-
பிறமொழிக் கலப்பாலும் ஊடகங்களின் திட்டமிட்ட மொழிச் சிதைப்பினாலும், தமிழ்மொழி இன்று தன்னுடைய தனித் தன்மையை இழந்து கொச்சைப்படுத்தப்பட்டு கல்வி நிலையங்களில் சீரழிந்து காணப்படுகிறது. ஆங்கிலமோ பிறமொழிகளோ படித்தால்தான் வேலைவாய்ப்பு என்ற போலி நம்பிக்கையால் தமிழைத், தாய் மொழியைப் புறக்கணிக்கும் கூட்டம் இன்று பெருகி வருகிறது. இதனால் தமிழ்மொழியை ஒழுங்காகவும், சரியாகவும், திருத்தமாகவும் எழுதுகின்ற பேசுகின்ற நிலை இல்லை. பிறமொழிகளைக் கற்பிக்கின்ற, படிக்கின்ற அக்கறையும் ஆர்வமும் தமிழ் மொழியில் காண்பிக்கப் படுவதில்லை. இதனால் தமிழ்மொழியைப் பிழைபட பேசியும் எழுதியும் வரும் நிலை படித்தவர்களிடமும் மிகுதியாக உள்ளது.
தமிழ் மொழியின் கட்டுக் கோப்பாக இருக்கும் மொழியிலக்கணத்தில் யாரும் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் மொழி உச்சரிப்பில் தெளிவில்லை. காலவழு. ஒருமை மயக்கம், இடக் குழப்பம், ஒற்றுப்பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. ஊடகங்கள் இதற்குத் தீனிபோட்டு வளர்க்கின்றன. பிறமொழியில் தமிழ் மொழியை எழுதிப் படிக்கும் வியாபாரமும் வயிற்றுப் பிழைப்பும் மிகுதியாக நடக்கிறது. தமிழ் மக்களுக்காக நடைபெறும் ஆட்சிநிலையிலும் தமிழுக்குப் போதிய ஊக்கம் அளிக்கப்படாமல் உள்ளது.
-
This book inramizh ilakkanam is written by V. S. Panneerselvam and published by Naam Tamilar Pathippagam.
இந்த நூல் இன்றமிழ் இலக்கணம், வா.செ. பன்னீர்ச்செல்வம் அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, inramizh ilakkanam, இன்றமிழ் இலக்கணம், வா.செ. பன்னீர்ச்செல்வம், V. S. Panneerselvam, Tamilmozhi, தமிழ்மொழி , V. S. Panneerselvam Tamilmozhi,வா.செ. பன்னீர்ச்செல்வம் தமிழ்மொழி,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy V. S. Panneerselvam books, buy Naam Tamilar Pathippagam books online, buy inramizh ilakkanam tamil book.
|