-
பத்திரிகைகளில் நகைச்சுவை உணர்வின் தனிச் சின்னம் ஆனந்த விகடன் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை. தேவன், கல்கி, எஸ்.வி.வி. தொடங்கி எத்தனையோ நகைச்சுவை ஜாம்பவான்கள் விகடனில் எழுதி மக்களை மகிழ்வித்தார்கள். ஓவியங்களிலும் நகைச்சுவையைச் சாதிக்க முடியும் என்று காட்டியவர்களும் விகடன் ஓவியர்களே. மாலி, ராஜு, கோபுலு, தாணு, மதன் போன்ற ஓவியர்களின் நகைச்சுவை ஓவியங்கள் காலத்தால் அழியாதவை.
விகடனின் ஆஸ்தான ஓவியர்களுள் முக்கியமானவர் ராஜு. நுட்பமான முக பாவங்கள், வெடித்துச் சிரிக்கவைக்கும் ஐடியா, சுற்றி இருக்கும் கேரக்டர்களின் ரியாக்ஷன்கள்...
இப்படியாக ஏதொன்றையும் விட்டுவிடாமல் கவனித்து நகைச்சுவையையும் அதற்கான சித்திரத்தையும் உயிரோட்டத்தோடு சித்திரிப்பதில் வல்லவர் ராஜு. அன்றாடம் நாம் சந்திக்கும் சாதாரண சம்பவங்கள், நாம் பேசும் பேச்சுக்கள் ஆகியவை ராஜுவின் கூரிய கவனம் என்னும் ரசவாதத்தின் வழியாக நம்மிடமே திரும்பி வரும்போது நகைச்சுவைத் தங்கமாக மாறியிருக்கும். 'அந்தக் கால ஜோக்ஸா..?' என்று யாரும் கேட்டுவிட முடியாதபடி, எந்தக் காலத்துக்கும் பொருத்தமான ஜோக்குகளாக இருப்பதை புத்தகத்தைப் புரட்டும்போது புரிந்துகொள்வீர்கள். சற்று முன்காலத்திய கலாச்சாரத்தைப் பற்றி ஓர் அறிமுகம் கிடைப்பது உபரி லாபம்.
அங்கங்கே நகைச்சுவை கிளப்புகள் தோன்றும் இந்தக் காலத்தில் உங்களுக்கென்றே சொந்தமாக ஒரு நகைச்சுவை கிளப்பை இந்தப் புத்தகத்தின் மூலம் உங்கள் வீட்டுக்குள் கொண்டுவந்துவிட்டீர்கள். பிறகென்ன... தொடருங்கள், ஆனந்தத்தை அனுபவியுங்கள்!
-
This book Raju jokes is written by Raju and published by Vikatan Prasuram.
இந்த நூல் ராஜு ஜோக்ஸ், ராஜு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Raju jokes, ராஜு ஜோக்ஸ், ராஜு, Raju, Jokes, ஜோக்ஸ் , Raju Jokes,ராஜு ஜோக்ஸ்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Raju books, buy Vikatan Prasuram books online, buy Raju jokes tamil book.
|