-
அடிகள் அருள்ஞானி என்பதற்குப் பற்பல பகர்தல் வேண்டுமோ? 'திருஅருட்பிரகாச வள்ளலார்' என்று அவர் பெற்ற பேரொன்றும் போதாதோ?
பொதுவாக, நூல்செய்ய வல்லார் உரைசெய்ய வல்லாரா யிருப்பதில்லை. உரைசெய்ய வல்லார் நூல் செய்ய வல்லாரா யிருப்பதில்லை. செய்யுள் வல்லார் உரை நடை வல்லாரா யிருப்பதில்லை. உரைநடை வல்லார் செய்யுள் வல்லாரா யிருப்பதில்லை. இயல் வல்லார் இசை வல்லாரா யிருப்பதில்லை. இசைவல்லார் இயல் வல்லாரா யிருப்பதில்லை. இலக்கியம் வல்லார் இலக்கணம் வல்லாரா யிருப்பதில்லை. இலக்கணம் வல்லார் இலக்கியம் வல்லாரா யிருப்பதில்லை. சமயநூல் வல்லார் இலக்கண, இலக்கிய வல்லாரா யிருப்பதில்லை. இலக்கண இலக்கியம் வல்லாராயிருப்போர், சமயநூல் வல்லவராயிருப்போர் அவற்றைப் பாடஞ்ச் சொல்ல வல்லாரா யிருப்பதில்லை. எழுத்து வல்லார் பேச்சு வல்லாரா யிருப்பதில்லை. பேச்சு வல்லார் எழுத்து வல்லாரா யிருப்பதில்லை. அருளியல் வல்லார் உலகியல் வல்லாரா யிருப்பதில்லை. உலகியல் வல்லார் அருளியல் வல்லாரா யிருப்பதில்லை. இவ்வாறு ஒன்றில் வல்லார் பிரிதொன்றில் வல்லாரல்ல ராதலையே யாண்டும் காண்கிறோம். அன்றும் காண்கிறோம். இன்றும் காண்கிறோம். சென்ற நூற்றாண்டிலே - அடிகள் காலத்திலே - நூல் செய்தல், உரைசெய்தல், பாடஞ் சொல்லுதல், பதிப்பித்தல் என்னும் துறைகளுள் ஒவ்வொன்றில் வல்லாரே பலராக இருந்தனர்.
-
இந்த நூல் வள்ளலார் அருளிய திரு அருட்பா பூர்வ ஞான சிதம்பரப் பகுதி, ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வள்ளலார் அருளிய திரு அருட்பா பூர்வ ஞான சிதம்பரப் பகுதி, ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு, A. Balakrishna Pillai Pathippu, Aanmeegam, ஆன்மீகம் , A. Balakrishna Pillai Pathippu Aanmeegam,ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு ஆன்மீகம்,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy A. Balakrishna Pillai Pathippu books, buy Naam Tamilar Pathippagam books online, buy tamil book.
|