நூல்: மகாகவி பாரதியின் இஸ்லாத்தின் மஹிமை. தொகுப்பாசிரியர்: செ. திவான், விலை: ரூபாய் 100/-
வெளியீடு: சுஹைனா பதிப்பகம்,

ஹிந்து சமயத்தில் ஆழ்ந்த பற்று கொண்ட மகாகவி பாரிதாயர், இஸ்லாம் மார்க்கம் குறித்தும் கதை, கட்டுரை, கவிதைகளை எழுதியுள்ளார். அவற்றை பாரதியின் பல்வேறு படைப்புகளில் இருந்து தேடி எடுத்து, இந்நூலை தொகுத்துள்ளார் ஆசிரியர். தேசப் பற்றையே தன் உயிர் மூச்சாக்க் கொண்டிருந்த பாரதி, இத்தேசம் நிலைகுலையாமல் இருக்க வேண்டுமானால், ஹிந்து -முஸ்லிம் ஒற்றுமைதான் மிக முக்கியமான தேவை – என்று வலியுறுத்திய கட்டுரைகள் ஏராளம். அதேஓபல அன்றைய முஸ்லிம்களின் கல்வயின்மை குறித்த தனது கவலையைப் பாரதி வெளிப்படுத்தியுள்ளதும் கூட, இஸ்லாமியர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுகிறது. திருநெல்வேலி மாவட்டம் கடையம் என்ற ஊரின் மசூதியில் நடந்த ஒரு விழாவில், பாரதி ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு – இஸ்லாம குறித்தும், முகம்மது நபி (ஸல்) அவர்களைக் குறித்தும் அவர் கொண்டிருந்த தெளிவான புரிதலைக் காட்டுகிறது. அந்த விழாவில் நபிகளின் வரலாற்றை பாரதி தனது தனத்தன்மையான பாணியில் பேசியது – படிக்கச் சுவையானது. அந்த சொற்பொழிவுக்குள் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்து, பௌத்தம்… என பல மதக் கோட்பாடுகளையும் எடுத்துரைப்பதும் பாரதியின் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.