புத்தக கண்காட்சி
இந்திய வர்த்தக ஊக்குவிப்பு நிறுவனமும் (ஐடிபிஓ), இந்திய பதிப்பக சம்மேளனமும் இணைந்து நடத்தும் 23-ஆவது தில்லி புத்தகக் கண்காட்சி, பிரகதி மைதானத்தில் வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐடிபிஓ உயரதிகாரி கூறியதாவது: எழுத்து, புத்தகங்களின் வலிமையைப் பறைசாற்றும் பணியில் தில்லி புத்தகக் கண்காட்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் புத்தகக் கண்காட்சி மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அறிவுலக மேதைகள், நூலகர்கள், புத்தகப் பிரியர்கள் ஆகியோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், பல்வேறு துறைகள் தொடர்புடைய இந்திய புத்தகங்கள் இந்த புத்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
"இந்தியா வாசிக்கிறது; இந்தியா வளர்கிறது' என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழாண்டு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இதில், புத்தக விற்பனையாளர்-வாங்குவோர் சந்திப்பு, புத்தக வெளியீடு, புத்தக விவாதம், குழந்தைகளுக்கான இலக்கியச் செயல்பாடுகள், நூலாசிரியர்களுடனான சந்திப்பு ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சி செப்டம்பர் 3-ஆம் தேதி நிறைவு பெறுகிறது என்றார் அவர்.
Friday 25 Aug 2017 | செய்திகள், புத்தக கண்காட்சி |
வாசிப்பதற்கு எத்தனை நவீன வசதிகள் வந்தாலும் அச்சிட்ட தாளினாலான புத்தகங்கள் தனித்துவமானவை என்று திருப்பூர் சார் ஆட்சியர் ஜெ.ஷ்ரவண்குமார் பேசினார்.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் மற்றும் பின்னல் புத்தக அறக்கட்டளை சார்பில் புத்தகங்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம் எனும் தலைப்பில் புத்தகக் கண்காட்சி, திருப்பூர் பிரதான தொலைபேசி நிலையம் முன்பு வியாழக்கிழமை நடத்தப்பட்டது. மேலும் படிக்க...
Saturday 19 Aug 2017 | செய்திகள், புத்தக கண்காட்சி |
கிள்ளை : சிதம்பரத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனையில் ஏராளமானோர் ஆர்வத்துடன் புத்தகங்களை தேர்வு செய்தனர்.சிதம்பரத்தில் ஆண்டுதோறும் அபிநயா புக்ஸ் சார்பில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த மாதம் 18ம் தேதி கீழவீதி கோதண்டரான் திருமண மண்டபத்தில் துவங்கியது.கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் வெளியிட்ட 5000 தலைப்புகளிலான சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கவிதை, கட்டுரை, சுயசரிதை, வாழ்க்கை வரலாறு, தத்துவம், உளவியல், இலக்கணம், இலக்கியம், அறிவியியல், இயற்கை மருத்துவம், யோகா, சமையல் கலை, குழந்தைகளுக்கான கதைகள், ஆங்கிலம் மற்றும் இந்தி புத்தகங்களுடன், கல்வி தொடர்பான 'சிடி'க்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவை இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் ஆர்வமுடன் பங்கேற்று புத்தகங்களை தேர்வு செய்தனர். இந்த கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 23ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.
Saturday 12 Aug 2017 | செய்திகள், புத்தக கண்காட்சி |
ஈரோடில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியை பார்வையிட்ட திரளான மாணவ-மாணவிகள், புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
ஈரோடு வ.உ.சி. மைதானத்தில், 13-வது புத்தக கண்காட்சி, கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 230 அரங்குகள் அமைக்கப்பட்டு, சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க...
Wednesday 09 Aug 2017 | செய்திகள், புத்தக கண்காட்சி |
ஈரோடு வ.உ.சி மைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் தொடங்கிய புத்தக கண்காட்சி திருவிழாவில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
Saturday 05 Aug 2017 | செய்திகள், புத்தக கண்காட்சி |
சென்னை ராயப்பேட்டை புத்தக திருவிழா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆர்.வெங்கடேஷ் எழுதிய பரிபூரண அருளாளன் எனும் புத்தகத்தை எழுத்தாளர் பாலகுமாரன் வெளியிட திருவெற்றியூர் கணேசன் பெற்றுக்கொண்டார்.
Wednesday 26 Jul 2017 | புத்தக கண்காட்சி, புத்தக வெளியீடு (Book Release) |
கோவை:கோவை கொடிசியா, தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 'கோயம்புத்துார் புத்தக திருவிழா', கொடிசியா தொழிற்காட்சி வளாத்தில், நேற்று துவங்கியது. ஜூலை 31 வரை நடக்கும் கண்காட்சியில், ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்வு நடக்கிறது. கலாசார நிகழ்ச்சி களும் நடக்கிறது. அகில இந்திய புத்தக பதிப்பாளர் சங்க தலைவர் பல்தேவ்பாய் சர்மா, சிறப்பு விருந்தினராக பேசுகையில், ''புத்தகங்களை மதித்து போற்றிய யாரும், தோல்வியுற்றதாக இல்லை. வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும் புத்தகங்களை விற்பனை செய்ய, இதுபோன்ற கண்காட்சிகள், பெரிதும் உதவியாக இருக்கும்,'' என்றார்.
கொடிசியா முன்னாள் தலைவர் வரதராஜன் பேசுகையில், ''மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் மட்டுமே, தொழில்கள் நிலைக்க முடியும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதை அடிப்படையாக கொண்டு தான், புத்தக திருவிழா நடத்தப்படுகிறது,'' என்றார்.தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் காந்தி கண்ணதாசன் பேசுகையில்,''புத்தகங்கள் பற்றி மக்கள் அறிந்தால் மட்டுமே வாங்கி பயன் பெறுவர். ஆசிரியர்களும், மாணவர்களும் புத்தக கண்காட்சியை பார்த்தால், அவர்களுக்கு வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். புத்தகங்களை ஒரு முறை பார்த்தால், எப்போதாவது வாங்குவர் என்ற நம்பிக்கை, வெளியீட்டாளர்களுக்கும் ஏற்படும்,'' என்றார்.
கோவை புத்தக கண்காட்சி சார்பில், எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, விருது வழங்கப்பட்டது.கொடிசியா துணைத்தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.
Tuesday 25 Jul 2017 | செய்திகள், புத்தக கண்காட்சி |
பேராவூரணியில் தஞ்சை வேர்ட்ஸ் வொர்த் புத்தக நிலையம் சார்பில் 2 நாள் புத்தக கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
விழாவிற்கு பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் வை. சிதம்பரம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் மல்லிகை முத்துராமலிங்கம் கண்காட்சியை திறந்து வைத்தார்.
முன்னாள் பேரூராட்சித் தலைவர் என். அசோக்குமார் முதல் விற்பனையை தொடக்கி வைத்தார். கவிஞர் நந்தலாலாவின் காலத்தை வென்ற காவியத் தலைவர் காமராஜர் குறுந்தகடை வெங்கடேஸ்வரா கலை கல்லூரி முன்னாள் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம. ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சி. வேலு, அரு. நல்லதம்பி, எச். சம்சுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Monday 24 Jul 2017 | செய்திகள், புத்தக கண்காட்சி |
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தக திருவிழா தொடக்கம் ஜூலை 31 வரை நடக்கிறது சென்னை சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. இக்கண்காட்சி ஜூலை 31-ம் தேதி வரை நடக்க உள்ளது. தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோர் கலந்துகொண்டு புத்தகக் காட் சியை தொடங்கிவைத்தனர். விழாவில் அமைச்சர் ஜெயக் குமார் பேசும்போது, ‘‘சிறு வயது முதலே குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, பத்திரிகைகள் படிக்கும் பழக் கத்தை குழந்தைகளிடம் உரு வாக்க வேண்டும். இதனால், தமிழை தங்கு தடையின்றி வாசிக்க இயலும். அவர்களது அறிவு மேம்படும். சமுதாயத்தைப் பற்றிய விழிப் புணர்வு அவர்களிடம் அதிகரிக்கும்’’ என்றார். புத்தகத் திருவிழா குறித்து தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழும அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் ‘சென்னை புத்தகத் திருவிழா - ஜூலை 2017’ வரும் 31-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 250-க்கும் மேற்பட்ட அரங்கு கள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் கோடிக் கணக்கான புத்தகங்களைப் பார்வைக்கு வைத்துள்ளனர். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி, ஞாயிறுகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும். இக்கண்காட்சியைப் பார்வையிட அனுமதி இலவசம்.
கடந்த பல ஆண்டுகளாக அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்காத நிலையில், தமிழ் பதிப்புலகம் நலிந்த நிலையில் உள்ளது. இத்துறையின் வளர்ச்சி தற்போது வாசகர்களை மட்டுமே நம்பியுள்ளது. எனவே, இத்துறையை மேம்படுத்தவும், தமிழ் எழுத்தாளர்கள், பதிப்பாளர் கள், வாசகர்கள் இடையே நெருக்க மான தொடர்பை ஏற்படுத்தவும் சென்னை புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது.
தினமும் பரிசுகள்
புத்தகத் திருவிழாவில் தினமும் இலக்கிய நிகழ்வுகளாக கவிதை வாசித்தல், ராமானுஜர் 1000-வது ஆண்டு சிறப்பு கருத்தரங்கம், சினிமா 100-ஐ சிறப்பிக்கும் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு, மார்க்ஸ் 200-ஐ சிறப்பிக்கும் கருத்தரங்கம் ஆகியவை நடக்க உள்ளன. குலுக்கல் முறையில் தினமும் வாசகர்களுக்கு நூல்கள் பரிசு களாக வழங்கப்பட உள்ளன. சென்னை குறித்த பிரத்யேக புகைப் படக் கண்காட்சியும் நடக்க உள்ளது. வாசகர்கள் வாங்கும் புத்தகங் களுக்கு 10 சதவீத கழிவு அளிக்கப் படும். கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி புத்தகம் வாங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி, ஞாயிறுகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும்.
Saturday 22 Jul 2017 | செய்திகள், புத்தக கண்காட்சி |
பள்ளி மாணவ-மாணவியர் மத்தி யில் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் புத்தகத் திருவிழா வரும் 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடக்கிறது. சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதா னத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலை யில், பள்ளி மாணவர்களிடையே படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக் கும் வகையில் ஒய்எம்சிஏ மைதா னத்தில் ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி நேற்று நடத்தப் பட்டது. இதில் சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்திருந்த சுமார் 1500 மாணவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து நூல்களை வாசித்தனர்.
மேலும் படிக்க...
Friday 21 Jul 2017 | செய்திகள், புத்தக கண்காட்சி |