நூல்: திருக்குறள் உரைகள் ஆராய்ச்சி
ஆசிரியர்: கே.சி. லட்சுமி நாராயணன்,
விலை: ரூபாய் 50/-
வெளியீடு: எல்.கே.எம். ப்ப்ளிகேஷன்ஸ்

மூத்த பத்திரிகையாளரும், சம்ய இலக்கிய ஆய்வு அறிஞருமான இந்நூலாசிரியர், இந்நூலில் திருக்கறளுக்கு இதுவரை எழுதப்பட்ட உரைகள் குறித்து ஆய்வு ரீதியாக எழுதியுள்ளார்.  இதுவரை யாரெல்லாம் திருக்குறளுக்கு உரைகள் எழுதியுள்ளார்கள்ந  அவர்களைப் பற்றிய வரலாறு விபரங்கள்;  உரைகளுக்கு இடையே உள்ள கருத்தொற்றுமை மற்றும் வேறுபாடுகள் திருவள்ளுவரையும், திருக்குறளையும் உயர்த்திப் பிடிக்க உதவும் காரணிகள்: திருக்குறளை ஏற்றிப் போற்றி பண்டையப் புலவர்களால் பாடப்பட்ட பாடல்கள் ‘திருவள்ளுவ மாலை’ யாக தொகுக்கப்ப்ட்ட விபரங்கள்; வேதங்களுக்கு இணையாக திருக்குறள் ஒப்புநோக்கப்பட்ட விபரங்கள்: பார்ப்பனர் என்பது பிரமணரைத்தான் குறிக்கும் என்பதற்கான இலக்கிச் சான்றுகள்த அதற்கு மறுப்புக் கூறும் கா.சு.  பிள்ளை, கருணாநிதி போன்றோர் கூறும் கருத்துக்கள்; பெரியார் காலத்தில் பரப்பப்பட்ட பார்ப்பன துவேஷ கருத்துக்களால் பெரிய புராணம், கம்பராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்கள் தரம் தாழ்த்தப்பட்ட நிகழ்வுகள் என்று பல்வேறு விஷயங்களை எடுத்துக்கொண்டு ஆய்வு ரீதியாக இந்நூலை ஆக்கியுள்ளார்.