யயாதி பாகம் - 1

யயாதி பாகம் - 1

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வி.ஸ. காண்டேகர் (Vi.Sha. Kaantegar)
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 352
பதிப்பு : 5
Published Year :
விலை : ரூ.265
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வெறும் கோயில் யயாதி பாகம் - 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வி. ச. காண்டேகர் அல்லது வி. எஸ். காண்டேகர் (Vishnu Sakharam Khandekar,  சனவரி 19, 1898 – செப்டம்பர் 2, 1976) மகாராட்டிரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர். ஞானபீட விருது பெற்ற முதல் மராட்டிய எழுத்தாளர். இவர் எழுதிய யயாதி எனும் நூல், 1960ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. இவரது புதினங்களில் பல கா. ஸ்ரீ. ஸ்ரீ தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.காண்டேகர் தன்னுடைய யயாதி நாவலுக்காக மகாராட்டிர மாநில விருது (1960), சாகித்ய அகாதமி விருது (1960), மற்றும் ஞானபீட விருது (1974) என மூன்று பெரிய விருதுகளை வென்றார்.


    மொழிபெயர்ப்பாளர் குறித்து: காஞ்சிபுரம் சிறீரங்காச்சாரியார் சிறிநிவாசாச்சாரியார் அல்லது பொதுவாக கா. ஸ்ரீ. ஸ்ரீ (திசம்பர் 15, 1913 - சூலை 28, 1999) தமிழக எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். பிரபல மராத்திய எழுத்தாளர் காண்டேகரின் பல புதினங்களையும், சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்தவர்.

    கா.ஸ்ரீ.ஸ்ரீ உத்திரப் பிரதேசத்தில் பிருந்தாவனம் என்ற ஊரில் 1913 ஆம் ஆண்டில் பிறந்தார். தந்தை ஸ்ரீரங்காச்சாரியார், தாய் ருக்குமணி அம்மாள் தமிழ்நாடு, காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை இந்தி, தெலுங்கு, வங்க மொழிகள் அறிந்தவர், கா. ஸ்ரீ. ஸ்ரீ தந்தையிடம் சிறு வயதிலேயே வடமொழி காவியங்களையும், நாடகங்களையும், வைணவ நூல்களையும் பயின்று வந்தார். தந்தையார் பம்பாயில் லட்சுமி வெங்கடேசுவர அச்சகத்தில் பணியாற்றிய போது கா. ஸ்ரீ. ஸ்ரீ. வீட்டிலேயே தமிழ் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். மராட்டிப் பள்ளியில் சேர்ந்து  மராட்டியும் ஆங்கிலமும் பயின்றார்.

    இள வயதிலேயே சுகவீனமுற்றதால், சென்னைக்கு வந்து தாயின் ஆதரவில் பச்சயப்பன் உயர்நிலப்பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். காஞ்சிபுரத்தில் ஒரு வேத பண்டிதரிடம் வேதக் கல்வி பயின்றார். பள்ளிப் படிப்பை முடித்தும் 1930 ஆம் ஆண்டு இலட்சுமி அம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

    சென்னையில் இந்திப் பிரச்சார சபை அச்சகத்தில் பணியாற்ற ஆரம்பித்தார். சில மாதங்களில் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். நாள் தோறும் அச்சுக் கூட வேலை முடிந்ததும், பெரம்பூரில் இந்தி வகுப்பு நடத்துவார்.

    1937ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகாத்மா காந்தி சென்னை வந்தார். அப்போது, உ. வே. சாமிநாதையர் எழுதிய தமிழ் வரவேற்புரையை இந்தி மொழியாக்கம் செய்தார். இதன் மூலம் கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகன்னாதனின் அறிமுகம் கிடைத்தது. இதை தொடர்ந்து கலைமகள் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார்.

    தமிழகக் காண்டேகர்: 
    1940களில் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மராத்திய எழுத்தாளர் காண்டேகரின் இலக்கிய ஆக்கங்களை மொழிபெயர்க்கத் தொடங்கினார். காண்டேகரின், எரிநட்சத்திரம், இருதுருவங்கள், மனோரஞ்சிதம், வெண்முகில், இருமனம், வெறுங்கோயில், சுகம் எங்கே, முதற்காதல், கருகிய மொட்டு, கிரௌஞ்சவதம், கண்ணீர், யயாதி, அமுதக்கொடி, ஆகிய 13 நாவல்களும் 150 சிறுகதைகளும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டன. தமிழகக் காண்டேகர் என்றே இவர் அழைக்கப்பட்டார். காண்டேகரின் பல நூல்கள் முதன் முதலாக தமிழில் வெளியான பிறகே பிற மொழிகளில் வெளியாயின.

    ஒருமுறை காண்டேகர் கூறினார், "என் தமிழ் மொழிபெயர்ப்பாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. நான் அவரை சந்தித்தது இல்லை. அவரும் என்னை தேடி வந்தது இல்லை. நான் மராட்டி மொழி எழுத்தாளன். ஆனால் எனக்கு தமிழ்நாட்டில்தான் அதிகமான வாசகர்கள் இருக்கிறார்கள். அதற்கு காரணம் மொழி பெயர்ப்பாளர் தான். அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்". அவரின் வாழ்நாளில் பெற்ற ஒரே பரிசு என கா.ஸ்ரீ.ஸ்ரீ. குறிப்பிட்டது 1965-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதலாண்டு விழாவில் பெற்ற மொழிபெயர்ப்பாளருக்காக  வாழ்நாள் சாதனையாளர் விருது. 

    ஏனைய மொழிபெயர்ப்புகள்:- 
    கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழ்ப் படைப்புகளையும் மராத்தி, இந்தி மொழிகளில் மொழிப்பெயர்த்துள்ளார். ஆர். சூடாமணியின் சிறுகதையை மராத்தியில் மொழிபெயர்த்தார். மாதவையா முதல் சிதம்பர சுப்பிரமணியன் வரையில் பன்னிரண்டு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள், பாரதியாரின் தராசு ஆகியவற்றை இந்தியில் மொழிபெயர்த்தார்.
  • இந்த நூல் யயாதி பாகம் - 1, வி.ஸ. காண்டேகர் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , யயாதி பாகம் - 1, வி.ஸ. காண்டேகர், Vi.Sha. Kaantegar, Kathaigal - Tamil story, கதைகள் , Vi.Sha. Kaantegar Kathaigal - Tamil story,வி.ஸ. காண்டேகர் கதைகள்,அல்லயன்ஸ், Alliance Publications, buy Vi.Sha. Kaantegar books, buy Alliance Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (வி.ஸ. காண்டேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காண்டேகர் கதைகள் பாகம் - 1

ஆஸ்திகன்

அரும்பு

இரு துருவங்கள்

அமுதக் கொடி

வெண்முகில்

க்ரௌஞ்சவதம்

யயாதி பாகம் - 2

சுகம் எங்கே?

புயலும் படகும்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மோகனப்புன்னகை

இரயில் புன்னகை - Rayil punnagai

சந்திர மோகன்

கண்ணாடிக் கோடரி (தேவதைக் கதைகள்)

எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும் வரலாற்றுக் கதைகள்

பூவிலங்கு

நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள்

குல்சாரி - Kulsaari

தமிழக நாட்டுப்புறக் கதைகள் - Tamilaga Natupurakathaigal

தைவான் நாடோடிக் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அபிராமி அந்தாதி விளக்கவுரை பாகம் 2 - Abirami anthaathi vilakkavurai paagam 2

பர்ண சாலை - Parna Salai

ஸ்திதப்பிரக்ஞன்

அன்னபூர்ணா

கலை உலக சக்ரவர்த்திகள் பாகம் - 1

காதல் கதைகள் - Kadhal Kathaigal

மஹாபாரதம் பேசுகிறது - பாகம் 1, 2

அபிராமி அந்தாதி விளக்கவுரை பாகம் 4 - Abirami anthaathi vilakkavurai paagam 4

முஸ்லிம் லீக் - ஆர்.எஸ்.எஸ். சந்திப்பு

ரங்கூன் பெரியப்பா - Rangoon Periyappa

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91