-
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மூதாதை பணியாற்றி, சங்கத் தமிழைக் குழைத்து ஒரு இலக்கியத்தைப் படைக்கிறார் புலவர் திரு செல்வம் பெரியசாமி அவர்கள். தமிழாலும், அன்பின் மிகுதியாலும் முகப்புத்தகத்தில் அறிமுகமாகி ஈராக் தமிழ்ச் சங்கத்தோடும் இணைந்து தமிழ்ப் பணியாற்றி வரும் புலவர் வடிக்கும் ஒவ்வொரு வரிகளிலும் வாழ்வியல் தத்துவங்களையும், காதல் சித்திரங்களையும், அன்பின் நெருடல்களையும், அடங்கா கற்பனையில் கூற்றால் கவிதை எனும் இலக்கிய வடிவத்தை ஆயுதமாய்க் கொண்டு மரபுப் பாணியிலும், நவீன பாணியிலும் சமூகத்துக்குத் தந்து, இலக்கியப் பணியாற்றும் புலவர் பெருமகனை இன்றேனும் வாழ்த்த முருகன் ஒரு சந்தர்ப்பம் அருளியதையிட்டு மகிழ்கிறேன். வாழ்த்த வயதில்லை இருப்பினும் அன்பின் வழி கொண்டு இப்புத்தகத்தின் நாயகனை வணங்குகிறேன். தொடர்ந்தும் பல இலக்கியங்களைப் படைத்துத் தமிழ்ப் பணியாற்ற எனது சார்பிலும், ஈராக் தமிழ்ச் சங்கத்தின் சார்பாகவும் வாழ்த்தி வணங்குவதில் மன நிறைவடைகிறேன். இளம் வயதிலேயே எனக்கு கவியார்வம் இருந்தது. கல்லூரியில் மிகுதியாயிற்று. முகநூல் கவிதைக் குழுமங்களில் என் எண்ணம் முழுமையானது என்றால் மிகையன்று. இணைய வானொலிகள் தேனருவி. அபிநயம், பைந்தமிழ் அருவி, வானம்பாடி, மதிநிலா, புன்னகை ஆகியவற்றில் இணைந்த பிறகு காற்றில் ஒலிக்கின்றது என் கவிவரிகள். நிலாகாயும் நேரம், இரவின் மடியில், என் சுவாசக்காற்றே. இதயம் பேசுகிறது, மனதோடு பேசு ஆகிய அகம் சார்ந்த நிகழ்ச்சிகள் தினமும் இரவு 8 மணி முதல் 10 மணி வரையில் ஒலிபரப்பாகும். அந்நிகழ்ச்சிகளின் நேரலையின் பொழுது நான் பதிவிட்டு ஒலிபரப்பான கவிதைகள் தான் "நூறாவது பூவே"என்ற நூல். அகம் சார்ந்த நிகழ்ச்சி என்பதால் கவிதைகள் அகம் சார்ந்தவையாக இருக்கும். குறிப்பாக இவை யாவும் வானொலி கவிதைகள் ஆகும். என் அடுத்த நூல் பொதுவான கவிதைகள் அடங்கிய நூலாக்கமாக வெளிவரும். கவிதை வாசிப்பாளர்கள் தங்கள் ஆதரவை நல்கி உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
-
This book Nooravathu Poove is written by Selvam Periyasamy and published by Manjikai Pathippagam.
இந்த நூல் நூறாவது பூவே, செல்வம் பெரியசாமி அவர்களால் எழுதி மஞ்சிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nooravathu Poove, நூறாவது பூவே, செல்வம் பெரியசாமி, Selvam Periyasamy, Kavithaigal, கவிதைகள் , Selvam Periyasamy Kavithaigal,செல்வம் பெரியசாமி கவிதைகள்,மஞ்சிகை பதிப்பகம், Manjikai Pathippagam, buy Selvam Periyasamy books, buy Manjikai Pathippagam books online, buy Nooravathu Poove tamil book.
|