லெனின் சந்தித்த நெருக்கடிகள்

லெனின் சந்தித்த நெருக்கடிகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: க. பூரணச்சந்திரன், தாரிக் அலி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.475
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அரிய தாதுப்பொருட்கள் (நீர்க்கோர்வையிலிருந்து நிரிழிவுவரை தடுக்க, வந்தபின் பாதுகாக்க) ரோசா லக்சம்பர்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அக்டோபர் புரட்சியின் விளைவுகளில் ஒன்றான சோவியத் அரசு வீழ்ந்து பட்டது என்பது குறித்தான தெளிவான ஓர்மையுடன் உலகமெங்கும் இன்று சோஷலிச சக்திகள் எதிர்கொண்டு வரும் புதிய சூழல்களையும் நெருக்கடிகளையும் முன்னிறுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இது இந்நூலின் குறிப்பிடத்தக்க சிறப்பாகும். மாபெரும் ரஷ்யப் புரட்சியின் தலைவரான விளாதீமிர் லெனினது வாழ்க்கைக் காலத்தையும் அக்டோபர் புரட்சியின் வரலாற்றுச் சூழலையும் இந்நூல் தழுவி நிற்கிறது என்ற போதிலும்,இன்றைய சூழல்களுக்கு ஏற்ப அன்றைய நெருக்கடிகளைத் தகவமைத்து வழங்கும் பணியினை இந்நூலின் ஆசிரியர் மிக அற்புதமாக மேற்கொண்டு இந்நூலை உருவாக்கியுள்ளார். ரஷ்யப் புரட்சியும் லெனினும் அக்காலத்தில் சந்தித்த சில முக்கியமான நெருக்கடிகளைக் குறிப்பாக அடையாளப்படுத்தி, அவற்றைத் தனித்து எடுத்துக் கோட்பாட்டுத் தளத்தில் ஆசிரியர் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளார். நூலின் ஆசிரியரான தாரிக் அலி பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்து மார்க்சியராக உருவாகியவர். பள்ளிப் பருவத்திலேயே முற்போக்கு எழுத்தாளர்களுடன் கவிதை அரங்கங்களில் பங்குகொண்டு உரத்த குரலில் மயகோவ்ஸ்கியின் கவிதைகளை வாசித்த அனுபவங்களை இன்றும் அவர் நினைவு கூர்கிறார். தாரிக் அலியின் குடும்பம் இங்கிலாந்து நாட்டுக்குக் குடிபெயர்ந்தபோது அவர் அங்கு ஒரு பிரிட்டிஷ் மார்க்சியர் ஆனார்.பிரிட்டிஷ் இடதுசாரி அரசியலில் நேரடிப் பங்கேற்பு கொண்டவராகவும் மத்தியக் கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய அரசியல்களில் அக்கறை கொண்டவராகவும் அவர் பரிணமித்தார். இரு அடிப்படை வாதங்களின் மோதல் என்ற அவரது நூல் இஸ்லாமியருக்கு எதிரான மேற்கத்தியப் பேரரசுகளின் சமீபத்திய ஆக்கிரமிப்புகளைத் தோலுரித்துக் காட்டும் நூல். லண்டனில் இருந்து வெளியாகும் நியூ லெஃப்ட் ரிவ்யூ பத்திரிக்கையின் நீண்ட கால ஆசிரியர் குழு உறுப்பினர்களில் தாரிக் அலியும் ஒருவர். நாடகம், திரைப்படம், நாவல் மற்றும் கவிதை இலக்கியங்களில் தாரிக் அலி தனது கனதியான பங்களிப்புகளை வழங்கியுள்ளார். குறைந்தபட்சம் நான்கு பிரச்சினைகளை இந்நூலில் தாரிக்அலி எடுத்துப் பேசியுள்ளார். முதல் பிரச்சினை: பயங்கரவாதம்,வெகுமக்களியம்,அராஜகம் ஆகியவற்றிலிருந்து ரஷ்யாவில் லெனினியம் உருவான கதை. இரண்டாவது பிரச்சினை: நூலில் பேசப்படும் அடுத்த பிரச்சினை ரஷ்யாவில் 1917 அக்டோபருக்கு முந்திய மாதங்களில் சோசலிசப் புரட்சி எனும் வேலைத்திட்டம் உருவான வரலாற்றை நோக்கியது. மூன்றாவது பிரச்சினை: அக்டோபர் புரட்சியின் மற்றும் லெனினியத்தின் சர்வதேசப் பரிமாணங்கள் குறித்து இப்பகுதி பேசுகிறது.லெனினியமும் மூன்றாம் உலக நாடுகளும் சந்திக்கும் இடங்களையும் இப்பகுதி சுட்டிக் காட்டுகிறது.ஏகாதிபத்தியம்,சர்வதேசியம்,மூன்றாம் அகிலம்,உலகப் போர்கள்,தேசிய விடுதலை இலக்கியம் ஆகியவற்றை நோக்கிய புதிய வரையறைகளையும் இப்பகுதி வழங்குகின்றது. நான்காவது பிரச்சினை: அக்டோபர் புரட்சிக்கு முந்தியும் பிந்தியுமான ஆண்டுகளில் ரஷ்ய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியில் நேரடி அரசியல் செயல்பாட்டில் ஈடுபட்ட பெரும் எண்ணிக்கையிலான பெண்களைப் பற்றியதாக தாரிக் அலியின் நூலின் இப்பகுதி அமைந்துள்ளது.

  • இந்த நூல் லெனின் சந்தித்த நெருக்கடிகள், க. பூரணச்சந்திரன், தாரிக் அலி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , லெனின் சந்தித்த நெருக்கடிகள், க. பூரணச்சந்திரன், தாரிக் அலி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,க. பூரணச்சந்திரன், தாரிக் அலி கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அயோத்திதாசரும் சிங்காரவேலரும் நவீன மறுமலர்ச்சி இயக்கம் வெளிவராத விவாதங்கள்

தமிழ்மொழிச் செல்வம்

கு. அழகிரிசாமி கட்டுரைகள் (பாகம் 1 & 2)

நவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள்

உலகளவில் புகழ்பெற்ற ஏழைகள்

வாழ்வாங்கு வாழ்தல்

தேகம் யாவும் - Dhegam Yaavum

மாற்றப்படுவதற்கு எதுவுமில்லை - Maatrapaduvatharkku Ethuvum Illai

தமிழர் பண்பாடு

ஆய்வும் தேடலும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கியத் திறனாய்வு - Ilakiya Thiranaaivu

வயல் (நாவல்)

தமிழ் மக்கள் வரலாறு - பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை (கி.பி. 1674 - 1793)

Experimental Biopharmaceutics and Pharmacokinetics

வற்றாத நினைவுகள்

நான் ஏன் நாத்திகன் ஆனேன்? - Naan En Naathigan Aanaen

பிங்கோவும் விஜியும் - Pingovum Vijiyum

அறிவு

முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் - Murpokku Ilakiya Semmalgal

அழுக்கு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91