-
'மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த இந்த பிரபஞ்சத்துக்கே நீதான் பொறுப்பு' என ஒவ்வொருவரையும் தலைவனாக்குகிற வரிகள் அவை. அதைத்தான் தமிழருவி மணியனின் எழுத்துக்களும் செய்கின்றன.
தனி மனித உறவுகளில் தொடங்கி சமூக பொருளாதார பிரச்னைகள் வரை அற்புதமான மொழிநடையில் அலசும் இந்தக் கட்டுரைகள் சமுதாயத்துக்கு சத்து தரும் வைட்டமின் இலக்கியம். தாய்மை பற்றி எழுதும்போது இவரது பேனாவில் தாய்ப்பால் சுரக்கிறது, புரட்சி பற்றி எழுதும்போது கனல் தெறிக்கிறது. அகிம்சை பற்றி எழுதினால் கருணை நிறைகிறது. இப்படி வரிக்கு வரி அருவியாகுகிற இவரது தமிழ், படிக்கிற அத்தனை இதயங்களையும் இதமாக நனைத்து சிந்தனைகளில் குளிப்பாட்டுகிறது.
நேர்மையான அரசியல்வாதியாக, பேச்சாளராக, எழுத்தாளராக தமிழருவி மணியனை தமிழகம் நன்றாக அறியும். ஆனால், இந்தக் கட்டுரைகள் அவரது இன்னொரு பரிமாணத்தை எடுத்துக்காட்டுகிற வெளிச்ச வித்துக்கள். வள்ளலாரையும் பெரியாரையும் கலந்து செய்த தமிழருவி மணியனின் எழுத்துக்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியவை, பாதுகாக்க வேண்டியவை.
விகடனில் தொடராக வெளி வந்தபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள் இப்போது புத்தகமாக உங்கள் கைகளில்! கண்டிப்பாக இந்தப் புத்தகம் உங்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களை இன்னும் விசாலமாக்கும், உள்ளங்களில் ஒளியேற்றும்.
-
This book Oorukku Nallathu Solven is written by Tamilaruvi Manian and published by Vikatan Prasuram.
இந்த நூல் ஊருக்கு நல்லது சொல்வேன்!, தமிழருவி மணியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oorukku Nallathu Solven, ஊருக்கு நல்லது சொல்வேன்!, தமிழருவி மணியன், Tamilaruvi Manian, Ilakiyam, இலக்கியம் , Tamilaruvi Manian Ilakiyam,தமிழருவி மணியன் இலக்கியம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Tamilaruvi Manian books, buy Vikatan Prasuram books online, buy Oorukku Nallathu Solven tamil book.
|
தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல்.”கண்டிப்பாக இந்தப் புத்தகம் உங்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களை இன்னும் விசாலமாக்கும், உள்ளங்களில் ஒளியேற்றும்.”
இது அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். அன்பளிப்பாக கொடுக்க மிக சிறந்த புத்தகம்.
அடிமனத்தின் சுவடுகள் இந்த நூல் ஒவ்வொரு வரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் இந்த நூல் என்னை மிகவும் வெகுவாக பாதித்த நூல்……………. இந்த நூலை எழுதியதற்கு உங்களுக்கு மிகவும் நன்றி…………………..
வணக்கம், கலையரசி, தாங்கள் இந்த புத்தகத்தை பற்றி தானே சொல்கரீர்கள். http://www.noolulagam.com/product/?pid=3395
Oorukku nallathu solven – பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொரு மனிதரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, …… எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களை அந்த தலைப்புகளுக்கு ஏற்ப மிக அழகாக சொல்லியிருக்கிறார். நன்றி ஐயா
அ மனோகரன்