-
உலகிலேயே திரைப்படத்தின் மூலமாக மக்களிடையே செல்வாக்கைப் பெற்று,
அதை அரசியல் சக்தியாக மாற்றி ஆட்சி புரிந்தவர்... எம்.ஜி.ஆரைப் போல எவரும்
இருக்க முடியாது. திரைப்படத் துறையில் அவரை ஒரு
சகாப்தம்! என்று சொல்லும் அதே நேரத்தில்; அரசியலிலும் அவர்... யாராலும்
யூகிக்க முடியாத அதிசய மனிதராகவே விளங்கினார். சினிமா மூலம் மக்களுக்கு
அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் கட்டங்கள் ஒரு
சரித்திரமாகவே அமைந்து விட்டிருக்கின்றன. எம்.ஜி.ஆருடன் கருத்து
மாறுபட்டவர்கள் கூட அவரது நல்லியல்புகளை உணர்வு வயத்துடன் நினைவு
கூர்கிறார்கள். மொத்தத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே மூன்றெழுத்தில்
மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் என்று
‘தெய்வத்தாய்’ படத்தில் எம்.ஜி.ஆர் பாடி நடித்ததை நிரூபிப்பதைப் போலத்தான்
அவரது வாழ்க்கையும் அமைந்துவிட்டது. இத்தனை சாதனை
மனிதராக விளங்கிய எம்.ஜி.ஆர். பிறந்தது 1917- ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம்
தேதி... ஆக, இந்த ஆண்டு 2017, ஜனவரி 17 ஆம் தேதியோடு அவருக்கு 100 ஆண்டுகள்
நிறைவு பெறுகின்றன. எம்ஜிஆரின் வாழ்நாள் சாதனைகளைப் போற்றும் வகையில்,
தமிழக அரசு, இந்த வருடம் முழுவதையும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்
கொண்டாட்டத்துக்கான ஆண்டாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அவரது
நினைவுகளைப் போற்றி பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்வுகள்
நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகமே எம்ஜிஆர் நினைவுகளில்
மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்; இன்றைய
இளையதலைமுறையினரும் கூட மறைந்த முதல்வரும், மக்கள் மனம் கவர்ந்த நடிகருமான
எம்ஜிஆரைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு; எம்ஜிஆரின் ஆரம்பகால சினிமா
மற்றும் அரசியல் பிரவேஷம், அதில் அவரடைந்த வெற்றிகள், எம்ஜிஆரின் தனிப்பட்ட
வாழ்க்கை அனுபவங்கள், அவரது அரிய புகைப்படங்கள், அவர் தமிழகத்துக்கு
அறிமுகப்படுத்திய நாடு போற்றும் திட்டங்கள், தங்கள் மொத்த வாழ்க்கையையும்
எம்ஜிஆரை ரசிப்பதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்களான அவரது அதி தீவிர
ரசிகர்களைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் உள்ளிட்ட பல விஷயங்களை எம்ஜிஆர் 100
-
இந்த நூல் எம்.ஜி.ஆர். 100, முனைவர் வை. சங்கரலிங்கனார் அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , எம்.ஜி.ஆர். 100, முனைவர் வை. சங்கரலிங்கனார், Munaivar Vaii.Sankaralinganar, Katuraigal, கட்டுரைகள் , Munaivar Vaii.Sankaralinganar Katuraigal,முனைவர் வை. சங்கரலிங்கனார் கட்டுரைகள்,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், M.J. Publication House, buy Munaivar Vaii.Sankaralinganar books, buy M.J. Publication House books online, buy tamil book.
|