ஃபீஹி மா ஃபீஹி (ரூமியின் ஞானப் பேருரைகள்)

ஃபீஹி மா ஃபீஹி (ரூமியின் ஞானப் பேருரைகள்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ரமீஸ் பிலாலி, ஜலாலுத்தீன் ரூமி
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
ISBN : 9789391593520
Pages : 530
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.690
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தோழியர் (நபித்தோழியரின் சீரிய வரலாறு) இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஃபீஹி மா ஃபீஹி என்பது மெளலானா ரூமியின் மிகப் பிரபலமான உரைநடை நூல். அவர் தன் சீடர்களிடம் பேசிய 71 உரைகளின் தொகுப்பு. சில உரைகள் பல பக்கங்கள் நீளும் அளவுக்குப் பெரியவை. சில உரைகள் ஒரே பத்தியில் முடிந்துவிடும் அளவுக்குச் சிறியவை. ஆனால், ஞானத்தால் எல்லா உரைகளும் விலைமதிப்பற்ற முத்துகள். ரூமி இந்த உரைகளை நிகழ்த்தியபோது அவருடைய மகன் சுல்தான் வலது, சீடர்கள் சிலரின் உதவியுடன் அவற்றை எழுதிவைத்தார் என்று சொல்லப்படுகிறது. ரூமியின் மாபெரும் ஞானக் காவியமான மஸ்னவீயைப் புரிந்துகொள்ள இந்த உரைகள் பேருதவி புரியும் என்று ஸூஃபி அறிஞர்கள் கருதுகின்றனர். ஸூஃபித்துவக் காதலின் நாவு என்று போற்றப்படுபவர் மெளலானா ரூமி. இறைக் காதலை அவர் பேசியிருப்பதுபோல் ஆழமாகவும் அகலமாகவும் வேறு ஒருவரும் வெளிப்படுத்தவில்லை என்பது உண்மை, வெறும் புகழ்ச்சி அல்ல. இறை ஞானத்தின் விழிப்பிலிருந்து இறைக் காதலைப் பேசியவர் அவர். அவரின் கவிதைகளில் காணப்படும் காதல் மயக்கம் உண்மையில் இறை ஞானத்தின் உச்சமான விழிப்பே என்பதை இந்த நூலை வாசிப்போர் அறியலாம். ஸூஃபித்துவக் கோட்பாடுகளை எளிய மக்களும் புரிந்துகொள்ளும்படி ரூமி தனது உரைகளை அமைத்திருக்கிறார். அதில் ஆங்காங்கே சிறிய கதைகளும் கவிதை மேற்கோள்களும் இடம்பெறுகின்றன. ஃபார்சீ மூலப் பிரதியும், உருது, ஆங்கிலப் பெயர்ப்புப் பிரதிகளும் கொண்டு இந்தத் தமிழாக்கம் வெளிவருகிறது. ரூமியின் வாழ்வில் ஞானக் கதைகள் நூறு, ரூமியின் ருபாயியாத் ஆகிய ரூமித்துவ நூல்களை மொழிபெயர்த்திருக்கும் ரமீஸ் பிலாலிதான் இந்நூலையும் தமிழாக்கியுள்ளார். ------------------------ இந்த நூல், மெளலானா ரூமியின் ஃபீஹி மா ஃபீஹி என்னும் நூலின் மூல ஃபார்சீ பிரதியையும், அப்துர் றஷீது தபஸ்ஸும் செய்த அதன் உருது மொழிபெயர்ப்பையும், W.M.தாக்ஸ்டன் ஜூனியர் செய்த அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் துணையாய்க் கொண்டு தமிழில் பெயர்க்கப்பட்டதாகும். A.J.ஆர்பெர்ரி செய்த ஆங்கிலப் பெயர்ப்பும் ஒப்புநோக்கப்பட்டது. ஃபீஹி மா ஃபீஹி என்பதன் நேரடியான அர்த்தம் அதில் என்ன உள்ளதோ, அதுவே அதில் உள்ளது என்பதாகும். இதை இன்னும் பல வழிகளில் அர்த்தப்படுத்தலாம். அது என்னவோ அதுவேதான் அது என்று ஓர் அர்த்தம் தருகிறது மலேசிய ஆங்கிலப் பதிப்பு. அதில் என்ன இருக்கிறதோ, அதுவே இதில் இருக்கிறது என்பது இன்னொரு சாத்தியமான அர்த்தம். அதாவது, ரூமியின் ஞானக் காவியமான மஸ்னவீயில் என்ன ஞானம் இருக்கிறதோ, அதுவே இந்த நூலிலும் இருக்கிறது. அதில் கவிதையாக இருக்கும் ஸூஃபி ஞானமே இதில் உரைநடையாக விளக்கப்பட்டுள்ளது.

  • இந்த நூல் ஃபீஹி மா ஃபீஹி (ரூமியின் ஞானப் பேருரைகள்), ரமீஸ் பிலாலி, ஜலாலுத்தீன் ரூமி அவர்களால் எழுதி சீர்மை நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஃபீஹி மா ஃபீஹி (ரூமியின் ஞானப் பேருரைகள்), ரமீஸ் பிலாலி, ஜலாலுத்தீன் ரூமி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ரமீஸ் பிலாலி, ஜலாலுத்தீன் ரூமி கட்டுரைகள்,சீர்மை நூல்வெளி, Seermai Noolveli, buy books, buy Seermai Noolveli books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஊழல் பணவீக்கம் தீவிரவாதம்

தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும்

ஒரு மனிதன் ஒரு LIKE ஒரு உலகம்

கருணைக்கடல் இராமாநுசர் காவியம் ஒரு மகாதரிசனம்

இளம்பெருவழுதி

பாலற்ற பெண்பால் (பெண்பால் நபும்சகம்)

24 கேரட் - 24 Carat

கடவுளைப் படைத்தது யார்? - Kadavulai Padaithathu Yaar?

சான்றோர்கள் பார்வையில் பண்டாரத்தார் - Saandrorgal paarvaiyil Pandaaraththaar

Boost Your Vocabulary

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்: ஒரு சமூகவியல் ஆய்வு

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 2)

ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன?

தோந்நிய யாத்ரா: தோன்றிய பொழுதின் பயணங்கள்

பசுமை பற்றிய 40 நபிமொழிகள்

உடல் எனும் ஞானி (பாகம் - 2)

வெளியேற்றம்

நம் சேரிப் பிள்ளைகள்

நபி வரலாறு: பாடங்களும் படிப்பினைகளும்

ரகசியங்களின் திரைநீக்கம் (ஒரு ஸூஃபியின் டைரி)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91