கலாம் கனவு நாயகன் - Kalam Kanavu Nayagan

Kalam Kanavu Nayagan - கலாம் கனவு நாயகன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kuzhu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766790
Pages : 157
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.185
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சில நேரங்களில் சில மனுஷிகள் (old book - rare) TNPSC GROUP IV தேர்வு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழகக் கடலோரக் கிராமத்தின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவனால், இந்தியாவின் முதல் குடிமகனாக உயர முடியும், நாட்டின் பாதுகாப்பு அரணைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்க முடியும், இளைஞர்களால் புத்தம் புது இந்தியாவை கட்டமைக்க முடியும், ‘கனவு காணுங்கள்’ உங்களால் முடியும் - என நம்பிக்கை விதைத்த அப்துல் கலாம் விதைக்கப்பட்டுவிட்டார். ‘கனவு காணுங்கள்’ என்ற அக்னி வார்த்தைகள் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களை, தங்கள் இலக்கை நோக்கிக் கொண்டுசெலுத்தத் தூண்டியவர் கலாம். எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், அதைத் தன் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் வார்த்தைகளிலும் வாழ்க்கையிலும் கடைசிவரை எளிமையாக இருந்தார் என்பதால்தான், இந்த அளவுக்கு இந்தியர்களின் அபிமானத்தை வென்று நம் மனதில் அரியணை போட்டுத் தீர்க்கமாக அமர்ந்திருக்கிறார். ராமேஸ்வரத்தில் 1931-ம் ஆண்டு, அக்டோபர் 15-ம் தேதி வறுமையான மீனவக் குடும்பத்தில் பிறந்த கலாமின் கனவுகள் எல்லாமே வளமானவை. அவைதான், பல மைல் தூரம் நடந்து கல்வி கற்கும் உத்வேகத்தை அவருக்குத் தந்தது. சிறுவனாக இருந்தபோது பகுதி நேரமாக செய்தித்தாள் விநியோகிப்பதில் தொடங்கி எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றி, பொக்ரான் பாலைவனத்தில் வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை என ஒவ்வொரு நாளும் தனது உயர்வுக்காக என மட்டும் இல்லாமல், தேசத்தின் உயர்வுக்காகவும் கனவு கண்டு ஓடியவர் கலாம். அப்துல் கலாமின் இளமை தொடங்கி, அவரது உழைப்பு, சேவை மனப்பான்மை, அர்ப்பணிப்பு எல்லாம் ஒவ்வொருவரும் கற்க வேண்டிய பால பாடங்கள். ‘விகடன் மேடை’யில் வாசகர்களுக்கு அளித்த பதில்கள், சுட்டிகளுடன் கலந்துரையாடல், மாணவர்களுடன் ஓர் ஆசைச் சந்திப்பு என விகடனில் வெளிவந்த அத்தனை பொக்கிஷங்களையும் ஒரு தொகுப்பாக படங்களுடன் அள்ளி வந்திருக்கிறது இந்தப் புத்தகம். ‘தோல்விகளை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள். வெற்றிக்கான மிக முக்கியமான திறமை அதுதான்’, ‘நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டுமானால் முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்’ என கலாம் நமக்குச் சொல்லும் ஒவ்வொரு வாக்கியங்களும் நம் வாழ்வை வளமாக்குபவை. அறிவியல் ஞானி, குடியரசுத் தலைவர் என உயரே உயரே சென்றபோதும், வருங்கால இந்தியாவை உருவாக்கப்போகும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களோடு இருக்கும் நேரத்தை உருவாக்கிக் கொண்டவர் கலாம். சுட்டி விகடன் மூலம் மாணவர்களுடன் நடந்த ஒரு சந்திப்பில், ‘விஞ்ஞானி, ஆசிரியர், குடியரசுத் தலைவர்... இவற்றில் உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருந்த பொறுப்பு எது?’ என ஒரு மாணவர் கேட்டபோது, ‘ஆசிரியர்’ என அத்தனை விருப்பத்தோடு பதில் சொன்னார். இந்தப் புத்தகத்திலும் பக்கத்துக்குப் பக்கம் அவர் பேசியது, சொன்னது அனைத்துமே நமக்கு ஒரு பாடம் என்றால் அது மிகையாகாது. வாருங்கள்! பக்கத்தைப் புரட்டி பாடம் கற்போம்!

  • This book Kalam Kanavu Nayagan is written by Aasiriyar Kuzhu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கலாம் கனவு நாயகன், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalam Kanavu Nayagan, கலாம் கனவு நாயகன், ஆசிரியர் குழு, Aasiriyar Kuzhu, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Aasiriyar Kuzhu Valkkai Varalaru,ஆசிரியர் குழு வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aasiriyar Kuzhu books, buy Vikatan Prasuram books online, buy Kalam Kanavu Nayagan tamil book.

ஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலக வரலாறு - World History

குற்றவியல் சிறு சட்டங்கள் தொகுப்பு கையேடு

my first book of FRUITS & VEGETABLES - Fruits & Vegetables (My First Books)

ரௌத்திரம் ஆறு வருட சந்தா - Rowthiram Six Year Subscription

நாற்று (இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல்)

விகடன் சுஜாதா மலர் - Vikatan Sujatha Malar

my first MAGIC WITH PENCIL blue - Magic with Pencil: Blue (Activity-Magic with Pencil)

my cute lift the flap OPPOSITES - Opposites (My Cute Lift the Flap)

my cute lift the flap NUMBERS - Numbers (My Cute Lift the Flap)

பணம் புரிந்தவன் - Panam Purinthavan

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நகைச்சுவை மன்னன் நாகேஷ் - Nagaichchuvai Mannan Nagesh

தலாய் லாமா - Dalai Lama

அன்னை இந்திரா காந்தி - Annai Indra Gandhi

தமிழகத்தின் செல்வன் - Thamizhagathin selvan

விண்வெளி நாயகி கல்பனா சாவ்லா

அன்னை தெரேசா

Gautama Buddha

Comrade Buddha

கவலை (எங்கள் கதை)

புரட்சிக்கவி - Puratchikavi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

லிங்கம் - Lingam

சுட்டி மகாபாரதம் - Chuti mahabharatham

ஆரோக்கியமே ஆனந்தம் - Aarokyame Anandham

நலம் தரும் மருத்துவக் குறிப்புகள்

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

உலக சினிமா பாகம் 3 - Ulaga cinema Part 3

காற்றில் தவழும் கண்ணதாசன் - Katril Thavalum Kannadasan

திருச்சிராப்பள்ளி ஊறும் வரலாறு

தமிழ்நாட்டில் காந்தி - Tamilnatil Gandhi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91