நூல்: ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்ன மாலிகா: ஞானத்தின் நுழைவாயில்,
தமிழாக்கம்: சிவராமகிருஷ்ண சர்மா.
விலை: ரூபாய் 150/-
வெளியீடு: நர்மதா பதிப்பகம்
ஆதிசங்கர்ர் இயற்றிய இந்நூலை தமிழாக்கம் செய்து, அதற்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார் ஆசிரியர். கேள்வி – பதில் வடிவில் அமைந்த ரத்னமணி மாலை என்பது இந்நூலின் பொருள். இறைவனை உணரத் துணை செய்யும் அரிய ஞானம் அடங்கியது இந்நூல். மொத்தம் இது 66 சுலோகங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சுலோகமும் 3,4 கேள்வி – பதில்களை உள்ளடக்கியுள்ளதாக உள்ளன. அந்த மூல சுலோகங்களை தமிழ் வடிவில் கூறி, அதில் உள்ள கேள்வி – பதில்களையும் தமிழாக்கம் செய்துள்ளார். தவிர, ஒவ்வொரு கேள்வி – பதிலுக்கும் உரிய விளக்கவுரையை, பாமர மக்களும் எளிதில் புரியும் வண்ணம் புராண மற்றும் இதிகாசங்களில் வரும் நிகழ்ச்சிகளோடு கூறி விவரிக்கிறார்.
ஏனைய செய்திகள்