நூல்: மேடை நடை,
ஆசிரியர்: ‘சொல் அரசு’ ஹபீபுல்லா.
விலை: ரூபாய் 150
வெளியீடு: காமா பதிப்பகம்

25 ஆண்டுகளுக்கும் மேலாக மேடைப் பேச்சுக் கலையில் சிறந்து விளங்கி வருவதால் இந்நூலாசிரியருக்கு, ‘சொல் அரசு’ என்ற கௌரவப்பட்டமும் அறிஞர்களால் வழங்கப்பட்டுள்ளது. இவர் பேச்சுக் கலையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், பல சிறந்த பேச்சாளர்களின் அனுபவ உரைகளையும், தொகுத்து புதிய பேச்சாளரகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்நூலை எழுதியுள்ளார். இந்நூலை சிலாகித்து தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளால் எழுதிய அணிந்துரையே, இந்நூலின் தரத்தை வெளிப்படுத்துகிறது. மேடைப் பேச்சு தோன்றிய வரலாறு தொடங்கி, அதில் உள்ள தலைமையுரை, வரவேற்பு உரை, தொகுப்புரை, சிறப்புரை.. என்று 25 வகையான உரையகளையும் தனித்தனியாக விளக்கி, பேச்சாளர்களின் பண்பு, நடைமுறை எப்படி இருக்க வேண்டும், அவர்கள் கடைப்படிக்க வேண்டிய மற்றும மேடையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன… என்று பல்வேறு விபரங்களையும் 64 தலைப்புகளில் 285 பக்கங்களில் மிக விரிவாகவும், தெள்ளத்தெளிவாகவும் விளக்கியுள்ளார். இந்நூல் நல்ல பேச்சாளராக விரும்புபவர்களுக்கும், தொடக்க நிலை மற்றும் வளர்ந்த நிலை பேச்சாளர்களுக்கும் பெரிதும் துணை நிற்கும் என்பது திண்ணம்.