளிடம் இருந்து வாக்காளர்களுக்கு லஞ்சமாகப் பணம், பொருள் வழங்குவது இந்தத் தேர்தலில் இருந்துதான் ஒரு அம்சமாக மாறியது. இது ஒரு குறிப்பிட்ட மத்திய அமைச்சரின் வெற்றி ஃபார்முலா ஆனது. திருமங்கலத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் வரை அந்த அமைச்சர் வழங்கினார். இந்த ஸ்டைல்தான் பிறகு 'திருமங்கலம் ஃபார்முலா’ எனப் பெயர் பெற்றது. 2011 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலின்போது திருமங்கலம் ஃபார்முலாவை முறியடிக்க தேர்தல் கமிஷன் புது ஃபார்முலாவைப் போட்டது. பீகாரில் கிடைத்த அனுபவத்தை வைத்து, தமிழகத்தில் பண ஆதிக்கத்தைத் தடுக்க ஆபரேஷனில் இறங்கினோம். பறக்கும் படைகள் மூலம் பண விநியோகத்தைத் தடுத்தோம். பணத்தை கொண்டுசெல்ல முடியவில்லை என்று வர்த்தக நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம். ஆனால், தன்னார்வக் குழுக்கள் இந்தத் தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டதால், தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச் தடையை விலக்கியது!'' என்று தைரியமாகக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இது ஆவணமற்ற அதிசயம்தான்!
- எம்.பரக்கத் அலி
மேலும் படிக்க...
Tuesday 20 May 2014 | ஜூ.வி. நூலகம் |
காந்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் ஒருமுறை சொன்னார், 'ரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை எதிர்காலச் சமுதாயம் நம்ப மறுக்கும்’ என்று. அப்படி ஒரு மனிதர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியிலும் உட்கார்ந்து இருந்தார். அவர்தான் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். இந்தியா சுதந்திரம் அடையும்போது, அன்றைய சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்தவர். அன்று, பிரதமர் என்றுதான் அழைப்பார்கள். மொத்தமே இரண்டு ஆண்டுகள்தான் அவர் அந்த நாற்காலியில் இருந்தார். அவர் கடைப்பிடித்த அரசியல் நாகரிகம், பொதுவாழ்க்கையில் ஒழுக்கம், நிர்வாகத் திறமை, துரித மான நடவடிக்கைகள் ஆகியவை இன்றுவரை பாடமாக இருக்கிறது.
மேலும் படிக்க...
Wednesday 25 Sep 2013 | ஜூ.வி. நூலகம் |
ஹிட்லர் என்ற பெயருக்கு இருக்கும் பிரபலமும் கவர்ச்சியும் உலகில் வேறு எவருக்கும் இல்லை. அவர் எழுதிய புத்தகமும் அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகமும் எத்தனை முறை வெளியிட்டாலும் எத்தனைபேர் வெளியிட்டாலும் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் வாசிக்கப்படுகிறது. எனவே உலகத்தின் ஹீரோக்களில் ஒருவராகத்தான் ஹிட்லரை சொல்ல வேண்டும். தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, இறந்துபோன பிறகும் போற்றப்படும் விமர்சிக்கப்படும் மனிதனாக இருக்கும் ஹிட்லரின் மறுபக்கத்தை எழுதி இருக்கிறார் வேங்கடம்.
மேலும் படிக்க...
Saturday 24 Aug 2013 | ஜூ.வி. நூலகம் |
கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்கக்கூட எம்ஜி.ஆர். அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க மாட்டார். 'நாடோடி மன்னன்’ படம் எடுத்து முடிப்பதற்குள் நாக்கு வறண்டுவிட்டது. சம்பாதித்த அனைத்தையும் கொட்டி எடுத்த படம் என்பதால், 'இந்தப் படம் வென்றால் மன்னன், இல்லாவிட்டால் நாடோடி’ என்று அவரது எதிரிகளே ஏளனமாகச் சொன்னார்கள். அடுத்தவர்களின் எதிர்பார்ப்புகளை முறியடிப்பதில் வல்லவரான எம்.ஜி.ஆர்., அந்தப் படத்தில் நடித்தார். அதில் எப்படி ஜெயித்தேன் என்று அவரே எழுதினார்.
மேலும் படிக்க...
Sunday 02 Jun 2013 | ஜூ.வி. நூலகம் |
சாதி ஒழித்தல் ஒன்று - நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால் - மறு
பாதி துலங்குவதில்லையாம் - என்றார் பாவேந்தர் பாரதிதாசன். சாதி ஒழிப்பு வீரர்கள் தமிழைப் புறக்கணிப்பதும், தமிழ்த் தீரர்கள் சாதிப் பிரச்னைகளை மறைத்துச் செயல்படுவதும்தான் இன்று தமிழ்ச் சமூகத்தில் நடக்கிறது. இந்த இரண்டு பிரச்னைகளையும் சம அளவில் வைத்துப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்பவர்கள் ஒருசிலர் மட்டுமே. அதில் முக்கியமானவர் பெ.மணியரசன். புரையோடிக்கிடக்கும் சாதித் திமிரை அடித்து நொறுக்கும்போதுதான் தமிழன் என்ற உணர்வு மேலோங்க முடியும் என்று உறுதியாக நம்பி எழுதப்பட்ட கட்டுரைகள் இவை.
மேலும் படிக்க...
Wednesday 29 May 2013 | ஜூ.வி. நூலகம் |
'பாளையக்காரப் புரட்சியின் தலைவர்கள்’ என்று, இந்திய வரலாற்று ஆசிரியர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டவர்கள் மருது சகோதரர்கள். இந்த இருவர்தான் வெள்ளையருக்கு எதிரான போரை ஒருங்கிணைத்து ஓர் இயக்கமாக்கி, வெள்ளையனை வெளியேறச் சொல்லி முறைப்படிப் பிரகடனம் செய்தவர்கள். 'வளரி’ என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு வெள்ளையரை அச்சுறுத்தியவர்கள். இலக்கைத் தாக்கிவிட்டு, எய்தவன் கைக்கே வந்துசேரும் வளரி இருக்கும் வரை மருது பாண்டியர்களை யாரும் வெல்ல முடியாது என்பார்கள். அதனால்தான் மருது பாண்டியரின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றியதும் வளரியைத் தேடித்தேடி அழித்தனர். அத்தகைய மாவீரர்களின் முழுமையான வரலாறு இது.
மேலும் படிக்க...
Wednesday 29 May 2013 | ஜூ.வி. நூலகம் |
பாரதிக்கு சீனி.விசுவநாதனைப் போல், பாரதிதாசனுக்கு கோ.இளவழகன். தான் எழுதிய மொத்தக் கவிதைகளையும் தாங்கள் வாழ்ந்த காலத்திலேயே அழகிய புத்தகமாக பார்க்க ஆசைப்பட்டனர் பாரதியும் பாரதிதாசனும். பாரதியின் கனவைச் சில ஆண்டுகளுக்கு முன், சீனி.விசுவநாதன் நிறைவேற்றினார். பாரதிதாசனின் விருப்பம் இப்போதுதான் நிறைவேறியுள்ளது.
'தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும்
தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும்’-
மேலும் படிக்க...
Saturday 04 May 2013 | ஜூ.வி. நூலகம், புத்தகங்கள் |
''தாழ்ந்த ஜாதியரை நாம் மிதமிஞ்சித் தாழ்த்தி விட்டோம். அதன் பயன்களை நாம் அனுபவிக்கிறோம். 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’. நாம் பள்ளர், பறையருக்குச் செய்ததையெல்லாம் நமக்கு இப்போது அன்னியர்கள் செய்கிறார்கள். நமது சிருங்ககிரிச் சங்கராச்சாரியாரும், வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளும் நட்டால், திரான்ஸ்வால் தேசங்களுக்குப் போவார்களானால், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்ய வேண்டும். சாதாரண மனிதர்கள் நடக்கும் ரஸ்தாக்களில் நடக்கக் கூடாது. பிரத்யேகமாக விலகி நடக்க வேண்டும். பல்லக்குகள், வண்டிகள் இவற்றைப் பற்றி யோசனையே வேண்டாம்.
மேலும் படிக்க...
Saturday 19 Jan 2013 | ஜூ.வி. நூலகம் |
இது போட்டிகள் நிறைந்த உலகம். இதில் கல்வியும் அறிவும் ஒருசேரப் பெற்ற மனிதனே வெற்றிபெற முடியும். கல்வியையும் பட்டங்களையும் கொடுக்கும் கல்லூரிகள், அறிவைக் கொடுக்கி றதா என்பது கேள்விக்குறி. இந்த நிலையில், அறிவு ஆயுதத்தை விகடன் பிரசுரம் தயாரித்துள்ளது; ஆண்டுதோறும் தயாரிக்கவும் உள்ளது.
'புறத்தை அறிந்துகொள்ளப் பயன்படுவது தகவல். தன் அகத்தை ஆராய்ந்து தெளிவதற்கு முற்படுவது அறிவு. வாழ்வின் இருப்பை விளங்கிக் கொள்ள வழிவகுப்பது ஞானம்’ என்று, இந்தப் புத்தகத்தின் முதல் கட்டுரையை எழுதியுள்ள தமிழருவி மணியன் சொல்கிறார். தகவல், அறிவு, ஞானம் ஆகிய மூன்றின் சேர்க்கையாகவே இந்த இயர்புக் உருவாகப்பட்டுள்ளது. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இறையன்பு ஐ.ஏ.எஸ், சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் ஆகியோர் வாழ்வியல் நெறியையும் கல்வியியல் திற மையையும் உணர்த்தும் கட்டுரைகளை எழுதி உள்ளனர்.
மேலும் படிக்க...
Sunday 06 Jan 2013 | ஜூ.வி. நூலகம் |