-
அன்பு நண்பர் அருணோதயம் அருணன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், இந்தப் புதினத் துக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் அவர்தான். ‘எழுதுங்கள்' என்று சொன்னதுடன், ‘எழுதி முடித்து விட்டீர்களா?' என்று அடிக்கடி 'போன்' செய்து ஊக்கப் படுத்திக்கொண்டும் இருந்தார். 'புதுமைப் பெண்கள்' என்று பாரதியார் பாடினார். ஆனால், பழைய புதுமைப் பெண்களாகத்தான் இன்னும் தமிழ்ப் பெண்கள் இருக்கிறார்கள். புரட்சிப் பெண்களைக் காண முடியவில்லை. தமிழ்ப் பெண்களிடம் புதுமைகள் பூக்க வேண்டும். காதலில் புதுமை, கைபிடிப்பதில் புதுமை, இல்லறத்தில் புதுமை, மறுமணம் என்ற புதுமைகள் மலர வேண்டும் என்பது எனது ஆசை. அந்த ஆசையின் வெளிப்பாடே இந்தப் புதினம். புகழ் பெற்ற அருணோதயம் இதை அச்சிட்டு வெளி யிடுகிறது. பதிப்புச் செல்வர் அருணன் அவர்களுக்கு இதற்காகவும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். புதிய எழுத்தாளர்களுக்கு அருணன் ஒரு புகலிடம். பழைய எழுத்தாளர்களுக்கு அவர் ஒரு கொடை மடம். அவரது இலக்கியப் பணி இன்னும் நூறாண்டு தொடர வாழ்த்துகிறேன். ‘புது மலர்கள் பூக்கட்டும்' என்ற நாவலை அற்புதமான கதை அமைப்புடன் மிக மிக சுவையாக எழுதியுள்ளார், புகழ்பெற்ற அமுதா கணேசன் அவர்கள். நூற்றுக்கணக்கான நாவல்கள், ஆயிரக் கணக்கான கதைகள் எழுதிப் புகழ்பெற்ற இவர், அத்தனைக்கும் மேலாக சம்பவங் களை கோர்வையாகப் புனைந்து, அன்றாட நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த நாவல் மூலம் படிப்பவர்கள் மனதை கவர்ந்துள்ளார். ஒவ்வொரு சம்பவமும் நேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. வாழ்க்கைப் பாதையை செப்பனிட உதவுகிறது. மன நிறைவோடு படிக்க முடிகிறது. நீங்களும் படித்து மகிழ்ந்து எழுதுங்கள்.
-
This book Puthu Malargal Pookattum is written by Amudha Ganesan and published by Arunothayam.
இந்த நூல் புது மலர்கள் பூக்கட்டும், அமுதா கணேசன் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puthu Malargal Pookattum, புது மலர்கள் பூக்கட்டும், அமுதா கணேசன், Amudha Ganesan, Novel, நாவல் , Amudha Ganesan Novel,அமுதா கணேசன் நாவல்,அருணோதயம், Arunothayam, buy Amudha Ganesan books, buy Arunothayam books online, buy Puthu Malargal Pookattum tamil book.
|