-
தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும் தெளிவாகவும் சரியாக வும் இன்னும் எழுதப்படாமலிருப்பது தமிழரின் பெருங்குறையாகும். தமிழகத்தின் மிக நீண்ட வரலாற்றில் களப்பிரரின் ஆட்சிக்காலம் முக்கியமானது. களப்பிரர் ஆட்சிக்காலம் தமிழ் நாட்டு வரலாற்றில் ‘இருண்ட காலம்’ ஆக இருந்து வந்தது. ஒரு காலத்தில் களப்பிரர் தமிழகத்தை அரசாண்டார்கள் என்னும் வரலாற்றுச் செய்தியே நெடுங் காலமாக மறைந்து கிடந்தது. வேள்விக்குடிச் செப்பேடு கிடைத்து, இது வெளியிடப்பட்ட பிறகுதான் களப்பிரர் என்னும் அரசர் இருந்தனர் என்றும் அவர்கள் தமிழகத்தை அரசாண்டனர் என்றும் தெரியவந்தது. அதற்கு முன் அப்படி ஒரு அரசர் பரம்பரை இருந்தது என்பதை அறியாமலே இருந்தோம்.
1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் வெளிவந்தபிறகு 55 ஆண்டுகளாகத்தான் களப்பிரரைப்பற்றிக் கொஞ்சங்கொஞ்சமாக அறிந்து வருகிறோம். ஐம்பத்தைந்து ஆண்டு களாகியும் இன்னும் அவர்களைப் பற்றிய முழு வரலாறு தெரியாம லிருக்கிறது. அறிஞர்கள் களப்பிரரைப் பற்றிச் சில கட்டுரைகள் எழுதினார்கள். சில வரலாற்றுப் பேராசிரியர்கள் தங்களுடைய வரலாற்று நூல்களில் களப்பிரரின் ‘இருண்ட காலத்தை’ ஒரே வரியில் குறிப்பிட்டுள்ளனர். அவ்வளவுதான்
-
This book Kalapirar Atchiyil Tamilakam is written by Mayilai Seeni. Venkatasami and published by Shri Senbaga Pathippagam.
இந்த நூல் களப்பிரர் ஆட்சியில் தமிழகம், மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalapirar Atchiyil Tamilakam, களப்பிரர் ஆட்சியில் தமிழகம், மயிலை சீனி. வேங்கடசாமி, Mayilai Seeni. Venkatasami, Varalaru, வரலாறு , Mayilai Seeni. Venkatasami Varalaru,மயிலை சீனி. வேங்கடசாமி வரலாறு,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Mayilai Seeni. Venkatasami books, buy Shri Senbaga Pathippagam books online, buy Kalapirar Atchiyil Tamilakam tamil book.
|