நூல்: உயர் இரத்த அழுத்தத்தினைக் கட்டுப்படுத்த 201 அருமையான ஆலோசனைக் குறிப்புகள்,
ஆசிரியர்: டாக்டர் பிமல் சாஜர், எம்.டி.
விலை: ரூபாய் 80/-
வெளியீடு: சுரதா பதிப்பகம்
சயோல் இதய மையத்தின் பிரதான மருத்துவரான இந்நூலாசிரியர், இதய நோய் உருவாகுவதற்கான காரணிகளை இந்நூலில் பட்டியலிட்டு, அதில் முக்கியமான உயர் இரத்த அழுத்தத்தைப் பற்றி மிக விரிவாக விளக்கி, அதைத் கட்டுப்படுத்த 201 அருமையான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
அதாவது உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன, அது உருவாக்க் காரணங்கள், அது ஏற்படுத்தும் தீய விளைவுகள் ஆகியவற்றை விளக்கியுள்ளார். தவிர, மருந்து மாத்திரைகளின் உதவியின்றி அதைக் கட்டுப்படுத்தும் வழி முறைகளைக் கூறி, இதற்கு அடிப்படை காரணமான ‘மன அழுத்தம் மற்றும் டென்ஷனைக் குறைப்பதற்கான ஆலோசனைகளையும் விளக்கியுள்ளார்.
ஏனைய செய்திகள்