-
உலகத்தில் தோன்றியுள்ளவற்றில் மிகப் பெரிய, அற்புதமான உயிரினம் யானை! இந்திய மனங்களில் அதற்கு ஒரு தனியான இடம் என்றைக்கும் உண்டு. அதிலும் குறிப்பாக கேரளத்தில் அது பெற்றிருக்கும இடம் எல்லாவற்றையும்விட உயர்வானது.
மாப்ளா கலகத்தின்போது கலவரக்காரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டதில் ஆரம்பித்து கஜராஜனாக குருவாயூர் கோயிலில் மரித்த - மன்னிக்கவும், சரிந்த - நிமிடம் வரையிலான அதன் வாழ்க்கையை நுட்பமாகவும் அற்புதமாகவும் விவரித்திருக்கிறா நூலாசிரியர் உண்ணிகிருஷ்ணன் புதூர்.
குருவாயூர் கேசவன் வெறும் கோயில் யானை அல்ல. பெரும்பாலான கேரளீயருக்கு அது குருவாயூரப்பனின் இன்னோர் அவதாரமே! கேசவனும் யானைகளிலே உயர்வான ஒரு வாழ்க்கயை வாழ்ந்து மறைந்திருக்கிறது. குருவாயூர் கோயிலில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த கேசவனது வரலாறை நூலாசிரியர் உணர்வுபூர்வமாக விவரிக்கிறது.
வாழ்நாள் முழுவதும் வாழ்வாங்கு வாழ்ந்து சரிந்திருக்கும் குருவாயூர் கேசவனை மலையாள எழுத்தாளர் உண்ணிக் கிருஷ்ணன் புதூர் மிகவும் அற்புதமாக வார்த்தைகளில் உயிர்த்தெழச் செய்து, என்றென்றைக்குமாக அதை நித்தியப்படுத்தியிருக்கிறார். மலையாள வாசனை துளியும் கெடாமல் அதே நேரம் தமிழர்கள் சரளமாகப் படித்து உள்வாங்கிக் கொள்ளும் விதத்ததில் சிவன் மொழிபெயர்த்திருக்கிறார்.
-
This book Gajarajan Guruvayur Kesavan is written by Unnikrishnan puthur and published by Vikatan Prasuram.
இந்த நூல் கஜராஜன் குருவாயூர் கேசவன், உண்ணிகிருஷ்ணன் புதூர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gajarajan Guruvayur Kesavan, கஜராஜன் குருவாயூர் கேசவன், உண்ணிகிருஷ்ணன் புதூர், Unnikrishnan puthur, Aanmeegam, ஆன்மீகம் , Unnikrishnan puthur Aanmeegam,உண்ணிகிருஷ்ணன் புதூர் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Unnikrishnan puthur books, buy Vikatan Prasuram books online, buy Gajarajan Guruvayur Kesavan tamil book.
|