சாதுவான பாரம்பரியம்

சாதுவான பாரம்பரியம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா (Frans Eemil Sillanpaa)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820341
Pages : 208
பதிப்பு : 2
Published Year : 2018
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
முஹம்மத் நபி (ஸல்) மீனும் பண் பாடும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சீலன்பா, தாவர அறிவியலில் பெற்றிருந்த கல்விப் பயிற்சி, கிராமத்து மக்களையும் நிலத்துடன் அவர்கள் கொண்டிருந்த ஆழமான பிணைப்பையும் எழுத்தில் செழுமைப்படுத்த அவருக்கு உதவிற்று. 1860களின் ஃபின்லாந்தின் மிகப்பெரும் பஞ்சத்திலிருந்து தொடங்கும் நாவல், யூகா தொய்வோலா என்னும் ஏழைக் குத்தகைப் பண்ணை விவசாயியின் வாழ்க்கை வரலாற்றை ஃபின்லாந்தின் உள்நாட்டுப் போர் நிகழ்ந்த காலகட்டம்வரை (1917) பின்தொடர்கிறது. விவசாயம் செய்யும் அமைதியான குடியானவ மக்கள் ஆயுதமேந்திக் கிளர்ச்சியில் ஏன் ஈடுபட்டனர் என்பதை வாசகனிடம் சேர்ப்பிக்க விழைகிறார் ஆசிரியர். செஞ்சிவப்பு அணியின் சதியில் சிக்கிக்கொள்ளும் யூகா, செய்யாத கொலைக்காக மரண தண்டனைக்கு ஆளாகிறான். அவன் விதியை அடங்கிய தொனியிலும் ஆனால் பெரும் மனிதக் கருணையுடனும் பதிவுசெய்கிறார் சீலன்பா. நாவலின் கருப்பொருள் நிலம். நாவல் முழுக்க நிலக்காட்சியாய் வியாபித்திருப்பது வட ஃபின்லாந்துச் சூழல்தான். அடிப்படைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி மிகச் சுருக்கமாக கதை சொல்லிய அதிசயம் நாவலில் சாத்தியமாகியுள்ளது. அவலம், பரிவு, மென்மை என மனித உணர்வுகளை ஆழ்ந்த புரிதலுடன் நாவல் பேசுகிறது. நாவலின் உரைநடை கவிதையாய் உயர்கிறது. ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா (1888-1964) ஃபின்லாந்தின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படும் ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா எளிமையான பெற்றோருக்கு மகனாக இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் 1888இல் பிறந்தார். ஃபின்னியக் குடியானவனின் தாளமுடியாத வறுமையைச் சிறுவயதி லேயே அறிந்த சீலன்பா அதனைச் ‘சாதுவான பாரம்பரியம்’ என்ற தனது நாவலில் அழுத்தமாகச் சித்திரித்துள்ளார். இலக்கணப் பள்ளிக்கூடக் கல்விக்குப் பிறகு ஹெப்ரின்கி பல்கலைக்கழகத்தில் சென்று இயற்கை அறிவியல் கற்றார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ஊரான ஹமீயுக்கிரொ-விற்குத் திரும்பியபின் எழுதத் தொடங்கினார். தனது முதல் நாவல் வெளியிடப்பட்ட 1916இலிருந்து நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எனத் தொடர்ந்து எழுதினார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சீலன்பாவின் ஆக்கங்களில் ‘சாதுவான பாரம்பரியம்’ இரண்டாவதாகும். முதல் நாவல் ‘இளமையி லிருக்கும்போது தூங்கியவள்’. ‘ஃபின்லாந்துக் குடியானவர்கள் பற்றிய ஆழமான புரிதலுக்காகவும், அவர்கள் வாழ்வை, இயற்கையுடனான அவர்களின் உறவை நேர்த்தியான கலையாக வெளிப்படுத்தியமைக்காகவும்’ 1939இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஃப்ரான்ஸ் எமில் சீலன்பாவுக்கு வழங்கப்பட்டது. தனது 75ஆம் வயதில் 1964ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

  • இந்த நூல் சாதுவான பாரம்பரியம், ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சாதுவான பாரம்பரியம், ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா, Frans Eemil Sillanpaa, Novel, நாவல் , Frans Eemil Sillanpaa Novel,ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Frans Eemil Sillanpaa books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பாண்டிமாதேவி

அனுக்கன் வாயில்

அரசு கட்டில்

எனை கொவெல்லும் வெண்ணிலவே

உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்

நலம் காக்க வாங்க வாழலாம்

பனி, சொல் அல்லது தவம்

தமிழ் நாவல் உலகின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை

சுவடுகள் (பாகம் 1) திரைவிமர்சனத் தொகுப்பு

கேரளாந்தகன் இராஜராஜன்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஊனாகி உயிராகி காதலாகி - Unnaki Uyiraki Kaathalaki

அமரர் கல்கியின் கள்வனின் காதலி

மாவிலைத் தோரணங்கள் - Maavilai Thoranangal

இதயத்திலே அமர்வாய் - Idhayathil Amarvaai

வெள்ளாவி - Vellavi

மாலை நேரம் மழைத் தூறும் காலம்

ஒரு பூவின் நிழல்

Three Men in Sea (Three Men in Southeast Asia)

வாதி... (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

என் வாழ்வு உன்னோடு - En Vazhvu Unnoadu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண்

ரஸவாதி பௌலோ கொய்லோ - Rasavaathi

எரியாத நினைவுகள் - Eriyatha Ninaivukal

லதிஃபே ஹனிம் கெமால் பாஷாவின் மனைவி - Latife: Oru Vazhkai Saritham (History)

யாக்கையின் நீலம் - Yaakaiyin Neelam

நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்

சோஃபியின் உலகம் - Sophie's World

பண்ணையில் ஒரு மிருகம்

ஹார்மோனியம்

ஆட்டனத்தி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91