இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை - Iyarkai Velaanmai A Muthal Akk Varai

Iyarkai Velaanmai A Muthal Akk Varai - இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: பொன். செந்தில்குமார் (Pon.Senthilkumar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761696
Pages : 112
பதிப்பு : 16
Published Year : 2016
விலை : ரூ.135
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள்
எப்போ வருவாரோ சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியடிக்கும் சுனாமி... வளைத்து விழுங்கும் வெள்ளம்... திடீர் தாக்குதல் நடத்தும் மர்ம நோய்கள்... என்று இந்தப் பூமிப் பந்திலிருக்கும் ஜீவராசிகள் ஒவ்வொன்றும் அனுபவிக்கும் இன்னல்களே இதற்கு சாட்சி. மனித இனம், இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்துவிட்டதன் விளைவுதான் இது என்று பலரும் எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால், அது அனைவரின் காதுகளிலும் ஏறிவிடுகிறதா...? 'ஊருக்கு ஒண்ணு வந்தா... அது எனக்கும் வந்துட்டுப் போகட்டும்...' என்ற அலட்சிய மனப்பான்மை கிட்டத்தட்ட அனைவரையுமே தொற்றிக் கொண்டுவிட்டது என்பதுதான் கசப்பான உண்மை. இத்தகைய போக்குக்கு எதிராக, பலரும் வில்லெடுத்து போர் தொடுத்த வண்ணம் உள்ளனர். 'இனி இயற்கைதான் இந்த பூமிக்கே சோறு போடும்... அதை நாம் மதிக்க வேண்டும்... வாழ்க்கையை அதனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்...' என்று முழங்கி வருகின்றனர். இயற்கைக்கு ஆதரவான வேலைகளை வேளாண்மையில் இருந்துதான் முதலில் தொடங்க வேண்டும். காரணம், இயற்கை, தன்னுடைய ஆக்ரோஷ முகத்தைக் காட்ட ஆரம்பித்தால், முதலில் பலியாவது வேளாண்மைதான். எனவேதான், ‘பசுமை விகடன்’ இதழ் சார்பில், 'இனியெல்லாம் இயற்கையே!' என்ற தலைப்பில் இயற்கை வேளாண்மை நேரடி களப்பயிற்சி தொடங்கப்பட்டது. 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாரும் அவரின் அடியற்றி நடைபோடும் இளைஞர் பட்டாளத்தைச் சேர்ந்த தம்பிமார்களும் இம்முயற்சியில் கைகொடுக்க... மாவட்டந்தோறும் இந்தக் களப் பயிற்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது. நிலத்தைப் பண்படுத்துவது, விதைப்பு, பராமரிப்பு, அறுவடை மற்றும் விற்பனை என்று இயற்கை வேளாண்மையில் 'அ' முதல் 'ஃ' வரை முழுமையாக விவசாயிகளுக்குக் கற்றுத் தரப்படுகிறது. ஏதாவது ஒரு இயற்கை வேளாண் பண்ணையில், சுமார் முப்பது விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட குருகுலவாசம் போல மூன்று நாட்களும் காலை முதல் நள்ளிரவு வரை இடைவிடாமல் பயிற்சி நடத்தப்படுகிறது. இயற்கை உரத் தயாரிப்பு, பூச்சி விரட்டிகள், பயிர் வளர்ச்சி ஊக்கிகள், தேனீ வளர்ப்பு, பூச்சி மேலாண்மை... என்று அனைத்துவித தொழில்நுட்பங்களும் பயிற்சிக்கு வரும் விவசாயிகளுக்கு அத்துப்படியாகின்றன. பயிற்சிக்குப் பிறகு, ஊர் திரும்பும் ஒவ்வொரு விவசாயியும் ஒரு வல்லுனராகவே வலம் வருவார்! இந்த மூன்று நாள் பயிற்சிகள் அத்தனையும் நொடி பிறழாமல் 'பசுமை விகடன்' இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகையதொரு நேரடி அனுபவத்தைப் பதிவு செய்தவர், 'பசுமை விகடன்' உதவி ஆசிரியர் பொன்.செந்தில்குமார். இதைப் படித்த ஒவ்வொரு வாசகரும் தாமே பயிற்சியில் பங்கேற்ற அனுபவத்தைப் பெறும் அளவுக்கு இது அமைந்திருக்கிறது என்பதற்கு, வாசகர்களின் கடிதங்களே சான்று. இந்தப் பயிற்சி அனுபவக் கட்டுரைகளை அப்படியே தொகுத்து புத்தகமாக வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமை கொள்கிறது. இது புத்தகமல்ல... களம் என்பதைப் படித்து முடித்ததும் நீங்களும் உணர்வீர்கள்...!

  • This book Iyarkai Velaanmai A Muthal Akk Varai is written by Pon.Senthilkumar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை, பொன். செந்தில்குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iyarkai Velaanmai A Muthal Akk Varai, இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை, பொன். செந்தில்குமார், Pon.Senthilkumar, Vivasayam, விவசாயம் , Pon.Senthilkumar Vivasayam,பொன். செந்தில்குமார் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Pon.Senthilkumar books, buy Vikatan Prasuram books online, buy Iyarkai Velaanmai A Muthal Akk Varai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி - Paise Selavillamal Pasumai Puratchi

வேளாண்மைப் பழமொழிகள்

இலக்கியத்தில் வேளாண்மைக் கலைச்சொற்கள்

உலக வேளாண்மைப் பொருட்காட்சி

களை எடு - Kalai Edu!

ஆசிரியரின் (பொன். செந்தில்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்

மண்புழு மன்னாரு - Manpulu Mannaru

லாபம் தரும் வேளாண் வழிகாட்டி - Labam Tharum Velaan Vazhikaati

பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal

வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்

மானாவாரியிலும் மகத்தான லாபம் - Maanavaariyulum Mahathana Labam

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


பணம் கொழிக்கும் பயிர்த்தொழில்

தென்னை (தெரிய வேண்டிய சாகுபடி முறை - முழுமையான கையேடு)

நாய் வளர்ப்பும், நோய்த் தடுப்பும்! - Nai Valarppum ,Noi Thaduppum

பால் பண்ணை நடத்துவது எப்படி?

பாலைவனத்தில் விதை விதைப்பவன்

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

செம்மை நெல் சாகுபடி - Semmai nel Saagupadi

ஏன் வேண்டும் இயற்கை உழவாண்மை

எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்! - Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!

Celebrating Illness

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள் - Kaanji Mahaaswamigalin Aravuraigal

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb

பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி - Paise Selavillamal Pasumai Puratchi

நில்... கவனி... விபத்தை தவிர்! - Nil…Kavani…Vibathai Thavir!

தலைமைச் செயலகம் - Thaamai Seyalagam

ஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai Pagam 1

எங்கே போகிறோம் நாம்? - Enge Pogiroam Naam?

எப்போதும் இன்புற்றிருக்க... - Eppothum Inbutrirukka..

தாமிரபரணி கரையினிலே - Tamirabarani Karaiyinile

யாரைத்தான் எதிர்க்கவில்லை?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91