பாகவதப் பாரதம் (ஆராய்ச்சிப் பதிப்பு)

பாகவதப் பாரதம் (ஆராய்ச்சிப் பதிப்பு)

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: பேரா. சிவ. விவேகானந்தன்
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN : 9788195288403
Pages : 1185
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.1200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ரகுநாதன் கட்டுரைகள் வைரமுத்து வரை தமிழ்த் திரைப்பாடல் வரலாறு (1931 முதல் 2020 வரை)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வியாசரால் எழுதப்பட்ட வடமொழிப் புராணமான ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணுவின் அவதாரக் கதைகளைக் கூறுவது. அதே வியாசர் எழுதிய இதிகாசமான மகாபாரதம், பாண்டவ-கௌரவர்களிடையிலான குருவம்ச பங்காளிச் சண்டையை மையமாகக் கொண்டது. இந்த இரண்டையும் இணைக்கும் ‘பாகவதப் பாரதம்’ என்ற காப்பியம் தமிழில் 1800-ஆம் ஆண்டுகளில் தமிழில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருப்பது வியப்புக்குரிய செய்தி.

    குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபல்பநாப நாடார் இந்நூலை எழுதி இருக்கிறார். அந்தச் சுவடி காலவோட்டத்தில் நைந்த நிலையில், சுமார் 50 ஆண்டுகள் கழிந்து ஏசுவடியான், ராமசாமி நாடார், குப்பையாண்டி போன்றோரின் முயற்சியால் மறுபிரதி செய்யப்பட்டது. அந்த ஓலைச்சுவடியை சுவடியியல் ஆராய்ச்சியாளரான சிவ.விவேகானந்தன் குமரி மாவட்டத்தில் கண்டதால் இந்நூல் உருவாகி இருக்கிறது.

    அந்த ஓலைச்சுவடியில், அம்மானைப் பாடல் வடிவில் பாகவதப் பாரதம் எழுதப்பட்டுள்ளது. விரைவில் அதனை சுவடியிலுள்ள செய்யுள் வடிவிலேயே நூலாக்கும் முயற்சியில் தில்லி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் சிவ.விவேகானந்தன் ஈடுபட்டு வருகிறார். அதற்கு முன்னதாக, தனது சுவடி ஆராய்ச்சிக்கு உறுதுணையாக, அதன் உரைநடை வடிவத்தை வெளியிட்டிருக்கிறார். அதுவே இந்நூல்.

    மகாபாரதத்தில் போர்க்களத்தில் எதிரிகளாய் நின்ற உற்றார், உறவினரைக் கண்டு மெய்சோர்ந்து நின்ற அர்ஜுனனைத் தெளிவுபடுத்த பகவத்கீதையை பரந்தாமனான கிருஷ்ணன் உபதேசிக்கிறான். அந்த இடத்தை சற்றே மாற்றி, பகவத்கீதைக்குப் பதிலாக, தனது அவதார மகிமைகளை அர்ஜுனனுக்கு கிருஷ்ணரே கூறுவதுபோல, பாகவதத்தின் கிருஷ்ணாவதாரம் தவிர்த்த ஒன்பது அவதாரங்களின் கதைகளைக் கூறுவதாக, பாகவதப் பாரதம் அமைந்திருக்கிறது.

    அதேபோல, வியாச பாரதத்தில் உள்ள சில நிகழ்வுகளும் இந்த ஓலைச்சுவடி காப்பியத்தில் மாற்றப்பட்டிருக்கின்றன. மகாபாரதக் கதையின் மூலம் மாறுபடாதபோதும், கதாசிரியரின் கற்பனைக்கு ஏற்றவாறு பல இடங்களில் மாற்றங்கள் காணப்படுகின்றன.

    பாரத நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், எந்த மொழியிலும் மகாபாரத காப்பியத்தின் செல்வாக்கு காணப்படுகிறது. அதுபோலவே குமரி மாவட்டத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மகாபாரதத்தின் தாக்கத்தால் உருவான ஓலைச்சுவடி பாகவதப் பாரதம். அதை தனது கடுமையான ஓராண்டு உழைப்பால் தமிழ்கூறும் நல்லுலகிற்கு இனிய வரவாகப் படைத்திருக்கிறார் இந்நூலாசிரியர். இவரது ஓலைச்சுவடி நூற்பதிப்புக்காகவும் காத்திருப்போம்.

  • இந்த நூல் பாகவதப் பாரதம் (ஆராய்ச்சிப் பதிப்பு), பேரா. சிவ. விவேகானந்தன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாகவதப் பாரதம் (ஆராய்ச்சிப் பதிப்பு), பேரா. சிவ. விவேகானந்தன், , Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , Aaivuk Katturaigal,பேரா. சிவ. விவேகானந்தன் ஆய்வுக் கட்டுரைகள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy books, buy Kavya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பேரா. சிவ. விவேகானந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குமரி நாட்டு வரலாற்று ஆவணங்கள் - Kumari Naatu Varalattru Aavanangal

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


குமரி கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்

வால்மீகியும் கம்பனும்

தீராநதி - இலக்கிய இதழாய்வு - Theeraanadhi Ilakkiya Idhazhaaivu

திருச்சிராப்பள்ளி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு - Tiruchirapalli Mavatta Naattupura Padalgal Oor Aayvu

விமர்சகர்கள் படைப்பாளர்கள்

ஜெர்மன் தமிழியல்

தாவோ தே ஜிங் - தாவோயிசத்தின் அடித்தளம்

ரகுநாதம் 1 இளங்கோவம் - Ragunaadham I Pudhumaippiththan

சமண முனிவர்கள் எழுதியது திருக்குறள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாட்டாளி - Paattaali

சென்னைச் சிறுகதைகள் - Chennai Sirukadhaigal

மாற்று மருந்தியல் - Maattru Marundhiyal

மா.ரா. களஞ்சியம் (தொகுதி 2) தமிழ் பண்பாட்டு வரலாறு

கரிசல்காட்டு ஜமீன்தார்கள்

ரசிகமணி ரசனைத் தடம் - Rasigamani Rasanaith thadam

பெண்மனச் சிக்கல்கள் - Penmana Sikkalgal

பக்தி இலக்கிய வரலாறு - Bakthi Ilakkiya Varalaru

இலக்கிய அலைகள் - Ilakkiya Alaigal

சந்ரு: நேர்காணல்களும் மனிதநேயம் - Sanru: Nerkaanalgalum Manidhaneyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91