நூல்: ஆனந்த விகடன் காலப் பெட்டகம்
தொகுப்பாசிரியர்கள்: ரவிபிரகாஷ், ராஜா.
விலை: ரூபாய் 180/-
Old is gold என்ற ஆங்கிலப் பழமொழிக்கு ஏற்ப 1926 முதல் 2000 வரை – அதாவது 75 வருட ‘ஆனந்த விகடனில்ய வெளியான செய்திகளில், மனதைக் கவரும் மிக முக்கிய தகவல்களைத் தேர்ந்தெடுத்து ‘பொக்கிஷம்’ என்ற தலைப்பில் வெளியிட்டனர். தற்போது வெளியிட்டு வருகின்றனர். அவற்றிலிருந்தும் சுவையானவற்றை இந்நூலில் தொகுத்துள்ளனர். அரசியல், ஆன்மீகம், சமூகச் சூழல்கள், மக்களின் மனோபாவங்கள், இலக்கியங்கள், பழைய அபூர்வமான புகைபடங்கள்.. என்று பல விஈயங்கள், அந்தந்தக் காலகட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளன. ‘ஆனந்த விகடன்’ என்று பெயர் சூட்டப்பட்ட காரணம் முதல், காந்தி, காமராஜ், கல்கி தொடங்கி அனைத்து அரசியல் தலைவர்களையும் மற்றும் பழம்பெரும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள்… என்று அனைத்துத் துறைகளிலும் உள்ளவர்களைப் பற்றியும் சுவையான தகவல்கள் 350 பக்கங்களுக்கும் மேல் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
ஏனைய செய்திகள்