-
நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும்,
வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று
நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டும் ஆசிரியர், குழந்தைகளுக்கு பெயர்
வைத்தல், காது குத்துதல், முடிஎடுத்தல், பாட்டனாரின் பெயரைப்
பேரன்களுக்குச் சூட்டுதல், ஜல்லிக்கட்டுகளை நடத்துதல், லிங்கங்களை
ஆராதித்தல் போன்றவை உலகம் பூராவிலும், பரவியிருந்தன என்று
குறிப்பிடுகிறார். ஆன்மா இறைவனை அடையும் தனது நீண்ட நெடும் யாத்திரையில் பல
நிலையைக் கடக்க நேரிடும். பாபி, பாமரன், விவேகி, சாது, சிறந்த விவேகி,
முற்றின விவேகி அல்லது உலகைத் துறந்த துறவி, தெய்வ விவேகி, தெய்வ சாது,
மகான், தன்னையும் துறந்த துறவி, ஞானி என்று பல நிலைகள். இந்த நிலைகளிலும்
அவரவர் நடவடிக்கை, குணம், செயல், தன்மை, மனோபாவம், மனோநிலை ஆகியவற்றில்
ஏற்றத்தாழ்வான நிலைகள் இருப்பதையும் விவரிக்கிறார். பதிப்புரையில்
காண்கிறபடி, இந்நூல் ஸ்ரீ சிவன் சுவாமிகள் என்ற அருளாளரால்
இயற்றப்பட்டிருப்பதை அறிகிறோம். பண்டைய எகிப்து, சீன, கிரேக்க ஞானிகள்,
அவர்களது வரலாறுகள், அங்கு நிலவிய ஆன்மிக ஸ்தாபனங்கள் ஆகியவை பற்றியும்,
ஆங்காங்கே விரிவான விளக்கங்களைத் தருகிறார்.
-
This book Eanippadigalil Maanthargal is written by Siva and published by Narmadha Pathipagam.
இந்த நூல் ஏணிப்படிகளில் மாந்தர்கள், சிவா அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Eanippadigalil Maanthargal, ஏணிப்படிகளில் மாந்தர்கள், சிவா, Siva, Aanmeegam, ஆன்மீகம் , Siva Aanmeegam,சிவா ஆன்மீகம்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy Siva books, buy Narmadha Pathipagam books online, buy Eanippadigalil Maanthargal tamil book.
|
ஒரு ஜீவன் 84 ௦௦,௦௦௦ பிறவிகளை எடுக்கிறது.இதில் மனிதப் பிறவி அபூர்வமானது ‘அரிது அரிது மானிடராதல் அரிது’ என்பார் ஔவையார். அதிலும் பலமுறை பிறந்து இறக்கவேண்டிய நிலை. ‘எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர்ப்பிறவி அவதாரம்’ என்பார் அருணகிரிநாதர். இப்படி அரிய மனிதப்பிறவியை எய்தும் நாம், இந்த அழியும் உடலைக்கொண்டே மீண்டும் பிறவி வராமல் செய்து கொள்ள வேண்டும். இதுவே மானுடப் பிறப்பின் குறிக்கோள். ‘மற்றீண்டு வாரா நெறி” என்பார் வள்ளுவர். இதுவே நமது இந்திய மதங்கள் எல்லாம் போதிக்கும் உன்னத தத்துவம்./ரகசியம்.
இப்படி மனிதனாகப் பிறக்கும்போது, அது முதல் பிறவியாகவும் இருக்கலாம், இறுதிப்பிறவியாகவும் இருக்கலாம், இவற்றிற்கு இடையே எத்தனையோ பிறவிகள்! எனவே தான் நாம் காணும் இவ்வுலகில் மக்கள் ஒரே போன்று இருப்பதில்லை!
ஸ்ரீ சிவன் சுவாமிகள் என்று அறியப்பட்ட அருளாளர் மக்களை பாபி, பாமரன், ஸாது, விவேகி, உயர் விவேகி, தெய்வ விவேகி,மஹான், துறவி, ஞானி என்று பல நிலைகளில் இருப்பதாகக் கண்டார். ஒவ்வொரு நிலையிலும் உள்ளவர்களின் குணாதிசயங்கள், செயல்பாடுகள், மனோ நிலை ஆகியவற்றை 180 பிரிவுகளில் விளக்கியிருக்கிறார். இந்தியா, சைனா, புராதன எகிப்து, கிரேக்க, ரோமானிய நாகரீகங்களிலிருந்தும் , அண்மைக்காலத்திய சரித்திர பிரமுகர்களின் வாழ்க்கையிலிருந்தும் பல எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கியிருக்கிறார்.
மனிதன் எந்த நிலையிலிருந்தாலும் அதிலிருந்து மேம்பட முடியும். இதற்கு அடிகோலுவதே உண்மைக் கல்வியும் ஆன்மீகமும். ஒன்று தெய்வத்தை அறியவேண்டும், அல்லது தன்னை அறிய வேண்டும். இதுவே ஞானியின் உயர்ந்த நிலை. இதை அடைந்தால்தான் பிறவி அகலும். இதையே ‘பிறவாழி நீத்தல்” எனவும் ‘பிறவிப் பெருங்கடல் நீந்துதல்’ எனவும் வள்ளுவர் கூறுகிறார். கல்வியின் பயன் கடவுளைத் தொழுவதே என்றும் கூறுவார். இக்கருத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய இன் நூல் மிக அரிய கருத்துக்களை மிக எளிய நடையில் விளக்கும் உயர்ந்த நூலாகும். இதைப்படிப்பவரின் வாழ்க்கை மலரும், புத்தொளி பிறக்கும்; அவரவரும் ஆர்ப்பாட்டமில்லாத உண்மையான ஆன்மீகப் பாதையில் முன்னேறலாம். மிக உயர்ந்த பொக்கிஷம் இப்புத்தகம்.அவசியம் படிக்கவேண்டியது.
இதனை நர்மதா பதிப்பகம் மிக அழகிய முறையில் வெளியிட்டிருக்கிறது. அவர்களுக்கும், இதை ஆர்டர் செய்தவுடன் அனுப்பிவைத்த நூலுலகத்தினருக்கும் நமது நன்றி உரித்தாகும்.