தபுதாராவின் புன்னகை

தபுதாராவின் புன்னகை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தாமரைபாரதி (Thamaraibharathi )
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789395285391
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மத்தவிலாசப் பிரகசனம் யானைத் தாலி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1998ம் வருடம் ஒரு மழை நாளின் அதிகாலைப் பொழுதில் எங்கள் ஊர் தென்பெண்ணை நதியின் தரைப்பாலத்திற்கு அருகே அமைந்துள்ள கபிலர் குன்றின் பின்னால் இருந்த கண்ணாடி போன்ற தெளிவான நீர்த்தடத்தில் நீந்திக் கொண்டிருந்த மீன்களைப் பார்த்த கணம்தான் கவிதை முதன் முதலாக எனக்குள் வேர்பிடித்த கணம் என நினைக்கிறேன். வாசிப்பின் மீதான ஈர்ப்பை எனக்குள் விதைத்த எனது தந்தையின் புத்தக அலமாரியும், வீட்டுக்கு அருகே இருந்த செல்வி ஹோட்டலில் சிறுவர் மலருக்காகக் காத்திருந்த தருணங்களும் (அது தவறவிடப்படின் தாலுக்கா ஆபிசுக்குப் பின்னே இருக்கும் அண்ணாதுரை அண்ணனின் வீட்டில் வாங்கிப் படித்துவிட்டு கொடுத்துவிடுவேன்) பின்னர் எங்கள் ஊர் நூலகத்தில் கழித்த காலமும் தொடர்ச்சியான வாசிப்பின்வழி என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளன. 2001ஆம் ஆண்டு வரை சல்லிகை நண்பர்களோடு இலக்கியச் செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கிய என்னை பொருள்சார் வாழ்வும், திருமணமும், அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளும் ஆட்கொண்டு நவீன இலக்கியத்திலிருந்து விலகியிருக்கச் செய்தன. ஆனால் வாசிப்பு மட்டும் தொடர்ந்தது.

    "பொருள்கள் அவை போலவே இருக்கின்றன. ஆனால் அவை மறைந்துள்ளன, ஒரு கவிஞனாக எனது கடமை அவற்றைக் கண்டுபிடிப்பதுதான்” என்பார் போர்ஹே. அந்தவகையில் ஏற்கனவே இருப்பனவற்றை எனக்கு வாய்க்கப்பெற்ற மொழியில் கண்டடைந்திருக்கிறேன். சுமார் இருபது வருடங்களாகக் கவிதையில் ஏற்பட்டு வந்திருக்கும் மாற்றங்களையும் வகைமைகளையும் கண்டு உண்மையில் மிரட்சியோடிருந்தபோதுதான் தமிழ் இந்து திசை நாளிதழில் 2017இல் "மழை வனம்" கவிதை வெளிவந்தது. காலையிலேயே கண்டராதித்தன் அழைத்து "கவிதை நல்லா இருக்கு பாரதி, தொடர்ந்து எழுதுங்க" என்றார். அது உற்சாகமூட்டுவதாகவும் எழுதுவதற்கான நம்பிக்கையளிப்பதாகவும் இருந்தது.

    இதுவரை காலம் என்னும் எந்திரம், வாழ்வின் அர்த்தங்களையும் அர்த்தமின்மைகளையும் அபத்தமான வகையில் அரைத்து வெளியேற்றிய சக்கைகளும் மென்று துப்பிய எச்சங்களுமே இந்தக் கவிதைகள். இவற்றுள் தனிமை, நிராதரவான நிலை, இயற்கையின் வசீகரம், பால்யத்தின் நினைவுகூர்தல், உடல் குறித்த வலி, நவீன வாழ்வின் தவிர்க்கவியலாத நெருக்கடிகள், குடிமைச் சமூகத்தின் தார்மீகக் கோபம் ஆகியனவற்றையோ அல்லது இவற்றுள் ஏதேனும் ஒன்றையோ ஏதேனும் ஒரு வாசகர் தரிசனமாகக் காண்பார் எனில் இச்செயல்பாடு அர்த்தம் உடையதாகும் எனக் கருதுகிறேன். இருபது வருடங்களுக்கு முன்னர் வெளியான கவிதைகளை நானே வைத்திராத நிலையில் அவற்றை வழங்கிய கே.ஸ்டாலின், ஆரம்ப காலத்திலேயே என் எழுத்துக்கு உற்சாகமூட்டிய காலபைரவன், கவிதைகளை ஒழுங்குசெய்து தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் தத்தமது தொகுப்புக்கு அளிக்கும் சிரத்தையோடு உதவிய அசதா, கண்டராதித்தன் ஆகியோருக்குப் பிரியமும் அன்பும்.

  • இந்த நூல் தபுதாராவின் புன்னகை, தாமரைபாரதி அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தபுதாராவின் புன்னகை, தாமரைபாரதி, Thamaraibharathi , Kavithaigal, கவிதைகள் , Thamaraibharathi Kavithaigal,தாமரைபாரதி கவிதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Thamaraibharathi books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (தாமரைபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உவர்மணல் சிறுநெருஞ்சி - Uvarmanal Sirunerunji

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


ஆரஞ்சு மணக்கும் பசி - Orange Manakkum Pasi

தேவதைகள் உலா வருகிற நேரம் - Devadhaigal Ula Varukira Neram

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் - Vazhvai Sethukum Oru Nimidam

முத்தமிழின் முகவரி

பூமியை வாசிக்கும் சிறுமி - Pumiyai Vasikkum Sirumi

அவன் எப்போது தாத்தாவானான் - Avan Eppodhu Thathavaanaan

மீண்டெழுதலின் ரகசியம்

நாம் இன்னும் சந்திக்கவே இல்லை

ஆற்றிலிருந்து தூரமில்லை - Aattrilirundhu Dhooramillai

கடல் பிரார்த்தனை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கல்குதிரை 31

கவிதை ஓவியம் சிற்பம் சினிமா

பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் - 2

டிஜிட்டல் நிறங்கள் (சினிமா கலர் க்ரேடிங் நூல்)

பட்டாம்பூச்சி விற்பவன்

குறுக்குத்துறை ரகசியங்கள் பாகம் 1

பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்

காவேரியின் பூர்வ காதை

ஒரு துளி நட்சத்திரம்

ஒற்றைப் பல் - Otrai Pal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91