நோம் சோம்ஸ்கி நவீன மொழியியலுக்கு ஓர் அறிமுகம்

நோம் சோம்ஸ்கி நவீன மொழியியலுக்கு ஓர் அறிமுகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கி. அரங்கன்
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மதங்கள் - இந்திய மதங்களும் இந்தியாவுக்கு வந்த மதங்களும் தொடக்க கால இஸ்லாம் (ஒரு சமூக-பண்பாட்டு பார்வை)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு மொழியைப் பேசுவோனின் பேச்சை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்டதொரு கோட்பாட்டின் பின்னணியில் அறிவியல் முறைகளைப் பின்பற்றி விவரிப்பது மொழியியல். முதலில் உருவானது அமைப்பு மொழியியல். இது மொழியின் தரவுகளைக் கொண்டு இலக்கணத்தை விவரிக்கிறது. இதற்கு மாற்றாக, பேசுவோரின் மனம் மொழியின் தரவுகளை அலசுகிறது என்பதன் அடிப்படையில் ஆக்கமுறை இலக்கணம் என்னும் புதிய கோட்பாட்டை முன்வைத்தார் நோம் சோம்ஸ்கி. ஒரு மொழியின் இலக்கண வடிவத்தைத் தீர்மானிக்கும் கொள்கை, மனித உடலின் பிற உயிரியல் வளர்ச்சிகள் போல, மனித மனத்தில் தீர்மானிக்கப்படுகிறது; இந்தத் திறன் மரபணு வழியாக அடுத்த தலைமுறைக்குப் போகிறது என்கிறார் சோம்ஸ்கி. எல்லா மனிதர்களும் தங்களுடைய சமூகப் பண்பாட்டு வேறுபாடுகளைக் கடந்து, ஒரே அடிப்படை இலக்கண வடிவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என வாதிடுகிறார் அவர். மொழிகளின் இலக்கணங்களிடையே உள்ள வேறுபாடுகள் இந்த அடிப்படை இலக்கணத்திலிருந்தே உருவாகின்றன; மனித மொழி பிற உயிரினங்களின் நடத்தை சார்ந்த தகவல் தொடர்பு வடிவங்களிலிருந்து வேறுபட்டது என்றும் கூறுகிறார். நூலாசிரியர் கி. அரங்கன் இந்த நூலில், சோம்ஸ்கிக்கு முன்னிருந்த மொழியியல் கோட்பாடுகளையும் அவரால் முன்னெடுக்கப்பட்ட ஆக்கமுறை இலக்கணக் கோட்பாடு மொழியியலில் ஏற்படுத்திய தாக்கத்தையும் விளக்குகிறார். சோம்ஸ்கியின் கோட்பாடு புலனறி உளவியலின் பகுதியாக எப்படி வளர்ந்தது? அது மொழிப் பொதுமைகளை எவ்வாறு கண்டுபிடிக்க முற்பட்டது? போன்ற கேள்விகளுக்கு சோம்ஸ்கியின் கொள்கைப் பலத்தில் விடையளிக்கிறார் நூலாசிரியர். மேலும் இந்தப் புத்தகம் ஆக்கமுறை இலக்கணக் கோட்பாடு உளவியலிலும் தத்துவத்திலும் ஏற்படுத்திய தாக்கங்களைத் தனித்தனி இயல்களில் விளக்குகிறது. இறுதி இயல் சோம்ஸ்கியின் அரசியல் விமர்சனத்தைப் பற்றிப் பேசுகிறது. இது மனித மனம் இயற்கையில் மனித உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராடும் இயல்புடையது என்னும் சோம்ஸ்கியினுடைய கோட்பாட்டை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது. இலக்கணம், மனித உரிமை போன்றவற்றில் ஆர்வமுடையவர்கள் படிக்க வேண்டிய ஒரு முக்கியமான புத்தகம்.

  • இந்த நூல் நோம் சோம்ஸ்கி நவீன மொழியியலுக்கு ஓர் அறிமுகம், கி. அரங்கன் அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நோம் சோம்ஸ்கி நவீன மொழியியலுக்கு ஓர் அறிமுகம், கி. அரங்கன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,கி. அரங்கன் கட்டுரைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ரோபோஜாலம்

பண்பாட்டு முகப்பில்

நான் கண்ட பாரதி ஒரு வேதாந்த வித்தகன்

அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் - 2 - Ayyavin Adichchuvattil Part - 2

கடற்கோள் காலம்

குமரியில் சமணத்தின் சுவடுகள்

காஃப்கா எழுதாத கடிதம்

ஒருபாலுறவு - Orupaaluravu

வாழ்க்கைக்கு அறம் - Vaazhkkaikku aram

பாரதியின் கதைகள், கடிதங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாடகம் நிகழ்வு அழகியல்

மனநல மருத்துவர் இல்லாத இடத்தில் - Mananala Maruthuvar Illatha Idathil

புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்

அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள

தத்துவம் - மிகச் சுருக்கமான அறிமுகம்

விஷன்ஸ் கையேடு (தலைமைத்துவமும் வாழ்க்கைத் திறன்களும்)

அன்பின் சிப்பி

ஜென் சதை ஜென் எலும்புகள்

ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் - Oru Mamaramum Konjam Paravaigalum

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91