நூல்: கவனம் நமது வீடுகளில்,
ஆசிரியர்: மௌலவி நூஹ் மஹ்ழரி.
விலை: ரூபாய் 70/-
வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், சகோதர – சகோதரிகள், மாமனார் – மாமியார்… என்று ஒருவருக்கொருவர் பிரச்னைகளோடு அமைதியின்றி வாழும் நிலையே காணப்படுகிறது. இதற்கும் வழி கூறவே பல மதங்களும், மார்க்கங்களும் தோன்றின. அந்த வகையில் இஸ்லாம் மார்க்கமும் இதற்கு சிறப்பான தீர்வுகளைக் கூறுகிறது. அதாவது, எப்படி குடும்ப உறவுகளைப் பேசி வளர்க்க வேண்டும்; பாதுகாக்க வேண்டும் என்ற அறிவுரைகள் திருக்குர்ஆனிலும், ஹதீஸ் கிர்ந்தங்களிலும் கூறப்பட்டுள்ளன. அவற்றை இந்நூலாசிரியர் தேவையான இடங்களில்சுட்டிக்காட்டி மிக நேர்த்தியாக இந்நூலை உருவாக்கியுள்ளார். இதற்கு பல இறைத்தூதர்களின் (நபிமார்கள்) ஒரு சில முக்கிய வரலாற்றுச் சம்பவங்களையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றும் நாயகத்தின் தோழர்கள் சிலரின் வரலாற்றுச் சம்பவங்களையும் எடுத்துக்காட்டி விளக்குவது படிப்பதற்கு ஆர்வத்தை கூட்டுகிறது.
குடும்பத்தை, குடும்ப உறவுகளைச் சீரமைக்க நினைக்கும் ஒவ்வொருவரும் இந்நூலை படிப்பது நல்லது.
ஏனைய செய்திகள்