நூல்: மனச் சோர்வு நீக்கும் நடைப் பயிற்சி.
ஆசிரியர்: வெங்கட்ராவ் பாலு.
விலை: ரூபாய் 50 /-
வெளியீடு: நர்மதா பதிப்பகம்.
உடல் உழைப்பு இன்மையாலும், முறையற்ற உணவுகளாலும் உடலுக்குள் உருவாகும் பல்வேறு கழிவுகள், உரிய முறையில் வெளியேற்றப்படாமல் உடலுக்குள் தங்கி விடுகின்றன. அது நாளடைவல் பல்வேறு வியாதிகளாக வெளிப்பட்டு, நம் உயிருக்கே உலை வைத்து விடுகிறது. அதிலிருந்து தப்பிக்க யோகா, தியானம், விளையாட்டு, ஜிம், நடைப்பயிற்சி… என்று பல்வேறு வழிகள் உருவாகியுள்ளன. அதில் அனைத்து வயதினருக்கும் ஏற்றது நடைப்பயிற்சி. நல்ல புத்துணர்வையும், ஆரோக்கியத்தையும் தரும் இந்த நடைப்பயிற்சியால் உண்டாகும் பல்வேறு நன்மைகளையும், அதனால் என்னென்ன வியாதிகள், உடற்கூறு பிரச்னைகள் தீர்வு பெறுகின்றன என்பதையும் இந்நூல் விளக்குகிறது. தவிர, நடைப் பயிற்சி என்றால் என்ன, அதை எப்படி மேற்கொள்வது, அதற்கான முன்னேற்பாடுகள், நடைப்பயிற்சியின்போது கடைப்படிக்க வேண்டிய விஷயங்கள், நடைப் பயற்சியின்போது நம் உடலுக்குள் ஏற்படும் ரசாயன மற்றும் உடற்கூறுகள், அதனால் குணமாகும் வியாதிகள், எந்தெந்த வயதினர் மற்றும் பெண்மணிகள் எந்த வகையிலான நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.. என்று பல்வேறு தகவல்கள், உரிய புகைப்படங்களுடன் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளன.
ஏனைய செய்திகள்