போயாக்

போயாக்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ம. நவீன் (M. Navin)
பதிப்பகம்: யாவரும் பதிப்பகம் (Yaavarum Publishers)
ISBN : 9789671607800
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
ஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் மின்மினிகளின் கனவுக்காலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • டாக்சி ஓட்டி பிடித்த மட்டமான சிகரெட் வாடை அவ்வதிகாலையின் சாந்தத்தைக் கெடுத்தது. சீபு விமான நிலையத்தில் இருந்து ‘காப்பிட்’ அழைத்து செல்வதாக ஏற்றியவரின் டாக்சி, முப்பது நிமிட நேர பயணத்திற்குப்பின் சாலை விளக்குகள் இல்லாத கம்பத்துப்பாதையில் குலுங்கியபடி நகர்ந்தது. ஓர் ஆற்றின் துறைமுகத்தில் என்னை இறக்கியப்பின் கிளம்பிவிட்டார். சட்டென குளிர் சூழ்ந்துகொண்டது. நான் ஆற்றங்கரையோரம் பள்ளிக்கூடத்தைத் தேடுவதைப் பார்த்த படகோட்டி ‘என்ன’ என்பதுபோல தலையை ஆட்ட கைகள் இரண்டாலும் கூம்புபோல இணைத்துக்காட்டி “ஸ்கோலா” எனக்கத்தினேன். ஏறும்படி சைகை காட்டினார். படகின் ஒரு முனை கயிற்றால் கரையில் இருந்த கட்டையில் பிணைக்கப்பட்டிருந்தது. மிதந்துகொண்டிருந்த படகில் அவர் அவ்வளவு நேரம் உறங்கியதற்கான தடயங்கள் முகத்தில் எஞ்சி இருந்தன.

    படகை அருகில் நகர்த்திவந்தபோது உள்ளே ஓர் ஓராங் ஊத்தான் இருந்தது. அது அவன் வளர்ப்புப் பிராணியாக எண்ணிக்கொண்டேன். அந்தச் சின்னப்படகின் முக்கால்வாசி இடங்களை நிரப்பி விஸ்தாரமாகப் படுத்திருந்தது. வேறுவழியில்லாமல் ஓராங் ஊத்தான் நிரப்பாத இடமாகப்பார்த்து தயக்கத்துடன் அமர்ந்துகொண்டேன். அவன் ஈபான் மொழியில் ஏதேதோ பேசியபடி வந்தான். நீரைக்காட்டி கைகள் இரண்டையும் அகலமாகத் திறந்து திறந்து மூடினான். ஒன்றும் புரியவில்லை. நான் பதில் கூறாமல் இருக்கவும் அவன் அமைதியானான். துடுப்பு ஆற்றில் முங்கி எழும்போது சங்கிலி கோவையாக நீர் ஒழுகும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அவ்வதிகாலை பனிமூட்டத்தைக் கிழித்துக்கொண்டு பயணிக்கும் படகைத்தவிர எதையும் பார்க்க முடியவில்லை. அவனிடம் ஏதும் கேட்டால் ஓராங் ஊத்தான் அருகில் வந்துவிடுமோ என பயமாக இருந்தது. மெல்லிய காற்றில் அசைந்துகொண்டிருந்த அதன் பழுப்பு நிற உரோமங்களுக்குள் விரலைவிட்டு சொறிவதும், ஏதாவது கிடைத்தால் வாயில் போட்டுக்கொள்வதுமாக இருந்தது. நான் ஒருவன் இருப்பதை அது சட்டை செய்யவே இல்லை.  காப்பிட்டில் இறக்கிவிட்டு அவன் காது துவார வளைவில் திணித்து வைத்திருந்த ஒருவெள்ளி தங்க நிற நாணயத்தை எடுத்துக் காட்டினான். முதலில் என்ன சொல்கிறான் எனப்புரியவில்லை. பின்னர் என்னிடமிருந்த ஒரு ரிங்கிட் தங்க நிற நாணயத்தைக் கொடுத்தபோது ஓராங் ஊத்தான் ஓடிவந்து பெற்றுக்கொண்டது. பணி உதவியாளரை வளர்ப்புப்பிராணி எனத் தவறாகக் கணித்திருந்தேன். படகோட்டி கையை உள் நோக்கிக் காட்டி போகச்சொன்னான். சேற்றில் காலணி பெரும்பாலும் புதைந்து நடக்கச் சிரமமாய் இருந்தது.

  • இந்த நூல் போயாக், ம. நவீன் அவர்களால் எழுதி யாவரும் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , போயாக், ம. நவீன், M. Navin, Sirukathaigal, சிறுகதைகள் , M. Navin Sirukathaigal,ம. நவீன் சிறுகதைகள்,யாவரும் பதிப்பகம், Yaavarum Publishers, buy M. Navin books, buy Yaavarum Publishers books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சேப்பியன்ஸ் (மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு)

உந்தன் அலாதி அன்பினில்...

விலங்குகள் பொய் சொல்வதில்லை (ஐந்து சிறுவர் நால்களின் தொகுப்பு)

விழிகளுக்கு விலங்கிடு...! - Vizhigalukku Vilangidu...!

நீ எந்தன் சொர்க்கம் பெண்ணே..! - Nee enthan sorkkam pennea...!

பிறைசூடும் வானங்கள்

நள்ளிரவு வானவில் - Nalliravu Vaanavil

நான் மனம் பேசுகிறேன்

புரிந்ததும் புரியாததும்

ஆத்தங்கரை மரமே...!

ஆசிரியரின் (ம. நவீன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொய்கைக்கரைப்பட்டி

சிகண்டி (நாவல்)

நாரின் மணம்

பேய்ச்சி

வகுப்பறையின் கடைசி நாற்காலி

தாரா

உச்சை

மகாராணியின் Checkmate

மீண்டு நிலைத்த நிழல்கள் (நேர்காணல்கள்)

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


கதை கதையாம் காரணமாம்

கலவை - Kalavai

அன்பின் இருப்பிடம் - Anbin Iruppidam

பிரதமன்

திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள்

ஜிங்லி சிறுகதைகள் - Jinglee Sirukathaigal

மனிதாபிமானம் - Manithapimaanam

முதல் குரல்

திசைகளின் நடுவே

காந்தியோடு பேசுவேன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மதுர விசாரம்?

நகரத்திற்கு வெளியே

ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் & பிற கதைகள்

நான் வடசென்னைக்காரன்

ஒளி வித்தகர்கள் (பாகம் 2)

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் (மின்னல் கதைகள்) - Lintche Logan w/o Mariyappan

மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள் - Miroshlav Holu Kavithaigal

மாயநதி

என் நினைவுக்கும் உன் மறதிக்கும்

பட்டர்-பி & பிற கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91