-
இரட்டைக் காப்பியங்களில் மொழி நடைத்திறன் என்பதைப் பற்றி இவ்வாய்வு அமைந்துள்ளது.
சிலப்பதிகாரம், மணிமேகலையும் காலத்தை வேன்று வாழும் இலக்கியங்காளகத் திகழ்கின்றன அதற்குக் காரணமாக அவ்விலக்கியங்களின் மொழித்திறன் அமைந்துள்ளது என்பதே இவ்வாய்வின் கருதுகோளாகும். ஒலிக்கோலங்கள், சொல்லாட்சித்திறன் அணிகள் தொடரமைப்பு ஆகிய பல்வேறு கூறுகள் காணப்படுகின்றன என்ற கருதுகோளின் அடிப்படையில் இவ்வாய்வு அமைகின்றது.
இவ்வாய்வு தொப்பாய்வு, பகுப்பாய்வு, விளக்கமுறை ஆய்வு, ஒப்பீட்டு ஆய்வு ஆகிய ஆய்வியல் அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொருண்மை, முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்கள் உள்ளன. 1. மொழிநடையும் இரட்டைக் காப்பியங்கள் வரலாறும் 2. இரட்டைக் காப்பியங்களில் ஒலிக்கோலங்கள் 3. இரட்டைக் காப்பியங்களில் சொல்லாட்சி 4. இரட்டைக் காப்பியங்களில் அணிகள் 5. இரட்டைக் காப்பியங்களில் தொடரமைப்பு மொழிநடை என்பது ஒலி, சொல், அணி, தொடர் ஆகியவற்றின் கூறாக அமைந்துள்ளது. சிலம்பில் நூற்றைம்பதுக்கு மேற்பட்ட வடமொழிச் சொற்கள் காணப்படுகிறது. ஆனால் மணிமேகலையில் முந்நூற்றுக்கு மேற்பட்ட வடமொழிச் சொற்கள் காணப்படுகிறது. சிலம்பிலும், மணிமேகலையிலும் அறுவகைத் தொகைச் சொற்களில் ஒன்றான வேற்றுமைத் தொகையில் நான்காம் வேற்றுமைத் தொகைக் சொற்கள் காண்ப்படவில்லை. சிலப்பதிகாரம், மணிமேலை காப்பியங்களில் இரட்டை உவமைகள் சிலம்பைக்காட்டிலும் மணிமேகலையில் மிகுதியான அளவில் பயின்று வந்துள்ளது. மற்ற இருபத்து நான்கு உவளமகளும் இரு காப்பியங்களிலும் சமமாக வந்துள்ளது. எட்டுவகை உருவகங்களில் ஏழு வகை உருவகங்கள் இரு காப்பியங்களிலும் சமமான அளவில் காணப்படுகிறது. மணிமேகலையின் காப்பியத் தொடக்கம் காப்பியபோக்கு, காப்பியக் கதை மிகுதியான வேற்றுமொழிச் சொற்கள், ஒலிகள், வெளிபாட்டு உத்திகள் ஆகியவை சிலப்பதிகாரத்தைப் போல் சிறப்பான அமைப்பு முறையில் காணப்படவில்லை.
-
இந்த நூல் இரட்டைக் காப்பியங்கள் காப்பியப் பார்வை, வ.சுப. மாணிக்கம் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இரட்டைக் காப்பியங்கள் காப்பியப் பார்வை, வ.சுப. மாணிக்கம், Va.Suba. Manikkam, Ilakiyam, இலக்கியம் , Va.Suba. Manikkam Ilakiyam,வ.சுப. மாணிக்கம் இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Va.Suba. Manikkam books, buy Saratha Pathippagam books online, buy tamil book.
|