தினமணி
லீ குவான் யூ : சிங்கப்பூரின் சிற்பி
No Responses Wednesday 16 Aug 2017 | தினமணி, புத்தக விமர்சனம் |
தமிழ்க்கதிர் வ.சுப.மாணிக்கனார்
தமிழ்க்கதிர் வ.சுப.மாணிக்கனார் - இரா.மோகன், நிர்மலா மோகன்; பக்.230; ரூ.150; வானதி பதிப்பகம்,
தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நூல் இது. ஒருவரது நூற்றாண்டு விழா எனில் அவரது வாழ்க்கை வரலாறு, படைப்புகள், விருதுகள் என தனிப்பெருமை போற்றும் வழக்கமான நிலையில், வ.சுப.மாணிக்கனாரின் தமிழ் நூல்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக்கியிருக்கிறது.
தொல்காப்பியத்தை மற்ற பேராசிரியர்களிலிருந்து வ.சுப.மாணிக்கனார் எப்படி வேறுபட்டு பார்க்கிறார் என்பது மிக நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது.
தமிழ் பல்துறை ஆராய்ச்சிக்கு உரியதாக வளர்ந்தாலும், யாப்பு குறித்த ஆய்வு தூக்கலாக இல்லை என வ.சுப.மாணிக்கனாரின் ஆதங்கத்தைச் சுட்டிக்காட்டி தற்கால தமிழ் ஆய்வாளர் நிலையை ஆதங்கத்தோடு நூலாசிரியர்கள் சொல்லியிருக்கின்றனர். சங்க இலக்கியத்தில் அகத்திணை பற்றிய பாடல்கள் அனைத்தையும் ஒரு சேர வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டது மாணிக்கனார் மட்டுமே என்பதை அறியும் போது அவரது தமிழ்ப்பணியின் மாண்பை அறியலாம். வ.சுப.மாணிக்கனார் குறித்த நூல்களின் பட்டியலுடன், அவர் எழுதத் திட்டமிட்டிருந்த நூல்களின் பட்டியல், அவருடைய பொன்மொழிகள் என தொகுத்திருப்பதும் சிறப்பாகும்.
No Responses Thursday 02 Mar 2017 | தினமணி, புத்தக விமர்சனம் |
ஆனந்த யாழ்
ஆனந்த யாழ் - ஆரூர் தமிழ்நாடன்; பக்.264; ரூ. 170; நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்.
திரைப்படப் பாடலாசிரியராகவும், சிறந்த கவிஞராகவும் அறியப்பட்ட நா.முத்துக்குமார், கடந்த ஆண்டு அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவருடனான தங்களின் பழக்கத்தையும் நெருக்கத்தையும் அவருடைய நண்பர்கள், நலம் விரும்பிகள், திரையுலகப் புள்ளிகள், அரசியல் பிரபலங்கள் போன்ற பல்வேறு துறையினரும் வெவ்வேறு ஊடகங்களில் பதிவு செய்ததன் தொகுப்புதான் இந்நூல். மேலும் படிக்க...
No Responses Tuesday 21 Feb 2017 | தினமணி, புத்தக விமர்சனம் |
லாபம் தரும் ஜீரோ பட்ஜெட்
லாபம் தரும் ஜீரோ பட்ஜெட் - பக்.168; ரூ.115; விகடன் பிரசுரம்,
பசுமை விகடனில் பல வாரங்கள் தொடராக வெளிவந்து விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம்.
நெடுங்காலமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்த நாம், இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் விவசாயம் செய்ய ரசாயன உரங்களைப் பயன்படுத்த தொடங்கினோம். இதன் காரணமாக, உணவு தானியங்களிலும், காய்கறிகளிலும் நஞ்சு கலக்கப்படுவதுடன், மண்ணின் இயற்கைத் தன்மையும் மாறி வருகிறது.
ரசாயனப் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகள் பயணப்படுவதற்காக பல்வேறு முயற்சிகளை தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மேற்கொண்டார். மேலும் படிக்க...
No Responses Tuesday 07 Feb 2017 | தினமணி, புத்தக விமர்சனம் |
சிவபெருமானுடன் ஒரு திருநடனம்
மேலும் படிக்க...
No Responses Tuesday 07 Feb 2017 | தினமணி, புத்தக விமர்சனம் |
பிரயாணம் – பாவண்ணன்
பிரயாணம் - பாவண்ணன்; பக்.216; ரூ.190; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்-1;
http://www.noolulagam.com/product/?pid=31273பாவண்ணன் 1984இல் இருந்து எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 சிறுகதைகளின் தொகுப்பு.
நம்மைச் சுற்றி வாழ்கிற பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை, மன உணர்வுகளை மிகவும் அற்புதமாகச் சித்திரிக்கும் சிறுகதைகள் ஒவ்வொன்றும் நமக்குக் காட்டும் உலகு வித்தியாசமானது. நாம் அறிந்து கொள்ள வேண்டியது. மேலும் படிக்க...
No Responses Saturday 04 Feb 2017 | தினமணி, புத்தக விமர்சனம் |
கனவோடு நில்லாமல்
கனவோடு நில்லாமல் - ஜெ.சதக்கத்துல்லாஹ்; பக்.224; ரூ.150; வானதி பதிப்பகம், சென்னை-17; )044- 2434 2810.
மதுரை மாநகராட்சிப் பள்ளி ஒன்றில் படித்த சிறுவன் ஒருவன் ஒன்பதாவது படிக்கும்போது தந்தையை இழந்து வாடுவதும், தொடர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுவதும், தன்னுடன் பிறந்த தம்பிகளின் படிப்பு, எதிர்காலம் ஆகியவற்றுக்காக படிப்பை நிறுத்திவிடலாம் என்று கூட நினைப்பதும், ஆனால் அதே சிறுவன் படித்து, பட்டம் பெற்று இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுவைக்கான மண்டல இயக்குநராக உயர்ந்ததும் நம்மை நெகிழ வைக்கின்றன. மேலும் படிக்க...
No Responses Friday 27 Jan 2017 | தினமணி, புத்தக விமர்சனம் |
வளரும் ஒலிபரப்புக்கலை
மேலும் படிக்க...
No Responses Friday 27 Jan 2017 | தினமணி, புத்தக விமர்சனம் |
தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள்
தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள் - பதிப்பாசிரியர்: லேனா தமிழ்வாணன்; பக்.512; ரூ.320; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044 - 2434 2926.
கல்கண்டு வார இதழின் ஆசிரியராக இருந்த தமிழ்வாணன் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு இந்நூல். அரசியல் கேள்விகள், நகைச்சுவை கேள்விகள், பொது கேள்விகள் என மூன்று பிரிவுகளாக கேள்விகள் தொகுக்கப்பட்டு, அதற்கு அவர் அளித்த சுவையான பதில்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
No Responses Friday 27 Jan 2017 | தினமணி, புத்தக விமர்சனம் |
சுந்தர் பிச்சை – புதிய நம்பிக்கை
சுந்தர் பிச்சை - புதிய நம்பிக்கை - ஜக்மோகன் எஸ்.பன்வர்; தமிழில்: கார்த்திகா குமாரி; பக்.144; ரூ.125; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகிளின் மூன்றாவது தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் சுந்தர் பிச்சை. சென்னை ஜவஹர் வித்யாலயா, வனவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற சுந்தர் பிச்சை, காரக்பூர் ஐஐடி மாணவரானது, அங்கே தன்னுடன் பயின்ற மாணவியான அஞ்சலி ஹர்யானியைக் காதலித்தது, அவரையே மணந்து கொண்டது உள்ளிட்டவை தவிர, சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட வாழ்க்கைத் தகவல்கள் இந்நூலில் குறைவே. மேலும் படிக்க...
No Responses Thursday 26 Jan 2017 | தினமணி, புத்தக விமர்சனம் |