-
ஆனந்த விகடனில் வெளியாகிக் கொண்டிருக்கும் ‘ஹாய் மதன்’ பகுதிக்கு கேள்விகளை பவுன்சர்களாக வாசகர்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்க, அவற்றை சவாலாக ஏற்று, சிக்ஸர்களாகவும் பவுண்டரிகளாகவும் விளாசிக் கொண்டிருக்கிறார் மதன்! (T20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்த சமயத்தில் எழுதப்பட்டது!) பொது நூலகங்களிலும் சரி, வீடுகளில் புத்தக அலமாரிகளிலும் சரி, கண்டிப்பாக இருக்க வேண்டிய நூல்கள் வரிசையில் ‘ஹாய் மதன்’ தொகுப்புகள் முக்கிய இடம் பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம். தேவைப்படும் நேரங்களில், தேவைப்படும் பொது அறிவு விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஒரு கையேடாக இவை பயன்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள் முதல் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் இதுவரை வெளியான ஐந்து பாகங்களையும் பாதுகாத்து வரும் தகவலை எங்களுக்கு வரும் கடிதங்கள் மூலமாக அறியமுடிகிறது. மதன் பதில்களை சமூகத்தில் பெருமைக்குரிய இடத்தில் இருப்பவர்களும் உன்னிப்பாகப் படித்து வருகிறார்கள். உதாரணமாக, இந்த நூலில், ‘கவிஞர் வைரமுத்துவின் நோபல் பரிசு நம்பிக்கை வீண்போகாமல் இருக்குமா?’ என்ற ஒரு கேள்விக்கு, மதன் அளித்த பதிலுக்கு, வைரமுத்து எழுதிய விரிவான விளக்கத்தைக் குறிப்பிடலாம். எல்லா பதில்களுமே அறிவியல், விஞ்ஞானம், மருத்துவம் சார்ந்ததாகவே இருக்குமேயானால் அவை ‘டெக்ஸ்ட் புக்’ மாதிரி ஆகிவிடும் அபாயம் உண்டு. அதனாலேயே ஜாலியான சில பதில்களும் இந்த ‘ஹாய் மதன்’ தொகுப்புகளில் இடம் பெறுகின்றன. விகடனில், 2003 நவம்பர் முதல் 2004 அக்டோபர் வரை வெளியான கேள்வி_பதில்கள் இந்த ஆறாம் பாகத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. படித்துப் பயன் பெறுங்கள்!
-
This book Hai Mathan (part 6) is written by Madhan and published by Vikatan Prasuram.
இந்த நூல் ஹாய் மதன் (பாகம் 6), மதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Hai Mathan (part 6), ஹாய் மதன் (பாகம் 6), மதன், Madhan, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Madhan Kelvi-Pathilgal,மதன் கேள்வி-பதில்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Madhan books, buy Vikatan Prasuram books online, buy Hai Mathan (part 6) tamil book.
|