-
டியர் சுட்டிகளே! மாயா ஜாலங்களில் தேர்ச்சி பெற்று, எந்தக் கேள்விக்கும் கண் இமைக்கும் நேரத்தில் பதில் சொல்லக்கூடிய நிபுணத்துவம் வாய்ந்த மாயாவியை 'விசார்ட்' என்று அழைப்பார்கள். அதுதான் சுருக்கமாக, செல்லமாக 'விஸ்'. மந்திர தந்திர உலகின் சூப்பர் ஸ்டார் ஹாரிபாட்டர் _ ஒரு விஸ். அதுபோல, இந்த அறிவுப்பெட்டகத்தைத் திறந்து அரிய பொக்கிஷங்களை அள்ளி எடுக்கப் போகும் நீங்களும்_ சுட்டிகள் மத்தியில் ஒரு க்விஸ் விஸ்! தமிழ்நாடு முழுவதும் மூவாயிரம் பள்ளிகளிலிருந்து சுட்டிகள் பங்கேற்ற பிரமாண்டமான க்விஸ் நிகழ்ச்சி 'சுட்டி க்விஸ் விஸ்_2005'. ஏகப்பட்ட கேள்விகளோடும் பதில்களோடும் இந்தப் போட்டி ஒரு 'தகவல் திருவிழா'வாகவே கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட 1500 கேள்விகள் இதோ உங்களுக்காக ஒரு புத்தகமாக! இதில் தமிழ், ஆங்கிலம் _ இரண்டு மொழிகளிலும் கேள்வி_பதில்கள் தொகுக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சம். ஓய்வு நேரத்தில் படிப்பதற்கு மட்டுமல்ல... நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் அறிவுபூர்வமாக பொழுதுபோக்கும் வகையில் க்விஸ்ஸை ஒரு போட்டி விளையாட்டாகவும் ஆடலாம் என்பது இன்னொரு சிறப்பம்சம். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 10 மார்க் போட்டுக்கொள்ளுங்கள். விடைகள் புத்தகத்தின் இறுதியில் அளிக்கப்பட்டுள்ளன. அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடைகளை அளித்து நீங்கள் 15,000 மதிப்பெண்களையும் அள்ளவேண்டும் என்பதே என் ஆசை. வெற்றி பெற என் அட்வான்ஸ் பாராட்டுகளை உங்களுக்கு இப்போதே தெரிவித்துவிடுகிறேன். இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளாத மாணவர்களுக்கும், போட்டியில் கலந்துகொண்ட அளவு சந்தோஷத்தை இந்தப் புத்தகம் தரும் என்பது உறுதி! சிறந்த கேள்விகளைத் தயாரித்த க்விஸ் மாஸ்டர் சுதா சேஷய்யனுக்கும், க்விஸ் விஸ் போட்டிகளை நடத்த முழு ஒத்துழைப்பு அளித்த ஆரோக்யா நிறுவனத்துக்கும், இடம் தந்து உதவிய அனைத்து பள்ளிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
This book Chuti quiz wiz-2005 is written by Vikatan Prasuram and published by Vikatan Prasuram.
இந்த நூல் சுட்டி க்விஸ் விஸ் - 2005, விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chuti quiz wiz-2005, சுட்டி க்விஸ் விஸ் - 2005, விகடன் பிரசுரம், Vikatan Prasuram, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Vikatan Prasuram Siruvargalukkaga,விகடன் பிரசுரம் சிறுவர்களுக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vikatan Prasuram books, buy Vikatan Prasuram books online, buy Chuti quiz wiz-2005 tamil book.
|