| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
| |
| |
ஆசிரியரின் (நந்திதா கிருஷ்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் : | |
| |
மற்ற கதைகள் வகை புத்தகங்கள் : | |
பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் : | |
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
|
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]()
|
மருதமலைக்கு மிக அருகில் வசித்த சமயத்தில் அடிக்கடி மருதமலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் மருதமலைக்கு செல்வது தொடர்பாக யாராவது சந்தேகம் கேட்டால் விபரமாக சொல்லிவிடுவேன். இதனால் மருதமலை பற்றி எல்லா விசயங்களும் எனக்கு தெரியும் என்ற நினைப்பில் இருந்தேன். சமீபத்தில் மருதமலை தொடர்பாக இணைய தளத்தில் செய்திகளை படித்துக் கொண்டிருந்தபோது, மருதமலை என பெயர் வரக் காரணம் என்ன என தெரிந்தபோது மிக ஆச்சரியமாக இருந்தது! மருத மரங்கள் அங்கிருப்பதால் மருதமலை என பெயர் வந்ததாம். பல முறை அங்கு நான் போயிருந்தாலும் ஒருதடவை கூட மருத மரங்களை பார்த்ததில்லை. இதன் மூலமாக நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் ஒரு இடத்திற்கு பல முறை சென்றிருந்தாலும், அந்த இடத்தைப் பற்றி முழுமையாக நம்மால் தெரிந்துகொள்ள இயலாது. எனவே ஒரு இடத்திற்கு செல்வதற்கு முன்பாக அந்த இடத்தைப் பற்றிய சிறப்புகளை கொஞ்சமாவது படித்துவிட்டு சென்றால் நம் பயணம் முழுமையடையும். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் மருதமலைக்கு செல்வதில் மட்டுமல்ல சென்னைக்கு செல்வதற்கும் பொருந்தும்.
புத்தக்தை படித்துக்கொண்டிருக்கும் போதே ஆசிரியர் நந்திதா கிருஷ்ணா நம்முடைய நினைவிற்கு நிஞ்சயம் வருவார். காரணம் இந்த புத்தகத்தில் அவர் எழுதியிருப்பது அவருடைய சொந்த கருத்துக்களோ, கற்பனையான விசயங்களோ அல்ல, என்ன உள்ளதோ அதை அப்படியே எழுதியிருக்கிறார். அதைத் தவிர அதிகப்படியாக வேறு எதையும் எழுதவில்லை. ஒரு ஆய்வறிக்கையை படிப்பதுபோல புள்ளி விபரங்களுடன் மிகத்தெளிவாக எழுதியிருக்கிறார். இவ்வளவு விசயங்களை உண்மையாக தெரிந்துகொள்ளாமல் எழுத இயலாதே! இதற்காக ஆசிரியர் ஒரு ஆராய்சியே செய்திருப்பார் என்று நினைத்துகொண்டு கடைசி பக்கத்தை பார்த்தால் உண்மையிலேயே ஆசிரியர் ஒரு ஆய்வாளரே என்ற செய்தி ஆச்சரியப்படுத்துகிறது. உதாரணமாக கூவம் நதி பற்றி எழுதும்போது அதையொட்டி அமைந்துள்ள சிவன் கோவில் ஆவணம் பற்றி ஆசிரியர் சொல்லி அதன் மூலமாக கூவம் நதியை பற்றி விளக்கியிருபதில் ஆசிரியரின் ஆய்வு பற்றி புரிகிறது. 25 ரூபாய் புத்தத்தில் அந்த தொகையைவீட அதிகமாகவே உழைப்பு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
சென்னை வெய்யிலில் கடுப்பாகிய ஒருவன் கண்களை மூடி அமர்ந்து, சென்னை எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்தால், அந்த கற்பனையில் என்னென்ன காட்சிகள் வருமோ அப்படித்தான் ஆரம்பத்தில் சென்னை இருந்ததாம்! சாலையின் இருபுறமும் மரங்கள் இருந்தனவாம், பலவிதமான தோப்புகள் இருந்தனவாம், நாம் எவ்வளவு அழிவுகளை ஏற்படுத்தி விட்டோம் என்பதை உணர முடிகிறது. வெரும் வியாபார சிந்தனை மட்டும் மேலோங்கி இருந்தால் ஒரு நகரம் என்ன நிலையை அடையும் என்பதை தெளிவாக உணர முடிகிறது.
புத்தகத்தில் இதுவரை நான் அறிந்திராத பல பொது அறிவு விசயங்களையும் ஆசிரியர் சம்பந்தப்பட்ட இடங்களில் எழுதியிருக்கிறார். அதை படிப்பதற்கு புதுமையாக இருந்தது. நமது மாநில மரம், மாநில மலர், மாநில விலங்கு, மாநில பறவை என பலவிதமான பொது அறிவு விசயங்களும் புத்தகத்தில் உண்டு.
சென்னையின் வியர்வையிலும், புழுதியிலும் அதன் வரலாறு மறைந்து விட்டது அல்லது அவற்றை மக்கள் மறந்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். சென்னை இவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்க நகரமா! என ஆச்சரியம் உண்டாகிறது. சென்னையில் உள்ள ஒவ்வொரு விசயத்திற்கும் ஒரு வரலாற்று அர்த்தம் இருக்கிறது என்பதை ஆசிரியர் ஆணித்தரமான விசயங்களால் விளக்கும் போது வியப்பு உண்டாகிறது.
ஏதோ ஒரு கோவிலுக்கு சென்றோம் சாமியை கும்பிட்டோம் என்ற சிந்தனைதான் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். ஆனால் ஒரு ஊரில் கோவில் எதற்கு இருக்கிறது அதனால் அந்த ஊருக்கு என்ன நன்மை என்பதை அறிவியல் பூர்வமாக ஆசிரியர் விளக்கியிருப்பது அருமையாக உள்ளது. பழங்கால மக்களின் அறிவை எண்ணி ஆச்சரியப்படாமல் இருக்க இயலாது. ஒரு கோவில், அதற்கு ஒரு குளம், அந்த குளம் நோக்கியபடி அந்த ஊரில் உள்ள வீடுகளின் மேற்கூறை அமைந்திருக்கும் இதன் மூலமாக மழை நீர் முழுவதும் அந்த குளத்தில் சேருகிறது. இதனால் அந்த ஊரில் உள்ள அனைத்து கிணறுகளிலும் தண்ணீர் அதிகரிக்கிறது. ஊரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது… என்று ஆசிரியர் சொல்லிக்கொண்டேபோக அந்த காலத்து மக்கள் அர்த்தமில்லாமல் எதுவும் செய்ய வில்லை என்று புரிகிறது. மேலும் நம்மால் நாகரீகம் என்ற பெயரில் கட்டிடங்களின் வடிவங்கள் மாற்றியமைக்கப்பட்டதும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் ஆசிரியர் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
வெரும் புலம்பலாக மட்டும் இல்லாமல் பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வையும் ஆசிரியர் சொல்லியிருப்பது புத்தகத்திற்கு மேலும் மதிப்பை அதிகரிக்கிறது. சரி எல்லாம் முடிந்து விட்டது இனி கவலைப்பட்டு எதுவும் ஆகப்போவதில்லை இனி என்ன செய்யலாம் என்ற நிலை வருகையில் கொஞ்ச நாள் பரபரப்பாக நம்மால் பேசப்பட்ட மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் அப்போதுதான் எதிர்கால பிரச்சனைகளை நம்மால் சமாளிக்க இயலும் என்று ஆசிரியர் சொல்லும் போது இது சென்னைக்கு மட்டுமல்ல அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் என்ற எண்ணம் தோண்ருகிறது. புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதிக்கு பொருத்தமான அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதன் மூலம் ஒவ்வொரு பகுதியில் சொல்லப்படும் விசயங்களை நம்மால் காட்சிப்படுத்தி பார்த்துக்கொள்ள முடிகிறது.
மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் இந்த புத்தகத்தில் மிக அதிகமான அறிய விசயங்கள் அடங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
நன்றி: http://bookreview-sai.blogspot.com/2010/03/blog-post.html
என்சைக்ளோபீடியா போல சென்னையைப் பற்றிய பல (ஆன்மிகத்) தகவல்களை கொட்டிச் செல்கிறது “மெட்ராஸ்-சென்னை” புத்தகம் (ப்ராடிகி பதிப்பு). புராதனகாலத்திய சென்னையின் படிமங்களைச் சொல்வதோடு கூவத்தின் இன்றைய நாற்றத்தையும் பதிவு செய்கிறது. இன்றைக்கு கடற்கரை ஓரமாக ஒரே பகுதியில் சுருங்கிவிட்ட இந்த பாவப்பட்ட மக்கள் தான் சென்னையின் பூர்வகுடிகளாம். மொத்த தமிழகத்திலிருந்தும் இடம்பெயர்ந்த தமிழக அகதிகளாலும், ஐ.டி துறையைத் நாடி, தேடி வந்த அகில இந்திய அகதிகளாலும் சென்னை ஆக்கிரமிக்கப்பட சென்னையும் வளர்ந்துகொண்டே வந்தது, கட்டிடங்களின் அளவிலும் பரப்பளவிலும், உயரமான பனை மரங்களை அழித்து உயரமான, மிக உயரமான கட்டிடங்களைக் கட்டிவிட்டோம்.
சென்னையில் மிகுந்திருந்த பனைமரங்கள் தான், தமிழ்நாட்டின் மாநில மரமாம், இந்த தகவலையும் இந்த புத்தகம் பதிவு செய்கிறது. ஆனால் இன்று சென்னை என்று சொல்லப்படும் வட்டாரத்தில் ஒரேயொரு பனைமரத்தையாவது பார்க்க முடியுமா? முடியுமென்று சொல்கிறது இந்த புத்தகம். கிண்டி சிறுவர் பூங்காவிலும், ஐஐடியிலும், தியோஸபிக்கல் சொசைட்டியிலும் பார்க்கலாமாம். இப்படியே போனால் சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகளில் வரும் குழந்தைகளுக்கு அதிசய பொருட்களாக பனைமரங்களை காட்ட வேண்டி வரலாம்.
சென்னையிலுள்ள பல ஊர்களின் பெயர்க் காரணங்களை இந்த புத்தகம் பதிவு செய்கிறது. மயில்களின் நடமாட்டத்துக்கு பெயர் பெற்ற, பார்வதி ஒரு பெண் மயிலாக மாறி சிவனை வழிபட்டாளாம் இதனால் அந்த இடத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் வந்ததாம். இப்படி பெயர் காரனத்தைச் சொல்லிவிட்டு மயிலாப்பூரின் பல புராதனச் சிறப்புகளைச் சொல்கிறது, அதாவது, கோயில் சிறப்புகளைச் சொல்கிறது. பேயாழ்வார் கினற்றடியில் கண்டெடுக்கப்பட்டதையும், மயிலாப்பூரின் கபாலீஸ்வரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் இடிக்கப்பட்டு சாந்தோம் தேவாலயமும் போர்த்துக்கீசிய குடியிருப்புகளும் அமைக்கப்பட்டதால், இப்போதைய கபாலீசுவரர் கோயில் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதையும் கூறுகிறது. அப்படியே அந்தக் கோவிலின் கட்டமைப்பையும் கூறுகிறது. இப்படியே திருவல்லிக்கேணிக்கு, பல்லாவரத்துக்கு, திருவாண்மியூருக்கு என கோவில்கொண்ட தளங்களை பாடுகிறது புத்தகம். திருநங்கையாழ்வாரின் பெயரைக் கொண்டு ஆழ்வார்பேட்டை எனப் பெயர்பெற்றது. நன்கு பழுத்த மாம்பழங்களைக் கொண்டிருந்ததால் மாம்பலம். மாமரங்களின் காடிருந்ததால் மாங்காடு. இப்படி பல ஊர்களின் பெயர்க்காரணங்களைக் கூறுகிறது. தொண்டை மண்டல அரசனையும், பல்லவ வம்ச அரசர்களையும் மற்ற ஏனைய அரசர்களையும் கூறுகிறது.
“…கி.பி இரண்டு, மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துரு, கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டு உள்ளது. அதனால் அப்பொழுதே எழுதத் தெரிந்திருக்கிறது…” “சற்றேறக்குறைய கி.பி 200ஆம் நூற்றான்டில் தமிழின் சிறந்த கவிஞர் திருவள்ளுவர் மயிலாப்பூரில் வசித்துவந்தார்.” இப்படி சில இடங்களில் வரலாற்றுப்பிழை தென்படுவதால் புத்தகத்தில் கூறப்படும் செய்திகளின் நம்பகத் தண்மை வெகுவாக குறைகிறது. ஆனால் புத்தகத்தில் பெரும்பாலும் ஆன்மிகச் செய்திகள் பரவிக்கிடப்பதால் வரலாற்று ஆதாரங்களையும், வரலாற்றுப் பிழைகலையும் கண்டுக்கொள்ளத் தேவையில்லை என்று மண்டைக்குள் மணியடிக்கிறது.
புத்தகத்தின் பெரும் பகுதி, சென்னையையும் சென்னையைச் சுற்றியுள்ள கோவில்கலையும் கோவில் சிறப்புகளையுமே சுற்றிச் சுற்றிச் சொல்கிறது. ஆனால், மற்ற பிற முக்கிய இடங்களைப் பற்றிச் சொல்ல ஒரு சில பக்கங்களே போதுமானதாக ஆசிரியருக்குப் பட்டுவிட்டது போலும். அதேபோல சென்னையின் நகர பெருக்கத்தாலும், மக்கள் நெருக்கத்தாலும் ஏற்பட்ட, ஏற்படும் பிரச்சினைகளையும் சொல்ல மூன்று பக்கங்களே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் இந்த பகுதி ஒரு எட்டாம் வகுப்பு மாணவன் எழுதிய கட்டுரையைப் போலத்தான் இருக்கிறது அந்தளவுக்கு கருத்து வறட்சி, எழுத்து வறட்சி. பல இடங்களில் மொழிபெயர்ப்பு பல்லிளிக்கிறது. பல இடங்களில் காலம் தடுமாறுகிறது. நிகழ்காலமும் எதிர்காலமும் கலந்துகட்டியடிக்கிறது. இதெல்லாம் வாசிப்போட்டத்தை தடுக்கிறது. ஒருவேளை இது குழந்தைகளுக்கான புத்தகம் என்பதால், இதிலெல்லாம் தீவிர கவனம் செலுத்தப்படவில்லையோ. குழந்தைகளுக்கான புத்தகத்தில் தான் இந்த தவறுகள் திருத்தப்பட வேண்டியது கட்டாயம்.
நன்றி : http://thamiziniyan.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5/