-
மார்கண்டேய புராணம் ஞான பட்சிகளின் கதையோடு தொடங்குகிறது. மகாபாரதக் கதை
முழுவதையும் வியாச பகவானிடம் கேட்டறிந்தார் ஜைமினி முனிவர். ஆனாலும்
அவருக்குச் சில சந்தேகங்கள் மீதமிருந்தன. அவற்றை வியாசரிடமே கேட்டுத்
தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணினார். ஆனால் அதற்கான வாய்ப்பு
கிடைக்கவில்லை. ஒரு முறை ஜைமினி முனிவர் மார்கண்டேய முனிவரின்
ஆசிரமத்திற்குச் சென்று 'மகரிஷியே! எனக்கு மகாபாரதத்தில் சில சந்தேகங்கள்
உள்ளன. ரகசியமாக உள்ள சில சாஸ்திர தத்துவங்களை தெரிந்து கொள்வதற்காக
உங்களிடம் வந்துள்ளேன். அவற்றை நீங்கள் தீர்க்க வேண்டும்' என்று கேட்டுக்
கொண்டு தன் சந்தேகங்களை வெளியிட்டார்.நித்திரை,
தூங்கி வழிதல், பயம், குரோதம், மோகம், உன்மாதம், விபத்து, குழப்பம்,
சந்தேகம், லோபம், அசூயை, மாத்சர்யம், கபடம், கற்பதில் ஆர்வமின்மை, ஆகம
தரிசனமின்றி இருப்பது, பயிற்சியின்றி இருப்பது போன்ற பதினெட்டு தோஷங்களும்
அற்றவரான மார்கண்டேயர், ஜைமினி கூறியதைக் கேட்டு இவ்விதம் பகர்ந்தார்.'ஜைமினி! உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள்
நியாயமானவையே! ஆனால் எனக்கு சந்தியாவந்தனம் முதலான விதிகளை நிறைவேற்றும்
நேரம் இது. உங்கள் வினாக்களுக்கு விரிவாக விளக்கமளிக்க கால அவகாசம் இல்லை.
நீங்கள் விந்திய மலைக்குச் சென்று அங்கு வசிக்கும் பிங்காக்ஷன், நிபோதன்,
சுபத்திரன், சுமுகன் என்ற நான்கு ஞான பட்சிகளைக் கேட்டால் அவை உங்கள்
ஐயங்களைத் தீர்க்கும்' என்றார்.வியப்படைந்த ஜைமினி, 'முனிவரே! பக்ஷிகள் பேசுமா? அவை மகா பண்டிதர்களைப் போல் தர்ம சந்தேகங்களைத் தீர்க்குமா?' என வினவினார்.
-
இந்த நூல் பறவை முனிவர்கள் சொன்ன ஞான உபதேசக் கதைகள் ஶ்ரீ மார்க்கண்டேய புராணம், என். சிவராமன் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பறவை முனிவர்கள் சொன்ன ஞான உபதேசக் கதைகள் ஶ்ரீ மார்க்கண்டேய புராணம், என். சிவராமன், N. Sivaraman, Aanmeegam, ஆன்மீகம் , N. Sivaraman Aanmeegam,என். சிவராமன் ஆன்மீகம்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy N. Sivaraman books, buy Sri Indu Publications books online, buy tamil book.
|