நூல்: என் உருவாகிறது புற்று நோய்?
ஆசிரியர்: பத்மஹரி, விலை: 175/-
வெளியீடு: பிளாக் ஹோல் மீடியா

இந்நூலாசிரியர் ஜப்பானில் புற்றுநோய் ஸ்டெம்செல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர். நவீன ஆய்வுகளின் சாராம்சத்துடன், புற்று நோய்கள் குறித்த பல்வேறு தகவல்களை இந்நூலில் எளிய தமிழில் விளக்கியுள்ளார். இந்நோய்க்கு புகையிலை மற்றும் சிகரெட் போன்ற பழக்கம் மட்டுமல்ல, வேறு பல காரணங்களும் உண்டு என்றும், இந்நோயை எதிர்கொள்வது எப்படி என்றும் ஆய்வு ரீதியாக இந்நூலில் கூறியுள்ளார். குறிப்பாக இந்நோய் நம் உடலில் இருப்பதற்கான அறிகுறிகள்; அதை உறுதி செய்யும் பரிசோதனைகள், மூளைப் புற்றுநோய் முதல் எலும்பு புற்றுநோய் வரை சுமார் 18 வகையான புற்றுநோய்களைப் பற்றிய விவரங்கள்; இவற்றுக்கான சிகிச்சை முறைகள்: என்னென்ன விட்டமின்கள் மற்றும் உணவுப்பொருட்கள் இவற்றை தடுக்க வல்லது; புற்றுநோய்க்கு அலோபதி இல்லாத வைத்தியம் பலன் அளிக்குமா; மன உளைச்சலுக்கும் புற்று நோய்களுக்கும் தொடர்பு உண்டா: இந்நோயை எதிர்கொள்வது எப்படி… என்பன போன்ற பல சந்தேகங்களுக்கும் இந்நூல் விடை அளிக்கிறது.