-
அஞ்சல் துறை என்பது மற்ற எல்லாத் துறைகளையும் விட சிறப்பானதொன்றாகும். மட்டுமின்றி இது மனித வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஒரு மனிதனின் வாழ்க்கையை ஒளிமயமாக்குகிறது என்று கூட சொல்லாம். ஆம் ஒருவருக்கு வாழ்வை வளமாக்கும் பணி ஒன்று கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை தாங்கிவருவதே அஞ்சல் தானே. இது மட்டுமின்றி தொழில்துறை, அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உதவிடுகிறது இது. இதெல்லாவற்றையும் விட நமது மனது சம்பந்தமான தொடர்புகட்கு உதவிடுகிறது அஞ்சல். காதலன், காதலி, அன்புனையோருக்கும், உறவினர்க்கும் எழுதும் மடல்களை உரிய இடத்தில், உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கிறது அஞ்சல். தற்காலத்தில் கைப்பேசி மூலம் எத்தனை எஸ்.எம்.எஸ் செய்திகள் அனுப்பினாலும். மனதை திறந்து, உள்ளத்தால் எழுதும் கடிதங்களை வெல்ல முடியாது. சில கடிதங்கள் காவியமாக்கி இருக்கின்றன, சில கடிதங்கள் வரலாறாகி இருக்கின்றன், சில கடிதங்கள் காவியமாகி இருக்கின்றன,சில கடிதங்கள் வரலாறாகி இருக்கின்றன, சில கடிதங்கள் போர்களை உருவாக்கி இருக்கின்றன, சில கடிதங்கள் பலர் வாழ்வில் ஒளியேற்றிருக்கின்றன. அஞ்சல்துறை வளர்க்கும் எழுத்துக்கலை, காலத்தின் கண்ணாடி எனலாம். '' அஞ்சல் துறை - 1000 கேள்வி, பதில்கள்''- என்ற இச்சிறு நூலில் அஞ்சல் துறை பிறப்பு, வளர்ச்சி, அஞ்சல்தலை சேகரிப்பு, விபரம், கடிதங்கள்,சிறப்பு அஞ்சல்தலை விபரம், அஞ்சல் தலை வெளியான ஆண்டுகள் உட்பட பல தகவல்கள் 1000 கேள்வி, பதில்கள் வடிவில் தொகுத்து தரப்பட்டுள்ளன. நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வரும் நாட்டின் சிறந்த பதிப்பாளரான அறிவு பதிப்பகத்தார் இந்நூலையும் சிறப்பாக வெளியிட்டுள்ளார்கள் வாங்கிப்படித்து பயன் பெறுக.
-
This book Anjalthurai 1000 Kelvi-Pathilgal is written by S. Ananthakumar and published by Arivu pathippagam.
இந்த நூல் அஞ்சல் துறை 1000 கேள்வி - பதில்கள், சா. அனந்தகுமார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anjalthurai 1000 Kelvi-Pathilgal, அஞ்சல் துறை 1000 கேள்வி - பதில்கள், சா. அனந்தகுமார், S. Ananthakumar, Aarasiyal, அரசியல் , S. Ananthakumar Aarasiyal,சா. அனந்தகுமார் அரசியல்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy S. Ananthakumar books, buy Arivu pathippagam books online, buy Anjalthurai 1000 Kelvi-Pathilgal tamil book.
|