கனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meyppada Vendum

Kanavu Meyppada Vendum - கனவு மெய்ப்பட வேண்டும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பிரபஞ்சன் (Prapanchan)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN :
Pages : 240
பதிப்பு : 4
Published Year : 2010
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கனவு மத்தாப்பூ விளையாட்டு வடிவில் கணக்கு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சாதாரணமாய் வீட்டிற்கு வந்ததும் தையல் மிஷினைப் பிரித்து எதையாவது தைத்துக் கொண்டிருக்கும் மகள், இன்று உடையைக்கூட மாற்றாமல், வெறித்துப் போன பார்வையுடன் தந்தையின் போட்டோ எதிரில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு மீனாட்சி பதறிப் போனாள்
    “மிதிலா... ஒடம்புக்கு ஏதாச்சுமா? மொகம்கூட அலம்பிக்காம ஒக்காந்திருக்கியே!”
    பதில் வரவில்லை.
    மகளின் கூந்தலை மெல்ல வருடுகையில் அவள் விழிகளில் மெல்லிய ஈரம் படிந்தது.
    குட்டி இளவரசியாய் வேளைக்கு ஒரு டிரஸ், நாளைக்கு ஒரு நகை என்று புள்ளிமானாய்த் திரிந்த என் மகள்...
    சிரிப்பும் குறுகுறுப்புமாய்த் தந்தையின் செல்லக் குட்டியாய் மடியில் உட்கார்ந்து கதைகளாய்க் கேட்ட என் மகள் -
    அழகுப் பெட்டகமாய்ப் பட்டுப் பாவாடை தாவணியில் பருவக் குயிலாய்ப் பாடித் திரிந்த என் மகள்...
    மணல் வீடு சரேலெனச் சரிகிற வேகத்தில், அத்தனை ராஜவசதிகளும் தொப்பென விழுந்து சாம்ராஜ்யமே பூமிக்குள் அமிழ்ந்து போன கொடுமை!
    மாதச் சம்பளத்திற்கு வேலைக்குப் போனால்தான் இரண்டு வயிறும் நிறையும் என்கிற இன்றைய நிலைமையை நினைக்கையில் வயிறு குப்பென்று சுருங்க, மீனாட்சி மகளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.
    “அப்பா ஞாபகம் வந்திடுச்சா, மிதிலா?”
    அதற்கும் பதிலில்லை.
    “போனதெல்லாம் போகட்டும்டி, குழந்தே... பழசை எல்லாம் குழி தோண்டிப் புதைச்சுட்டேன்... நீயும் எல்லாத்தையும் மறந்துடு.”
    மிதிலா மெல்லத் தலையை உயர்த்தித் தாயைப் பார்த்தாள்.
    அம்மா!
    என் இனிய அம்மா!
    எப்போதும் பட்டுப் புடவையும், இரட்டை வடமும், இடுப்பில் வெள்ளிச் சாவிக் கொத்துமாய் வளைய வந்த அம்மா.
    அழகிய வட்ட முகத்தில் திலகமாய்க் குங்குமம் மின்ன, ரவிவர்மா ஓவியத்தில் வரும் பெண் தெய்வம் மாதிரி எழிலும் கனிவும் நிறைந்த அம்மா.
    இதழ்களில் மிருதுப் பேச்சும் நளினப் புன்னகையுமாய் வீட்டை ஆட்சி செய்த அம்மா.
    பெண்டாட்டி தாசன் என்று உலகமே சொல்கிற அளவுக்கு அப்பாவைத் தன் அன்பாலும் அழகாலும் கட்டிப் போட்ட அம்மா...
    இன்றைக்கு வெள்ளைப் புடவையும் விபூதிக் கீற்றும் ஒட்டிப்போன முகமும் வறண்டு போன தேகமும் பலவீனப்பட்டுப் போன இருதயத்துடனும் நலிந்து நிற்கும் கொடுமை!
    “அம்மா...” அடி வயிற்றிலிருந்து புறப்பட்ட ஒரு விம்மல் தொண்டை வழியே வெடித்துச் சிதற, அவள் தாயை இறுக அணைத்துக் கொண்டாள்.
    விழிகள் நீரைப் பெருக்கின.
    மீனாட்சி உணர்ச்சி வசப்பட்டவளாய் மகளின் கண்ணீரைத் துடைத்துச் சொன்னாள்.
    “ஏம்மா அழறே? என் ராஜாத்தி. நீ ஏன் அழறே...? நம்மையெல்லாம் இந்த நெலைமைக்குக் கொண்டு வந்தானே சங்கரலிங்கம், அவன் அழணும். கதறணும்... அப்பாவைப் படுக்கைல தள்ளிச் சிறுகச் சிறுகச் சாகடிச்சானே, அவன் அழணும்டி மிதிலா... ஆனா... ஆனா... அவன் செழிச்சிட்டிருக்கானே... காரும் பங்களாவுமா கொழிச்சிட்டிருக்கானே!”
    அவள் சரேலெனத் தாயின் பிடியிலிருந்து விலகினாள்.

  • This book Kanavu Meyppada Vendum is written by Prapanchan and published by Kavitha Publication.
    இந்த நூல் கனவு மெய்ப்பட வேண்டும், பிரபஞ்சன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanavu Meyppada Vendum, கனவு மெய்ப்பட வேண்டும், பிரபஞ்சன், Prapanchan, Novel, நாவல் , Prapanchan Novel,பிரபஞ்சன் நாவல்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Prapanchan books, buy Kavitha Publication books online, buy Kanavu Meyppada Vendum tamil book.

ஆசிரியரின் (பிரபஞ்சன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எமதுள்ளம் சுடர்விடுக

நானும் நானும் நீயும் நீயும் - Naanum Naanum Neeyum Neeyum

பதவி - Pathavi

ஒரு மனுஷி - Oru Manishe

எனக்குள் இருப்பவள் - Enakkul Irupaval

நேசம் மறப்பதில்லை - Nesam Marappathile

தாழப் பறக்காத பரத்தையர் கொடி - Thazhaparakkaatha Parathayar Kodi

சுகபோகத் தீவுகள் - Suga Pogath Theevugal

பிரபஞ்சன் கட்டுரைகள்

பதவி (old book rare)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஒரு நடிகர் உருவாகிறார்

வேங்டாக்கில் வந்த கஷ்டம் (சத்யஜித் ரே) - Vengtalkil Vantha Kashtam(Sathyajith Re)

கடவுளின் நாற்காலி

இருபது கோடி நிலவுகள் - Irubadhu Kodi Nilavugal

கிளி நின்ற சாலை

மலரே..! மௌனமா..?

பூக்கோலம்

தலைவன் சூட நீ மலர்ந்தாய் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

சாயத்திரை (சுற்றுச்சூழல் நாவல்)

நந்தினி (சாகித்ய அகாடமி பரிசுபெற்ற சிந்தி மொழி நாவல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை

ஈரோடு தமிழர் உயிரோடு (பெரியார் வரலாறு) - Erode Tamizhar Uyirode (Periyar Varalaru)

பாரதி பாரட்டிய புதுமன்னன் லெனின் - Bharathi Paarattiya Puthu Mannan Lenin

ஸென் பரவெளியின் பரவசங்களும் பாடல்களும் - Zen Paravelin Paravasangalum Paadalkalum

நம்பிக்கை நட்சத்திரமாய் - Nambikkai Natchathiramai

கடவுள் உங்கள் உள்ளேதான் இருக்கிறார் - Kadavul Ungal Ullae Thaan Irukkirar

தேடாதே (ஜென் நூல்) - Thedathey (Zen Nool)

விளையாட்டு வடிவில் கணக்கு

நிஜங்கள் - Nejangal

தீயிலே வளர்சோதி - Theeile Valarsothi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91