-
மாரடைப்பை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியுமா? ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்ட் பைபாஸ் அறுவைச் சிகிச்சையால் உயிருக்கு ஆபத்து வருமா?
அறுவைச் சிகிச்சையை யாருக்கு செய்யலாம்? யாருக்கெல்லாம் செய்யக் கூடாது?
ஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் சர்ஜரிக்குப் பிறகு மீண்டும் மாரடைப்பு வருமா?
ஏழை மக்கள் இலவசமாக பைபாஸ் உள்ளிட்ட பிற இதய நோய் சிகிச்சைகளைப் பெற என்ன வழி?
இரண்டாவது மாரடைப்பு எப்போது வரும்? அதைத் தடுப்பது எப்படி?
போன்ற மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களுக்கான நவீன சிகிச்சை முறைகள், மாரடைப்பைத் தவிர்க்கும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
நூலாசிரியர் இ. பக்தவச்சலம், பொது மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றவர். காச நோய் மற்றும் நெஞ்சக நோய்களுக்கான சிறப்பு டிப்ளமோ முடித்தவர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். 36 ஆண்டுகளாக மருத்துவச் சேவை ஆற்றி வரும் இவர், பொது மருத்துவம், இதயம், நுரையீரல் பிரச்னைகளுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
-
This book Heart Attack: Bayam Mudhal Bypass Varai is written by Dr.E. Bhaktavachalam and published by Nalam Pathippagam.
இந்த நூல் ஹார்ட் அட்டாக் - பயம் முதல் பைபாஸ் வரை, டாக்டர்.இ. பக்தவச்சலம் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Heart Attack: Bayam Mudhal Bypass Varai, ஹார்ட் அட்டாக் - பயம் முதல் பைபாஸ் வரை, டாக்டர்.இ. பக்தவச்சலம், Dr.E. Bhaktavachalam , Maruthuvam, மருத்துவம் , Dr.E. Bhaktavachalam Maruthuvam,டாக்டர்.இ. பக்தவச்சலம் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy Dr.E. Bhaktavachalam books, buy Nalam Pathippagam books online, buy Heart Attack: Bayam Mudhal Bypass Varai tamil book.
|
மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள்
சாதாரணமாக நாம் நெஞ்சுவலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று எண்ணும் அளவுக்கே மருத்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறோம்.
வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்ப உரிய மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.
அதைவிடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்புதான் ஏற்பட்டு விட்டதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.
உடல் வலி, அழுத்தம், இறுக்கம் போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன.
ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான வலி இருக்கும். ஆனால், நோய் தீவிரம் அதிகம் இருக்கக்கூடும்.
உங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளை மருத்துவப் பரிசோதனையின்போது மருத்துவரிடம் எடுத்துரைக்க வேண்டும்.
குறிப்பாக உடலின் எந்தப் பாகத்தில் வலி ஏற்படுகிறது? ஓய்வின்போது வலி குறைகிறதா? இரவு பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது? என்பன போன்றவற்றை சொன்னால், அதற்கேற்ப சிகிச்சை முறைகள் உள்ளன.
மாரடைப்பு நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளை உடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் ஏற்படும் அறிகுறிகளாவன:
நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது; அதிக வியர்வை; நெஞ்சு இறுக்கம்; மூச்சுத் திணறல்; இடது தோள்பட்டை கைகள், தாடை மற்றும் பற்களில்கூட வலி பரவுதல் போன்றவை.
ஆண்களுக்குப் பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவதுபோல் தோன்றும். பெண்களுக்கு மூச்சுத் திணறல், மேல்வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றக்கூடும்.
அறிகுறிகளைத் தெரிந்து கொண்ட பிறகு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம். இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.
பரிசோதனைகளைச் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதைத் தடுக்கலாம்.
எனவே நெஞ்சுவலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ள நிலையில், அதனை மாரடைப்பு என்று தவறாக நினைத்து வருந்தத் தேவையில்லை.