-
சாய்பாபா, பக்தர்கள் புடைசூழ துவாரகைக்கு சென்றார். பாபாவின் பக்தர்கள் பலரும் துவாரகைக்கு வருவது அதுதான் முதல்முறை. துவாரகையின் வழிநெடுகிலும் மக்கள் கூடி நின்று பாபாவை தரிசனம் செய்தனர். கிருஷ்ணன் கோயில் வாசலில் சாய்பாபாவை தரிசிக்கப் பெருங்கூட்டம் கூடியிருந்தது. பாபா
வண்டியிலிருந்து இறங்கி, மக்கள் வெள்ளத்துக்கு இடையே மடமடவென நடந்து
கோயிலுக்குள் சென்றுவிட்டார். கூட வந்த பக்தர்களால் கோயிலுக்குள்ளேயே நுழைய
முடியவில்லை. உள்ளூர் பக்தர்கள் கூட்டம் பாபாவைப் பார்க்கும் ஆவலில் கூட
வந்தவர்களை இடித்துத் தள்ளியது. பாபா தரிசனம் முடிந்து வெளியே வந்து விட்டார். அடுத்ததாக மிதாபூர் என்ற ஊருக்குப் பயணம் துவங்கிற்று. புட்டபர்த்தியிலிருந்து பாபாவுடன் கூடவே வந்த பக்தர்களுக்குத்தான் பெரிய வருத்தம். அதாவது அவர்களால் இவ்வளவு தூரம் துவாரகை வந்தும் கிருஷ்ணனைப் பார்க்க முடியவில்லையே என்று ஏக்கம். பரபரப்பான அந்த நேரத்தில் போய், துவாரகா கிருஷ்ணனை நாங்கள் தரிசிக்கவில்லை, கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று பாபாவிடம் சொல்ல முடியுமா? சரி, எல்லாம் பாபாவின் செயல் என்று நினைத்தபடி அவர்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள். பாபாவின்
கார் மிதாபூரை நெருங்கிக் கொண்டிருந்தது. கூட இருந்த பக்தர் ஒருவரை
அழைத்தார் பாபா. “துவாரகைக்கு மீண்டும் சென்று அங்கே அருள்பாலிக்கும்
கிருஷ்ண விக்ரஹத்தை பார்க்க விரும்புகிறாயா?’ என்று கேட்டார்.
-
இந்த நூல் சத்யம் சிவம் சாய்பாபா, ப்ரியா கல்யாணராமன் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சத்யம் சிவம் சாய்பாபா, ப்ரியா கல்யாணராமன், Priya Kalyanaraman, Aanmeegam, ஆன்மீகம் , Priya Kalyanaraman Aanmeegam,ப்ரியா கல்யாணராமன் ஆன்மீகம்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Priya Kalyanaraman books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.
|